Published:Updated:

`புதிய சிம் கார்டுக்கு ஃபேசியல் ரெகெக்னிஷன் அவசியம்!' -அச்சுறுத்தும் புதிய சீனச் சட்டம்

ஃபேசியல் ரெகெக்னிஷன் அவசியம்!-சீனா
ஃபேசியல் ரெகெக்னிஷன் அவசியம்!-சீனா

இதை வைத்து இன்னும் தெளிவாக ஒவ்வொரு நபரையும் அடையாளம் கண்டு கண்காணிக்கவுள்ளதாம் சீனா!

இனி சீனாவில் உள்ள மக்கள் புது மொபைல் இணைப்பைப் பெறுவதற்கு ஃபேசியல் ரெகெக்னிஷனை கட்டாயமாக்கியுள்ளது அந்நாட்டு அரசு. இந்த மாதம் முதல் இந்தப் புதிய நடைமுறை அமலுக்கு வந்துள்ளது.

ஃபேசியல் ரெகெக்னிஷன் | Facial Recognition
ஃபேசியல் ரெகெக்னிஷன் | Facial Recognition
Flickr

கடந்த செப்டம்பர் மாதம் சீனாவின் தொழில் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு வெளியிட்ட அறிவிப்பில் ``மின்வெளியில் சீன மக்களின் உரிமையை நல்ல முறையில் பாதுகாப்போம். செயற்கை நுண்ணறிவு மற்றும் இதர தொழில்நுட்ப யுக்திகளைப் பயன்படுத்தி மக்கள் புது சிம் கார்டு வாங்கும்போது அவர்களின் முகங்களையும் இதர அடையாள ஆவணங்களோடு பொருத்த வேண்டும்" என்றது.

Vikatan

சீனாவின் இந்தப் புதிய கொள்கையின் நோக்கமானது இணையத்தை யாருக்கும் தெரியாமல் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவதே என்கிறார்கள். தற்போது நடைமுறையில் உள்ள விதிகளின்படி புது மொபைல் எண்ணைப் பெற விரும்பும் வாடிக்கையாளர்கள், தங்களது தேசிய அடையாள அட்டையைக் காண்பித்து புகைப்படம் எடுத்துக்கொண்டால் போதும். ஆனால் இனிமேல் முகத்தையும் ஸ்கேன் செய்தால்தான் மொபைல் இணைப்பைப் பெறமுடியும்.

மக்களைக் கண்காணிக்கும் சீனா
மக்களைக் கண்காணிக்கும் சீனா
South China Morning Post

சீனாவில் ஃபேசியல் ரெகெக்னிஷன் தொழில்நுட்பமானது பணம் செலுத்தவும் இதர சேவைகளைப் பெறுவதற்கும் ஏற்கெனவே பயன்படுத்தப்பட்டு வருகிறது. பெரும்பாலான வாடிக்கையாளர்கள் இந்தப் புதிய தொழில்நுட்பத்தை ஏற்றுக்கொண்டாலும், இதிலும் சில குறைகள் இருக்கின்றன. கடந்த மாதம் செஜியாங்க் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் இணை ஆசிரியர் ஜூவோ பிங்க், கிழக்கு சீனாவில் உள்ள ஹாங்க்சாவ் சஃபாரி பூங்காவின் நிர்வாகத்தின் மீது வழக்கு தொடுத்தார். இதற்கு முக்கிய காரணம் அந்தப் பூங்காவானது மாதாந்திர டிக்கெட் வைத்திருக்கும் வாடிக்கையாளர்களிடமும் ஏற்கெனவே நடைமுறையிலிருந்த ஃபிங்கர் பிரின்ட் பரிசோதனைக்குப் பதிலாக ஃபேசியல் ரெகெக்னிஷனை கட்டாயமாக்கியதே. இது சீனாவில் நடைமுறையில் இருக்கும் ஒரு தொழில்நுட்பத்திற்கு எதிராக நீதிமன்றத்தில் தொடங்கப்பட்ட முதல் வழக்கு என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கு ஹாங்க்சாவில் உள்ள ஒரு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளதாகத் தெரிவிக்கின்றன சீன ஊடகங்கள்.

 ‘சீனா நட்பு நாடுதான், இருந்தாலும்...’  - 99 ஆண்டுகள் ஹம்பந்தொட்டா ஒப்பந்தத்தை ரத்துசெய்த இலங்கை

இந்த ஃபேசியல் ரெகெக்னிஷன் டேட்டாவை வைத்து மக்களை முடிந்தளவு இன்னும் தெளிவாக மக்களைக் கண்காணிக்க நினைக்கிறது எனச் சீன அரசு மேல் பல புகார்கள் எழுந்தாலும் ஃபேசியல் ரெகெக்னிஷ திட்டத்தை இணையக் கண்காணிப்புக்குப் பயன்படுத்துவதில் முனைப்புடன் இருக்கிறது சீன அரசு. இந்த நடைமுறை ஏற்கெனவே சின்ஜியாங்க் பகுதியிலும் நடைமுறையில் உள்ளது. இந்தப் பகுதியில்தான் சீனா, மதம் மற்றும் இன அடிப்படையிலான சிறுபான்மையினரை 'மறுவாழ்வு முகாம்' என்ற பெயரில் கைது செய்து தஞ்சம் வைத்துள்ளது .

`90 நிமிடங்கள்; விடுமுறையில் 3 மணிநேரம்!' - வீடியோ கேம்களுக்கு சீனா கட்டுப்பாடு

சீனாவில் ஏற்கெனவே இணையம் மற்றும் சமூக வலைதளங்கள் பயன்படுத்துவதில் பல கட்டுப்பாடுகள் இருக்கின்றன. இதில் தற்போது புதிதாக மொபைல் இணைப்பை பெறுவதிலும் பல்வேறு நடைமுறைகளை கொண்டுவருவது மேலும் மக்களை ஒடுக்கவே செய்யும்.

அடுத்த கட்டுரைக்கு