Published:Updated:

`அவருக்கு ஆதரவான பதிவுகளுக்கும் செக்!'- துப்பாக்கிச்சூடு நடத்திய சிறுவனின் கணக்கை நீக்கிய ஃபேஸ்புக்

Jamia Firing
Jamia Firing ( The News Learn )

இனி வரும் காலங்களில் இது போன்று நடக்காமல் இருக்க இந்தியச் சட்ட அமலாக்கப் பிரிவுடன் கலந்தாலோசித்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.

ஜாமியா பல்கலைக்கழகத்தில் குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராகப் போராடிய மாணவர்களை நோக்கி நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டவர் ஒரு சிறுவர் என, காவல்துறையினர் கண்டறிந்துள்ளனர். அவரது ஃபேஸ்புக் (Facebook) கணக்கை முடக்கியுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. நேற்று துப்பாக்கிச்சூட்டில் ஈடுபடுவதற்கு முன் அவர் தனது ஃபேஸ்புக் கணக்கிலிருந்து அங்கு நடப்பவற்றை லைவ் செய்துள்ளார். நியூசிலாந்தில் கிரிஸ்ட் சர்ச் துப்பாக்கிச் சூடு நடந்தபோதும், துப்பாக்கிச்சூட்டைச் செய்தவர்களும் ஃபேஸ்புக்கில் அந்தச் சம்பவத்தை லைவ் செய்திருந்தனர். இது போன்ற வன்முறைச் சம்பவங்களில் ஈடுபடுவோர் ஃபேஸ்புக்கைத் தவறாகப் பயன்படுத்தி வருகின்றனர்.

Facebook
Facebook

இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் பொருட்டு ஃபேஸ்புக் லைவ் செய்வதற்கு கட்டுப்பாடுகளைக் கொண்டுவர அந்நிறுவனம் ஆலோசித்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக நேற்று துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட நபரின் கணக்கை ஃபேஸ்புக் தளத்திலிருந்து நீக்கியுள்ளது.

`இதோ உங்கள் சுதந்திரம்..!' - மாணவர்கள் போராட்டத்தில் துப்பாக்கிச்சூடு; வேடிக்கை பார்த்த போலீஸ்?

"வன்முறையில் ஈடுபடுபவர்களுக்கு ஃபேஸ்புக்கில் இடம் இல்லை. இது போன்ற சம்பவங்கள் தொடர்பான பதிவுகளை நீக்கியுள்ளோம். இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட நபரையும் அவரை ஆதரித்து வரும் கருத்துகளையும் நீக்கி வருகிறோம்" என ஃபேஸ்புக் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

firing
firing
YThisNews

மேலும், சம்பவத்தில் ஈடுபட்ட நபர், துப்பாக்கிச்சூடு நடத்துவதற்கு முன்புதான் ஃபேஸ்புக் லைவ் செய்திருக்கிறார். அவர் இப்படி ஒரு சம்பவத்தில் ஈடுபடப்போகிறார் எனத் தெரிய அப்போது வாய்ப்பில்லை என அந்நிறுவனத் தரப்பு நியாயத்தைத் தெரிவித்துள்ளது. இனி வரும் காலங்களில் இது போன்று நடக்காமல் இருக்க இந்தியச் சட்ட அமலாக்கப் பிரிவுடன் கலந்தாலோசித்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.

அடுத்த கட்டுரைக்கு