Published:Updated:

`இயல்பு வாழ்க்கைக்கு நம்மால் திரும்பிப் போக முடியுமா?!' -கொரோனா தாக்கம் குறித்து கூகுள் சிஇஓ

சுந்தர் பிச்சை | Sundar Pichai
சுந்தர் பிச்சை | Sundar Pichai

''கூகுள், பல திட்டங்களை வைத்திருக்கிறது. தற்போது இருக்கும் சூழலால் பாதைகள் மாறினாலும் அந்தத் திட்டங்களை நிறைவேற்ற முடியும் என்று நம்பிக்கையில் இருக்கிறோம்.''

கொரோனாவின் வீரியம் பல இடங்களிலும் இன்னும் குறையாமல் இருப்பதால், பொது முடக்கமும் தனிமனித இடைவெளியும் இயல்புநிலை என்று ஆகிவிட்டது. பலரும் தங்களை வொர்க் ஃப்ரம் ஹோம் தலைமுறைக்கு பழக்கப்படுத்திக்கொண்டுள்ளனர். வருங்காலத்தில் வேலை இப்படித்தான் இருக்குமா என்ற விவாதமும் எழுந்துள்ளது. கடந்த வாரம் இதுகுறித்து மைக்ரோசாஃப்ட் CEO சத்ய நாதெள்ளா பேசியிருந்தார். அதை கீழ்க்காணும் லிங்க்கில் படிக்கலாம்.

``நிரந்தர `வொர்க் ஃப்ரம் ஹோம்' சரிப்பட்டுவராது" - மைக்ரோசாஃப்ட் CEO சத்ய நாதெள்ளா!

தற்போது, இதுகுறித்து கூகுள் CEO சுந்தர் பிச்சையும் கருத்து தெரிவித்திருக்கிறார். பிரபல ஊடகமான 'The Wire'-க்கு அளித்த பேட்டியில், 'கூகுளின் வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்ற ஊழியர்களை அவ்வப்போது நேரில் சந்திக்க வேண்டியது அவசியம்' என்று சுந்தர் பிச்சை கூறியுள்ளார்.

"கொரோனா தொற்றுக்கு முன் நாம் வாழ்ந்த இயல்பு வாழ்க்கைக்கு ஒருபோதும் இனி திரும்பிச்செல்ல முடியாது என நினைக்கிறேன்" என்றும் அவர் அந்த பேட்டியில் குறிப்பிட்டார்.

மேலும், "இந்த கொரோனா நோய்த்தொற்றால் வந்துள்ள பாதிப்பு நம்மில் எவரும் கற்பனை செய்ததைவிட பெரியதாக இருக்கும் என்பதை நாங்கள் உணர்ந்தவுடன், முதலில் எங்கள் ஊழியர்களைப் பாதுகாப்பாக வைத்திருக்கத் தீர்மானித்தோம். எனவே, ஆரம்பத்திலேயே எங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்து வேலை செய்ய நிர்பந்தித்தோம்.

கூகுள் | Google
கூகுள் | Google
AP | Patrick Semansky

ஆனால், நிறுவனத்தின் வளர்ச்சிக்கு ஊழியர்கள் நேரில் பார்த்துப் பேசிக்கொள்வது முக்கியம். கூகுள், ஒரு நிறுவனமாகப் பல திட்டங்களை வைத்திருக்கிறது. தற்போது இருக்கும் சூழலால் பாதைகள் மாறினாலும், அந்தத் திட்டங்களை நிறைவேற்ற முடியும் என்று நம்பிக்கையில் இருக்கிறோம்" என்றார் சுந்தர் பிச்சை.

இதே பேட்டியில், கொரோனாவுக்காக கூகுள் மற்றும் ஆப்பிள் இடையே உண்டாகியிருக்கும் கூட்டணி பற்றியும் பேசப்பட்டது. "நாங்கள் இரு நிறுவனங்களுமே சுகாதார அமைப்புகளுக்கு உதவும் 'கான்டக்ட் ட்ரெஸிங்' தொழில்நுட்பத்தை தனித்தனியே உருவாக்கத் தொடங்கிவிட்டோம். ஆனால், இது முழுமையான தீர்வு தருவதற்கு தனித்தனியாக வேலைசெய்தால் போதாது என்பதை இரு தரப்புமே உணர்ந்தோம். நானும் டிம் குக்கும் நேரடியாகப் பேச வேண்டும் என முடிவுசெய்தோம். இது சாத்தியமானது.

கொரோனாவுக்கு எதிராகக் கைகோக்கும் ஆப்பிள் - கூகுள் கூட்டணி! இது எந்தளவுக்குப் பலன் தரும்? #LongRead

இப்படியான நேரத்தில், பயனர்களின் ப்ரைவஸி பாதிக்கப்படாது என்ற உத்தரவாதத்தையும் நாங்கள் வழங்க வேண்டும் என்பதை உணர்ந்தோம். அதற்கேற்பதான் இந்தத் தொழில்நுட்பம் கட்டமைக்கப்பட்டுள்ளது. இதை 10 முதல் 20 சதவிகித பயனர்கள் பயன்படுத்தினால்கூட, அது அர்த்தமுள்ள தாக்கம்" என்றார் சுந்தர் பிச்சை.

வொர்க் ஃப்ரம் ஹோம்மில் மட்டும் ஒரு நிறுவனம் வளர்ந்துவிட முடியுமா? உங்கள் கருத்துகளை கமென்ட்டில் பதிவிடுங்கள்!
அடுத்த கட்டுரைக்கு