Published:Updated:

புதிய வசதிகளை அறிமுகப்படுத்தும் Google Meet! -'Zoom'-ஐ விட்டு விலகும் பயனர்கள்!

Google Meet
Google Meet

Zoom இல்லையென்றால், அதற்கான மாற்று என யோசித்துக் கொண்டிருந்த வேலையில், ஏற்கெனவே தான் வழங்கிவந்த 'ஹேங்அவுட்ஸ் மீட்' (Hangouts Meet) செயலியை மெருகேற்றி, அதைப் பயனர்கள் மத்தியில் கொண்டு சேர்க்கும் வேலையில் இறங்கியிருக்கிறது கூகுள்.

'வொர்க் ஃப்ரம் ஹோம்' என்பது ஐ.டி, துறை மட்டுமல்லாது, பலருக்கும் புதிய வேலை கலாசாரமாக மாறிவிட்டது. கணினி மூலம் வேலை செய்ய முடிந்த பலரும் தற்போது 'வொர்க் ஃப்ரம் ஹோம்' முறையில்தான் பணிசெய்துவருகிறார்கள். இதில், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களும் அடக்கம். வீட்டிலிருந்தபடியே வேலைபார்க்கும் அநேகர், வீடியோ கான்ஃபரன்ஸிங் மூலம் இணைந்திருக்க, Zoom செயலியைத்தான் பரவலாகப் பயன்படுத்தி வந்தனர். மற்ற வீடியோ காலிங் செயலிகள் தனிப்பட்ட முறையில் பயன்படுத்த சிறப்பாக இருந்தாலும், தொழில்ரீதியில் குழுவாக இயங்க Zoom செயலி சிறப்பான வசதிகளை வழங்கியதால், பலரும் அதைப் பயன்படுத்தத் தொடங்கினர். அதைப் பயன்படுத்தப் பயன்படுத்த, அதில் உள்ள குறைகள் வெளிவரத் தொடங்கின. அதில், சமீபத்தில் மிகப் பெரிய குற்றச்சாட்டாக முன் வைக்கப்பட்டது, Zoom-ஐ எளிதாக ஹேக் செய்யலாம் என்பது.

கூகுள் மீட்
கூகுள் மீட்

இந்திய அரசும் Zoom செயலி ஆபத்தானது, அதைப் பயன்படுத்த வேண்டாம் என அதிகாரபூர்வமாகவே அறிவித்துள்ளது. Zoom இல்லையென்றால், அதற்கான மாற்று என யோசித்துக் கொண்டிருந்த வேலையில், ஏற்கெனவே தான் வழங்கிவந்த 'ஹேங்அவுட்ஸ் மீட்' (Hangouts Meet) செயலியை மெருகேற்றி, அதைப் பயனர்கள் மத்தியில் கொண்டுசேர்க்கும் வேலையில் இறங்கியிருக்கிறது, கூகுள். ஹேங்அவுட்ஸ் என்ற பெயரை மாற்றி, கூகுள் மீட் என்று பயனர்களின் பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில் வசதிகளையும் மாற்றிவருகிறது கூகுள்.

10,000 பேருக்கு 2.1 மருத்துவர்கள், ஆப்பிரிக்காவில் கொரோனாவின் நிலை என்ன? #DoubtofCommonMan

அதன் ஒரு பகுதியாக, சென்ற மார்ச் மாதம், மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் பயன்படுத்தும்போது, அந்த மீட்டிங்கின் மொத்த கட்டுப்பாடும் ஆசிரியர்கள் வசமே இருக்குமாறு ஒரு வசதியை அறிமுகப்படுத்தியது. அதில் மாணவர்கள், மீட்டிங்கி்ல் ஆடியோவை மியூட் செய்ய முடியாது, ஆசிரியர்கள் இல்லாமல் மாணவர்கள் மட்டும் குறிப்பிட்ட மீட்டிங்கில் இருக்க முடியாது போன்ற வசதிகளையும் அறிமுகப்படுத்தியது. கூகுளின் இந்த சேவையைப் பயனர்களிடம் கொண்டு சேர்க்க இதுதான் சரியான நேரம், மற்றும் அனைவரும் பரவலாகப் பயன்படுத்திவந்த Zoom-ன் மீதும் ஏகப்பட்ட குற்றச்சாட்டுகள் சொல்லப்படுவதால், Zoom செயலி வழங்கிவந்த ஒரு வசதியையும் விரைவில் கூகுள் மீட் செயலியில் அறிமுகப்படுத்தவிருக்கிறது.

வீடியோ மீட்டிங் தொடங்குவதற்கான புதிய வசதி
வீடியோ மீட்டிங் தொடங்குவதற்கான புதிய வசதி

அதன்படி, Zoom-ல் ஒரே நேரத்தில் மீட்டிங்கில் இருக்கும் பலரையும், ஒரே திரையில் பார்க்க முடியும். ஆனால், தற்போதுள்ள கூகுள் மீட்டில் அந்த வசதி இல்லை. இம்மாத இறுதிக்குள் அந்த வசதியை மீட்டில் அறிமுகப்படுத்தவிருப்பதாகத் தெரிவித்திருக்கிறது கூகுள். கூகுள் மீட்டின் ப்ரீமியம் வெர்ஷனையும் ஜூலை 1 வரை கட்டணம் இல்லாமல் அனைவரும் பயன்படுத்திக்கொள்ளலாம் என்றும் தெரிவித்திருக்கிறது கூகுள். மேலும், ஜி-மெயிலின் சைட் பாரிலேயே வீடியோ மீட்டிங்கைத் தொடங்குவதற்கும், வேறு மீட்டிங்கில் இணைவதற்குமான வசதியையும் கொடுத்தவிருப்பதாக அதன் வலைப்பதிவில் தெரிவித்துள்ளது.

அடுத்த கட்டுரைக்கு