Published:Updated:

`இன்காக்னிடோ மோடிலும் ட்ராக் செய்த கூகுள்..!' - 5 பில்லியன் அபராதம் விதிக்கக் கோரி வழக்கு

குரோம் இன்காக்னிடோ விண்டோ
குரோம் இன்காக்னிடோ விண்டோ

ஒவ்வொரு பயனாளிக்கும் 5000 டாலர்கள் வீதம், மொத்தமாக 5 பில்லியன் டாலர்கள் (சுமார் 37 ஆயிரம் கோடி ரூபாய்) அபராதமாகக் கட்ட வேண்டும் என்கிறது இந்த வழக்கு.

பிரவுசர் ஹிஸ்டரி, cache மற்றும் cookies போன்ற தகவல்கள் சேமிக்கப்படாமல் இருப்பதற்கும் பிரைவேட்டாக இணையம் பயன்படுத்துவதற்கும் பிரவுசர்களில் நாம் இன்காக்னிடோ (Incognito) மோடைப் பயன்படுத்துகிறோம்.

ஆனால் Incognito பயன்படுத்தினாலும், கூகுள் குரோம் பிரவுசர் பயனாளர்களின் தகவல்களைப் பதிவுசெய்கிறது என்ற குற்றச்சாட்டு நீதிமன்றத்தில் வழக்காகத் தொடுக்கப்பட்டிருக்கிறது.

ஒட்டுக்கேட்டதற்காகவும் கலிஃபோர்னியா மாகாண பிரைவசி சட்டங்களை மீறியதற்காகவும் ஒவ்வொரு பயனாளிக்கும் 5,000 டாலர்கள் வீதம், மொத்தம் 5 பில்லியன் டாலர்கள் (சுமார் 37 ஆயிரம் கோடி ரூபாய்), அபராதமாகக் கட்ட வேண்டும் என்பதே இந்த வழக்கு.

கூகுள் | Google
கூகுள் | Google
AP | Patrick Semansky

வழக்குத் தொடுத்த சான் ஜோஸ் இது பற்றிக் கூறுகையில், "பயனாளர்கள் என்ன முயற்சி எடுத்தாலும் அதைத் தகர்த்தெறிந்து கூகுள் எப்படியும் அவர்களின் browsing history மற்றும் அவர்களது இணையச் செயல்பாடுகளைக் கண்காணித்துவிடுகிறது. இந்த டேட்டாவை வைத்து டேட்டா அனலிடிக்ஸ் செய்து, அவர்களின் விருப்புவெறுப்புகளுக்கு ஏற்ப விளம்பரங்கள் காட்டப்படுகின்றன. அதில்தான் வருமானம் பார்க்கிறது. இப்படிச் செய்வது தனியுரிமைச் சட்ட மீறலாகும்" என்ற குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து நீக்கப்பட்ட `Remove China Apps’, `Mitron!'- பின்னணி என்ன?

இதைக் கடுமையாகக் கண்டித்த கூகுள் நிறுவனம், "இந்தக் குற்றச்சாட்டு அர்த்தமற்றது. ஒவ்வொரு முறை இன்காக்னிடோ விண்டோ ஓப்பன் செய்யப்படும்போதும், இப்போதும் இணையதளங்களால் உங்கள் தகவல்களைப் பெற முடியும் என நாங்கள் தெளிவாகக் குறிப்பிடுகிறோம்" என்று கூறியுள்ளது.

உங்கள் இணையச் சேவை நிறுவனம் (ISP), அரசாங்கம், நீங்கள் செல்லும் இணையதளங்கள் என இவை எல்லாம் இப்படி இன்காக்னிடோவில் பிரவுஸ் செய்தாலும், உங்கள் MAC address, IP address, browser id, device id போன்ற தகவல்களைப் பெற முடியும். அதை வைத்து உங்களைக் கண்காணிக்கக்கூடும். கூகுள் குரோம் என்றில்லை, இது எல்லா பிரவுசர்களின் பிரைவேட் மோடுகளிலும் நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த கட்டுரைக்கு