Published:Updated:

`தனி நிறுவனமாகும் போகோ' - இனி ஷாவ்மி நிறுவனத்திலிருந்து தனித்து இயங்கும்!

Poco F1
Poco F1 ( smartprix )

போகோ சொந்தமாக சாப்ட்வேர்களை உருவாக்குமா அல்லது ஷாவ்மியின் சாப்ட்வேர்களையே பயன்படுத்துமா என இன்னும் நிறுவனத்தரப்பிலிருந்து தெரிவிக்கப்படவில்லை.

சீனாவைச் சேர்ந்த மொபைல் தயாரிப்பு நிறுவனமான ஷாவ்மி வெள்ளிக்கிழமை அன்று முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன்படி ஷாவ்மியின் துணை நிறுவனமாகச் செயல்பட்டுவந்த போகோ நிறுவனம் இனி தனித்தே இயங்கும். 2018-ம் ஆண்டு போகோ F1 ஸ்மார்ட்போன் வெளியிடப்பட்டு பயனர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. அதன்பின் போகோ F2 ஸ்மார்ட்போன் இந்த ஆண்டு வெளியிடப்படலாம் என்ற தகவல்கள் வந்த நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Xiaomi
Xiaomi
Chinadaily.cn.com
ஷாவ்மியின் துணை நிறுவனமாகத் தொடங்கப்பட்ட போகோ குறுகிய காலத்திலேயே மாபெரும் வளர்ச்சியை அடைந்துள்ளது. உலகம் முழுவதும் அதிக வாடிக்கையாளர்கள் பயன்படுத்தும் மொபைலாக போகோ F1 திகழ்கிறது. இன்று 2020-ல் கூட மற்ற மொபைல் நிறுவனங்களின் போட்டியாளர்களுள் ஒன்றாக உள்ளது .எனவே, இதைத் தனி நிறுவனமாக அறிவிக்க இதுவே சரியான தருணமாகும். தற்போதிலிருந்து போகோ தனித்தே இயங்கும்.
ஷாவ்மி இந்தியாவின் நிர்வாக இயக்குநரான மனு ஜெயின்
`Carbon Negative' திட்டத்தை நடைமுறைப்படுத்த உறுதியேற்ற மைக்ரோசாஃப்ட்!

போகோ F1 வெளியிடப்பட்டபோது அது ஷாவ்மியின் கீழ் இயங்கி வந்தது. எனவே, Poco F1 ஸ்மார்ட்போனில் ஷாவ்மியின் சாப்ட்வேர்களே பயன்படுத்தப்பட்டிருந்தது. இனி வெளியாகவிருக்கும் ஸ்மார்ட்போன்களில் போகோ சொந்தமாக சாப்ட்வேர்களை உருவாக்குமா அல்லது ஷாவ்மியின் சாப்ட்வேர்களையே பயன்படுத்துமா என இன்னும் தெரிவிக்கப்படவில்லை.

Realme X
Realme X
பா.காளிமுத்து

ரியல்மீ ஸ்மார்ட்போனும் ஒப்போவிலிருந்து விலகினாலும், இன்னும் ஒப்போவின் சாப்ட்வேர்களைத்தான் பயன்படுத்தி வருகிறது. எனவே, இந்த இரு நிறுவனங்களின் போன்களுக்கும் பெரிய அளவில் வித்தியாசம் இருக்காது. இதில் போகோ என்ன முடிவு எடுத்திருக்கிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

தற்போது போகோ நிறுவனம் தனி நிறுவனமாக இயங்கவுள்ளதால் இனி 'MI' மற்றும் 'ரெட்மீ' மட்டுமே ஷாவ்மியின் துணை நிறுவனங்களாக இருக்கும்.

பின் செல்ல