Published:Updated:

"பணியாளர்களில் சிலர் இனி வீட்டிலிருந்தே நிரந்தரமாக வேலை செய்யலாம்" - புதிய திட்டத்துடன் கூகுள்!

கடந்த மார்ச் மாதத்திலிருந்தே கூகுளின் பெரும்பாலான பணியாளர்கள் வீட்டில் இருந்தே வேலை செய்ததன் மூலம் ஒரு வருடத்தில் ஒரு பில்லியன் அமெரிக்கன் டாலர்கள், இந்திய மதிப்பில் சுமார் 7,400 கோடி ரூபாயை மிச்சம் செய்துள்ளது கூகுள்.

கொரோனா தொற்றால் உலகமே பாதிக்கப்பட்ட போது பெரும்பாலான மென்பொருள் நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களை வீட்டில் இருந்தே வேலை செய்ய வலியுறுத்தியது. கடந்த ஒரு வருடமாக, நூறு சதவிகித பணியாளர்களும் வீட்டில் இருந்தே வேலை செய்து வருகின்றனர். கூகுள், ஆப்பிள், பேஸ்புக் என அனைத்து நிறுவனங்களும் இதில் அடக்கம்.

முழுமையான 'Work from home' என்பது எந்தளவிற்கு வெற்றிகரமாக இருக்கும் என்ற சந்தேகம் பெரும்பாலானோருக்கு இருந்தது. ஆனால், கடந்த ஒரு வருடத்தில் 'Work from home' முறை வெற்றிகரமாகவே செயல்பட்டு வருகிறது. வீட்டில் இருந்தே வேலை செய்வதிலும் சாதக பாதகங்கள் இருக்கவே செய்தாலும் அதில் இருக்கும் சாதகங்களை மனதில் கொண்டு சில நிறுவனங்கள் தங்கள் நிறுவனப் பணியாளர்களை முழுவதும் வீட்டிலிருந்தே வேலை செய்ய வைக்கும் முடிவில் இறங்கியிருக்கின்றன.

Google.
Google.
AP Photo/Marcio Jose Sanchez, File

இது குறித்த கூகுள் நிறுவனமும் புதிய அறிவிப்பு ஒன்றை தங்கள் நிறுவன ஊழியர்களுக்கு வழங்கியிருக்கிறது. 'Work from home'-ஐ பணியாளர்கள் முழுமையாக விரும்பவில்லை. நிறைய ஊழியர்கள் அலுவலகத்துக்கு வந்து வேலை செய்யவே விரும்புகின்றனர். எனினும் 'சில நாள்கள் வீட்டில் இருந்து வேலை செய்தால் நன்றாக இருக்கும்' என்கிற மனநிலையும் வீட்டிலிருந்து வேலை செய்பவர்களிடம் காண முடிகிறது. கூகுளின் 60 சதவிகித ஊழியர்கள் வாரத்தில் சில நாள்கள் அலுவலகத்திலும், சில நாட்கள் வீட்டில் இருந்தும் பணி செய்யலாம், 20 சதவிகித ஊழியர்கள் உலகெங்கும் உள்ள கூகுளின் வெவ்வேறு அலுவலகங்களில் இருந்து பணி செய்யலாம் மற்றும் 20 சதவிகித ஊழியர்கள் முழுவதுமாக வீட்டில் இருந்தே வேலை பார்க்கலாம் என்ற புதிய வழிமுறையைக் கொண்டு வந்துள்ளது.

Work from Home-க்குத் தயாராகும் தமிழகம். அடுத்து என்ன? | The Imperfect Show 17/3/2020
Sundar Pichai
Sundar Pichai

"எல்லோரலும் வீட்டில் இருந்தே பணி செய்ய முடியாது. சிலரின் பணியில் குழுவாக இயங்க வேண்டியிருக்கும். சிலரின் பணி முழுவதுமாக அலுவலகத்திலேயே செய்ய வேண்டிய வகையில் இருக்கும். எனவே அவரவர் பணிக்கு ஏற்ப எங்கு வேலை பார்ப்பது என்ற முடிவை எடுத்துக் கொள்ளலாம்" என கூகுளின் வலைப்பதிவில் தெரிவித்திருக்கிறார் அதன் தலைமை நிர்வாக அதிகாரியான சுந்தர் பிச்சை.

கடந்த மார்ச் மாதத்தில் இருந்தே கூகுளின் பெரும்பாலான பணியாளர்கள் வீட்டிலிருந்தே வேலை செய்ததன் மூலம் ஒரு வருடத்தில் ஒரு பில்லியன் அமெரிக்கன் டாலர்கள், இந்திய மதிப்பில் சுமார் 7,400 கோடி ரூபாயை மிச்சம் செய்துள்ளது கூகுள். வீட்டில் இருந்து வேலை செய்வதன் மூலம் செலவினங்கள் குறைந்துள்ளதாகத் தெரிவித்திருக்கிறது. இதுவும் கூகுளின் இந்த முடிவுக்கு ஒரு காரணமாக இருக்கலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு