Published:Updated:

`பேஸிக் போனிலும் எளிமையான UPI பணப்பரிவர்த்தனை!' - தீர்வைச் சொன்னால் என்ன பரிசு தெரியுமா?

Feature phone-களில் UPI மூலம் பணப்பரிவர்த்தனை செய்வது ஸ்மார்ட்போன்களில் பணப்பரிவர்த்தனை செய்வது போன்று எளிதாக இருக்காது. எனவே, அதற்கான தீர்வைக் கண்டறியும் நோக்கில் `Grand Challenge' என்ற போட்டியை அறிவித்துள்ளது NPCI.

மொபைல் போன்
மொபைல் போன்

உலகிலேயே Feature Phone-களை (ஸ்மார்ட்போன் அல்லாத பேஸிக் போன்கள்) அதிகளவு பயன்படுத்தும் நாடு இந்தியாதான். இந்தியாவில் மாதந்தோறும் 100 கோடி UPI பணப்பரிவர்த்தனைகள் நடைபெறுகின்றன. அவற்றுள் ஐந்து லட்சம் பணப்பரிவர்த்தனைகள் Feature Phone-கள் மூலம் நடைபெறுகின்றன எனத் தெரிவிக்கிறது NCPI (National Payments Corporations of India).

bill and melinda gates foundation
bill and melinda gates foundation
flickr

Feature phone-களில் UPI மூலம் பணப்பரிவர்த்தனை செய்வது ஸ்மார்ட்போன்களில் பணப்பரிவர்த்தனை செய்வது போன்று எளிதாக இருக்காது. எனவே, அதற்கான தீர்வைக் கண்டறியும் நோக்கில் `Grand Challenge' என்ற போட்டியை அறிவித்துள்ளது NPCI. இதற்காக பில் அன்ட் மெலிண்டா கேட்ஸ் பவுண்டேஷனுடன் கைகோத்துள்ளது. இதில் வெற்றி பெறும் நிறுவனம் அல்லது நபருக்கு முதல் பரிசாக 50,000 அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் 35 லட்சம் ரூபாய்) வழங்கப்பட உள்ளது.

`திருட்டுப்போன மொபைல்களைக் கண்டுபிடிக்க புதிய வழி!' - நடைமுறைக்கு வந்த அரசின் திட்டம்

இந்தப் போட்டியில் கலந்துகொள்ள `Grand Challenge' இணையதளத்தில், Feature Phone-களில் UPI மூலம் செய்யும் பணப் பரிவர்த்தனையை எளிமையாக்கவும், அதேநேரம் அதிக பயன்தரக் கூடிய வகையிலும் இருக்கும் ஐடியாக்களை பதிவு செய்ய வேண்டும். அதில் தேர்ந்தெடுக்கப்படும் ஐடியாக்களை செயல் முறைப்படுத்துவதற்காக அனைத்து உதவிகளும் NPCI-ன் மூலம் வழங்கப்படும். அதிலிருந்து இறுதியாக மூன்று போட்டியாளர்களுக்குப் பரிசளிக்கப்படும் என அந்த இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Feature Phones
Feature Phones
wikimedia commons

முதல் பரிசாக 50,000 அமெரிக்க டாலர்களும், இரண்டாம் பரிசாக 30,000 அமெரிக்க டாலர்களும், மூன்றாம் பரிசாக 20,000 அமெரிக்க டாலர்களும் வழங்கப்படும். ஜனவரி 12, 2020 போட்டிக்காகப் பதிவு செய்யக் கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இணையதள முகவரி: https://grand-challenge.ciie.co/