Published:Updated:

வாட்ஸ்அப்பில் ஃபிங்கர்ப்ரின்ட் அன்லாக் வசதி... பயன்படுத்துவது எப்படி?

பீட்டா டெஸ்ட்டர்கள் இந்த வசதியைப் பயன்படுத்தலாம்

ஃபிங்கர்ப்ரின்ட் அன்லாக்
ஃபிங்கர்ப்ரின்ட் அன்லாக்

ஆண்ட்ராய்டில் வாட்ஸ்அப் ஆப்பை பயன்படுத்துபவர்களுக்கு அனைவருக்கும் விரைவில் ஃபிங்கர்ப்ரின்ட் அன்லாக் வசதி கொடுக்கப்படவுள்ளது. நீண்ட காலமாக இந்த வசதியை வாட்ஸ்அப் பயனாளர்கள் எதிர்பார்த்து வந்தனர்.

வாட்ஸ்அப்
வாட்ஸ்அப்

கடந்த வருடமே இந்த வசதி கிடைத்து விடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் ஐஓஎஸ் பயனாளர்களுக்கு இந்த வசதி கொடுக்கப்பட்டது. தற்போது ஆண்ட்ராய்டில் பீட்டா பயனாளர்களுக்கு மட்டும் பரிசோதனை வசதியாக ஃபிங்கர்ப்ரின்ட் அன்லாக் வசதி தரப்பட்டுள்ளது.

இந்த வசதியை இப்போது பீட்டா டெஸ்டர்கள் பயன்படுத்திப் பார்க்கலாம். இறுதியாக வெளியிடப்பட்டுள்ள அப்டேட்டான 2.19.221 வெர்ஷனை முதலில் டவுன்லோடு செய்துகொள்ள வேண்டும். அதன் பின்னர் Settings > Account > Privacy என்ற பகுதிக்குச் சென்றால் அங்கே புதிதாக Fingerprint lock என்ற பகுதி சேர்க்கப்பட்டுள்ளதைப் பார்க்க முடியும்.

அதில் சென்று ஃபிங்கர்ப்ரின்ட் அன்லாக் வசதியை ஆக்டிவேட் செய்து கொள்ளலாம். உடனடியாகவோ, ஒரு நிமிடம் கழித்தோ அல்லது 30 நிமிடம் கழித்தோ லாக் ஆகும் வகையில் செட் செய்து கொள்ளலாம். இதை ஆக்டிவேட் செய்த பின்னர் வாட்ஸ்அப்பை திறக்க ஃபிங்கர்ப்ரின்ட் தேவைப்படும். இதன் மூலமாக தேர்டு பார்ட்டி ஆப் லாக்குக்கான தேவையும் குறையும் வாட்ஸ்அப்பின் பாதுகாப்பும் அதிகரிக்கும்.