Published:Updated:

ஃபேஸ்புக்கின் அதிகாரபூர்வ பக்கமே ஹேக் செய்யப்பட்டதா? - ஓர் இணையதள சுவாரஸ்யம்

ஃபேஸ்புக் | Facebook
ஃபேஸ்புக் | Facebook

"ஃபேஸ்புக்கையும்கூட யாராலும் ஹேக் செய்ய முடியும். என்ன, ஃபேஸ்புக்கின் பாதுகாப்பு ட்விட்டரைவிட கொஞ்சம் மேம்பட்டதாக இருக்கிறது" எனத் தங்கள் அதிகாரபூர்வ பக்கத்திலிருந்து பதிவிட்டுள்ளனர் ஹேக்கர்கள்.

சமூக வலைதளங்களில் இதற்கு முன் பயனர்களுடைய கணக்குகள் நிறைய ஹேக் செய்யப்பட்டுள்ளன. இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறும்போது 'இனி இதுபோல் நடக்காத வகையில் செயலியை மேம்படுத்துகிறோம்' எனச் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் தெரிவிக்கும். ஆனால், அந்த நிறுவனங்களின் கணக்கே ஹேக் செய்யப்பட்டால் எப்படி இருக்கும். அப்படிப்பட்ட சம்பவம்தான் தற்போது நிகழ்ந்துள்ளது.

facebook
facebook

கடந்த வெள்ளியன்று 'Our Mine' என்ற பெயரில் வந்த ஹேக்கர்கள், ஃபேஸ்புக்கின் (Facebook) அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கம் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கம் ஆகியவற்றை ஹேக் செய்தனர். இந்தச் சம்பவத்தைப் பற்றி, "பேஸ்புக்கையும் கூட யாராலும் ஹேக் செய்ய முடியும். என்ன, ஃபேஸ்புக்கின் பாதுகாப்பு ட்விட்டரைவிட கொஞ்சம் மேம்பட்டதாக இருக்கிறது" எனத் தங்கள் அதிகாரபூர்வ பக்கத்திலிருந்து பதிவிட்டுள்ளனர் ஹேக்கர்கள்.

வாட்ஸ்அப் vs டெலிகிராம்: மோதும் மெசேஞ்சர்கள்... என்ன நடக்கிறது?

ட்விட்டரில் ஃபேஸ்புக்கின் கணக்கு ஹேக் செய்யப்பட்டதை அந்நிறுவனமே ஒப்புக்கொண்டுள்ளது. அதே போல் ஃபேஸ்புக் நிறுவனமும் தங்கள் தளங்களில் தங்களது அதிகாரபூர்வ பக்கங்கள் ஹேக் செய்யப்பட்டதை ஒப்புக்கொண்டுள்ளது. ஆனால், அந்தக் கணக்குகளை விரைவிலேயே மீண்டும் கைப்பற்றிவிட்டோம் எனவும் அந்நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

hack
hack
piqsels.com

'Our Mine' என்ற இந்த ஹேக்கர்கள்தான் இதற்கு முன் பல ESPN, NFL முதலிய பிரபலமான தளங்கள் மற்றும் கூகுள் தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சை ட்விட்டரின் துணை நிறுவனர் ஜாக் டோர்ஸி ஆகியோரது சமூக வலைதள கணக்குகளையும் ஹேக் செய்துள்ளனர். ஆனால், மற்ற ஹேக்கர்களைப்போல் எந்த விதமான தகவல் திருட்டிலும் இவர்கள் ஈடுபடுவது இல்லை. அதற்கு மாறாக இது போன்ற நிறுவனங்களின் தளங்களில் உள்ள பாதுகாப்பு குறைபாடுகளைச் சுட்டிக்காட்டவே இது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர் என அந்த ஹேக்கர்கள் குழு இதற்கு முன் நடந்த ஹேக்கிங்கின்போது கூறியது குறிப்பிடத்தக்கது.

அடுத்த கட்டுரைக்கு