Published:Updated:

கேட்ஜெட் கிளாஸ் ரூம்! - 2 ஃபேஸ்புக் பாதுகாப்பு!

கேட்ஜெட் கிளாஸ் ரூம்
பிரீமியம் ஸ்டோரி
கேட்ஜெட் கிளாஸ் ரூம்

#Utility

கேட்ஜெட் கிளாஸ் ரூம்! - 2 ஃபேஸ்புக் பாதுகாப்பு!

#Utility

Published:Updated:
கேட்ஜெட் கிளாஸ் ரூம்
பிரீமியம் ஸ்டோரி
கேட்ஜெட் கிளாஸ் ரூம்

நிஜ உலகில் மட்டுமா பெண்களுக்குத் தொல்லைகள்... விர்ச்சுவல் உலகிலும்தான். உலகோடு தொடர்பிலிருக்க, சின்னச் சின்ன இளைப்பாறல்களுக்காக, நிறைய கற்க, கொஞ்சம் பகிர என ஃபேஸ்புக் வரும் பெண்களின் தேவைகளும் ஆசைகளும் நிறைய. ஆனால், அங்கேயும் புகுந்து அவர்கள் நிம்மதியைக் குலைக்க நினைக்கும் ஜீவன்கள் உண்டு. பிரச்னை என்பதற்காக விலகிச்சென்றால், பெண்கள் இந்த உலகில் வாழ இடமே இல்லை. எனவே, ஃபேஸ்புக்கில் பாதுகாப்பாக இயங்க தெரிந்துகொள்வதே சரியாக இருக்கும். அது பற்றிய பாடமே இந்த இதழ் கிளாஸ் ரூமில்...

கேட்ஜெட் கிளாஸ் ரூம்! - 2 ஃபேஸ்புக் பாதுகாப்பு!

ங்களுக்குத் தெரிந்தவர்களின் நட்பு அழைப்புகளை மட்டுமே ஏற்பது நல்லது. பிரபலங்கள், பிராண்டு போன்றவற்றின் பக்கங்களை லைக் செய்து கொள்ளலாம். ஆனால், நம் நண்பர்கள் பட்டியல் என்றால் முடிந்தவரை தெரிந்தவர்களை மட்டுமே சேர்ப்பது பிரச்னைகளிலிருந்து விலகியிருக்க உதவும்.

கேட்ஜெட் கிளாஸ் ரூம்! - 2 ஃபேஸ்புக் பாதுகாப்பு!

புதிய நண்பர்களைத் தவிர்க்க வேண்டுமென்பது கட்டாயமல்ல. ஆனால், அப்படிப் புதியவர்களை உங்கள் பட்டியலில் சேர்க்கும் முன் அவர் என்ன எழுதியிருக்கிறார், அவரின் விருப்பங்கள் என்ன, அவர் பதிவில் மற்றவர்கள் என்ன மாதிரியான கமென்ட்ஸ் போட்டிருக்கிறார்கள், அவர்கள் அப்லோடு செய்திருக்கும் புகைப்படங்களைப் பார்க்க முடிந்தால் அவற்றைப் பார்ப்பது, அவர் ரிலேஷன்ஷிப் ஸ்டேட்டஸ் என்ன, திருமணமானவர் என்றால் அவர் மனைவியை டேக் செய்திருக்கிறாரா, இருவருக்கும் பொதுவான மியூச்சுவல் நண்பர்கள் யார் யார் என ஒரு முழுமையான ஸ்கேன் அடித்து விட்டு பின்னர் சேர்ப்பது நல்லது.

கேட்ஜெட் கிளாஸ் ரூம்! - 2 ஃபேஸ்புக் பாதுகாப்பு!

ப்படி நண்பர்களைச் சேர்த்த உடனே உங்களின் தனிப்பட்ட தகவல்களான மொபைல் எண், முகவரி, பணிபுரியும் அலுவலகம் போன்றவற்றைப் பகிராதீர்கள். அவரைச் சந்திப்பதாக இருந்தால் முதலில் குழுவாகவோ, பொது இடங்களிலோ சந்திக்கலாம். நினைவில் கொள்க... ஃபேஸ்புக் மூலம் நிகழும் பல குற்றங்களில் புதியவர்களைத் தனியாகச் சந்திப்பதால் நிகழ்பவைதாம் அதிகம்.

கேட்ஜெட் கிளாஸ் ரூம்! - 2 ஃபேஸ்புக் பாதுகாப்பு!

ங்கள் பயணத் திட்டங்கள், குடும்ப உறுப்பினர்களின் புகைப்படங்கள் போன்றவற்றைக் குடும்பத்தினரோடு கலந்துபேசாமல் பகிராதீர்கள். முக்கியமாகக் குழந்தைகளின் படங்களைப் பகிரும் முன் பல முறை யோசித்துக்கொள்ளுங்கள்.

கேட்ஜெட் கிளாஸ் ரூம்! - 2 ஃபேஸ்புக் பாதுகாப்பு!

பேஸ்புக்கின் வசதிகளைப் படித்தோ, பயன் படுத்தி பார்த்தோ தெரிந்துகொள்ளுங்கள். உதாரணமாக, நாம் பகிரும் பதிவுகளை அனைவரும் பார்க்கும்படி செய்யலாம்; அல்லது நண்பர்கள் மற்றும் அவர்களின் நண்பர்கள் மட்டும் பார்க்கும்படி செய்யலாம்; அல்லது நாம் தேர்வு செய்யும் நபர்கள் மட்டும் பார்க்கும்படி செய்யலாம். உங்கள் டிஸ்ப்ளே பிக்சர் எனப்படும் டிபியை யார் பார்க்கலாம், அதை டவுன்லோடு செய்ய முடியுமா போன்றவற்றையும் நீங்கள் முடிவு செய்யலாம். இவை போன்ற பாதுகாப்பு விஷயங்களை முழுமையாகத் தெரிந்த பின் பயன்படுத்தலாம்.

கேட்ஜெட் கிளாஸ் ரூம்! - 2 ஃபேஸ்புக் பாதுகாப்பு!

மெசஞ்சரைப் பயன்படுத்துவதில் கூடுதல் கவனம் வேண்டும். நமக்கு மெசேஜ் அனுப்பும் எல்லோருக்கும் பதில் சொல்லியே ஆக வேண்டும் என்பது கட்டாயம் கிடையாது என்பதை உணருங்கள். நீங்கள் பகிரும் படங்கள், தகவல்கள் உள்ளிட்ட எதையும் எதிர்முனையிலிருப்பவர்கள் ஸ்க்ரீன் ஷாட் எடுத்து யாருக்கு வேண்டுமென்றாலும் பகிரலாம் என்பதை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள்.

கேட்ஜெட் கிளாஸ் ரூம்! - 2 ஃபேஸ்புக் பாதுகாப்பு!

பேஸ்புக் உள்ளிட்ட சோஷியல் மீடியாக்களில் முக்கியமான ஆயுதம் `பிளாக்'. ஒருவரை பிளாக் செய்வதன் மூலம் அவர்களால் நாம் பகிரும் எதையும் பார்க்க முடியாமல், நம்மைத் தொடர்புகொள்ள முடியாமல் போகும். அவரே வேறு ஒரு அக்கவுன்ட் மூலம் நம்மை நெருங்கலாம் என்றாலும் பிளாக் என்பது பெரும்பாலான நேரத்தில் காப்பாற்றும் காவலனே. ‘எதுக்கெடுத்தாலும் பிளாக் செய்றாங்க’ எனச் சிலர் கேலி பேசினாலும், அது நம்மைக் காப்பாற்றும் ஒரு கருவி என்பதை மறந்துவிடாதீர்கள்.

கேட்ஜெட் கிளாஸ் ரூம்! - 2 ஃபேஸ்புக் பாதுகாப்பு!

ஃபேஸ்புக் குரூப் போன்ற மற்ற சேவை களிலும் கவனம் முக்கியம். அதுவும், குரூப் போன்ற இடங்களில் உங்கள் நட்புப் பட்டியலில் இல்லாதவர்கள்கூட உங்களுடன் உரையாட முடியும். அந்தக் குழுவில் யாரோ ஒருவர் செய்யும் தவறு உங்களை பாதிக்கக்கூடும். அங்கே தான் கூடுதல் கவனம் தேவை.

- இன்னும் கற்போம்...