Published:Updated:

`எதிர்காலத் திட்டங்கள் மீது கவனம் செலுத்துங்கள்!’ - விஞ்ஞானிகள் மத்தியில் இஸ்ரோ சிவன் உரை

கலிலுல்லா.ச

இஸ்ரோ தலைவர் சிவன் குறித்தும், விஞ்ஞானிகளின் முயற்சி குறித்தும் பலரும் பாராட்டுகளைத் தெரிவித்தனர்.

isro sivan
isro sivan

`சந்திராயன்-2’ நாடே மிகவும் எதிர்பார்த்த விண்கலம். பொதுமக்கள் மத்தியிலும்கூட, `சந்திராயன்-2’ குறித்து தெரிந்துகொள்வதற்கான ஆர்வம் இருந்தது. நாடே அதன் வெற்றியை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்தது. காரணம், வெளிநாடுகளுக்கு இணையான சாதனையை இந்தியா, அதுவும் ஒரு தமிழ்நாட்டின் கடைக்கோடியிலிருந்து ஒருவர் நிகழ்த்தப்போகிறார் என்பதுதான். நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்கான சந்திராயன்-2 வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. பின்னர், அதிலிருந்து விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கி ஆய்வுசெய்யும் என்பதுதான் திட்டம். ஆனால், எதிர்பாராத விதமாக, சந்திரனை நெருங்கிக்கொண்டிருக்கும்போது, லேண்டருடனான தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது.

`நீங்கள் தமிழரா, இந்தியரா...' - இஸ்ரோ தலைவர் சிவன் அளித்த பதில் என்ன?
modi
modi

இது விஞ்ஞானிகள் மட்டுமல்லாது, நாட்டுமக்களிடையேயும் சோகத்தை ஏற்படுத்தியது. இருந்தபோதிலும், இஸ்ரோ தலைவர் சிவன் குறித்தும் விஞ்ஞானிகளின் முயற்சி குறித்தும் பலரும் பாராட்டுகளைத் தெரிவித்தனர். பிரதமர் மோடி, இஸ்ரோ தலைவர் சிவனைத் தட்டிகொடுத்து ஆறுதல் கூறிய வீடியோ வெளியாகி வைரலானது. சிவனுக்கு ஆதரவான கருத்துகள் வரத் தொடங்கின. பின்னர், `விக்ரம் லேண்டர் சேதமடையவில்லை’ என்று இஸ்ரோ தெரிவித்தது, புதிய உற்சாகத்தை ஏற்படுத்தியது. `விக்ரம் லேண்டர், நிலவின் தென்துருவத்தில் சாயந்த நிலையில் இருக்கிறது’ என்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்தனர்.

இதனிடையே, மீண்டும் தகவல் தொடர்பை ஏற்படுத்தும் முயற்சியில் இஸ்ரோ இறங்கியுள்ளது. `சந்திராயன்-2’ தொடர்பான இஸ்ரோவின் முயற்சிக்கு நாசா பாராட்டுகளைத் தெரிவித்திருந்தது. இந்நிலையில், `எதிர்கால விண்வெளித்திட்டங்களில் கவனம் செலுத்துங்கள்’ என்று விஞ்ஞானிகளுக்கு இடையே இஸ்ரோ தலைவர் சிவன் உரையாற்றியுள்ளதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா தெரிவித்துள்ளது.

sivan
sivan

இது தொடர்பாக அந்த நாளிதழுக்கு பேட்டியளித்த விஞ்ஞானி ஒருவர், ``எங்கள் சேர்மன் சிவன் எங்களிடம் பேசினார். அப்போது அவர், `ஆர்பிட்டர் சயின்ஸில் சந்திராயன்-2 100 சதவிகிதம் வெற்றியடைந்துள்ளது. லேண்டிங் டெக்னாலஜியில் 95 சதவிகிதம் வெற்றியடைந்துள்ளோம். அதேபோல, சாஃப்ட் லேண்டிங்கிற்குப் பதிலாக ஹார்ட் லேண்டிங் செய்துள்ளோம். எனவே, கவலைப்படுவதற்குப் பதிலாக எதிர்காலத் திட்டங்களில் கவனம் செலுத்துங்கள்” என்று அவர் தெரிவித்துள்ளார். அடுத்து, மங்கல்யான் 2, 3 உள்ளிட்ட திட்டங்களை இஸ்ரோ செயல்படுத்த இருப்பது குறிப்பிடத்தக்கது.