Published:Updated:

ரயில் நிலையங்களில் வழங்கி வந்த இலவச வை-ஃபை சேவையை நிறுத்துகிறதா கூகுள்?

கூகுள்
கூகுள்

``ரயில் நிலையங்களில் வழங்கிவந்த இலவச வை-ஃபை சேவையை படிப்படியாகக் குறைக்க முடிவெடுத்துள்ளோம்" என்று கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தியா முழுவதும் முக்கியமான ரயில் நிலையங்களில் வழங்கிவந்த இலவச வை-ஃபை சேவையை நிறுத்தப்போவதாக அறிவித்திருக்கிறது கூகுள். நேற்று, அதன் வலைதளப் பதிவில், ``பெரும்பாலான மக்கள் இணையம் பயன்படுத்த வேண்டும் என்று இந்திய ரயில்வேயுடன் இணைந்து, 2015ல் தொடங்கப்பட்ட திட்டம்தான் கூகுள் வை-ஃபை.

Nilgiri mountain train
Nilgiri mountain train

2020-ன் பாதிக்குள் 400 ரயில் நிலையங்களில் இலவச வை-ஃபை வசதியை அறிமுகப்படுத்தத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், ஜூன் 2018-லேயே அந்த மைல்கல்லை எட்டிவிட்டோம்.

Vikatan

இந்தத் திட்டத்திற்காக இந்தியாவில் பல்வேறு தொலைத்தொடர்பு நிறுவனங்கள், இணையதளச் சேவை நிறுவனங்கள் மற்றும் மற்ற நிறுவனங்களுடனும் கைகோத்திருந்தோம். தற்போது, உலகிலேயே மிகவும் குறைவான விலையில் இணையதளச் சேவை இந்தியாவில் மட்டுமே கிடைக்கிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில், இந்தியாவில் இணையதளச் சேவைக் கட்டணங்கள் 95 சதவிகிதம் வரை குறைந்துள்ளது. ஒவ்வொரு நாளும் ஒரு சராசரி இந்தியன் 10 ஜிபி அளவிலான டேட்டாவை உபயோகிப்பதாக டிராய் அறிக்கை கூறுகிறது. மேலும், பல அரசுகள் மற்றும் தனியார் நிறுவனங்கள் இலவச இணையதளச் சேவையை வழங்க முன்வந்துள்ளன.

Google
Google

எனவே, ரயில் நிலையங்களில் கூகுள் வழங்கிவந்த இலவச வை-ஃபை சேவையைப் படிப்படியாகக் குறைக்க முடிவெடுத்துள்ளோம்" என்று தெரிவித்துள்ளது.

ஏற்கெனவே சேவை வழங்கிவந்த ரயில் நிலையங்களில், அந்தச் சேவை இன்னும் சில காலம் தொடரும். மேலும், அங்கு கொடுக்கப்பட்டுள்ள வசதிகளை வேறு வழிகளில் பயன்படுத்துவதுகுறித்து ஆலோசிக்கப்பட்டுவருகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு