Published:Updated:

10 மடங்கு வளர்ச்சி கண்ட கூகுள் மீட்... அதிகம் பதிவிறக்கப்பட்ட ஆரோக்கிய சேது - ரிப்போர்ட்!

கூகுள் மீட்
கூகுள் மீட்

ஏப்ரல் மாதம் உலகளவில் அதிகம் தரவிறக்கம் செய்யப்பட்ட செயலிகள் பட்டியலில் முதல் இடத்தில் Zoom செயலியும், ஏழாவது இடத்தில் இந்திய அரசின் கொரோனா வைரஸ் கான்டக்ட் ட்ராக்கிங் செயலியான ஆரோக்கிய சேதுவும் உள்ளன.

வீடியோ கான்ஃபரன்ஸிங் சேவையில் Zoom-க்குப் போட்டியாக இருக்கும் Google Meet செயலி 50 மில்லியன் பயனர்களைப் பெற்றுள்ளதாக AppBrain என்னும் ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. க்வாரன்டீன் தொடங்கிய மார்ச் மாதத்தில் 5 மில்லியன் பயனர்களைக் கொண்டிருந்த கூகுள் மீட் தற்போது 50 மில்லியன் பயனர்களை எட்டியுள்ளது. அதாவது, ஒரே மாதத்தில் கிட்டத்தட்ட 10 மடங்கு வளர்ச்சியடைந்திருக்கிறது கூகுள் மீட். Zoom செயலியில் பாதுகாப்புக் குறைபாடுகள் கண்டறிந்ததையடுத்து கூகுள் மீட் செயலியின் பயன்பாடு அதிகரித்தது. எனினும் Zoom செயலியின் பயன்பாடும் பெரிதாகக் குறைந்துவிடவில்லை.

Zoom App
Zoom App

கூகுள் மீட் ஏற்கெனவே இருக்கும் பயனர்களைத் தக்க வைக்கவும், புதிய பயனர்களை ஈர்க்கவும் பல புதிய வசதிகளைக் கடந்த மாதம் அறிமுகப்படுத்தியது. செப்டம்பர் மாதம் வரை இலவச பயன்பாடு, 250 நபர்கள் வரை ஆன்லைன் மீட்டிங் நடத்தும் வசதி மற்றும் டெக்ஸ்டாப்பிலேயே எளிதாக மீட்டிங்கில் இணையும் வண்ணம் ஜிமெயில் ஆப்ஷன் வசதி எனப் பலவற்றை அறிமுகப்படுத்தியது. மேலும் அலுவலகப் பயன்பாடு மற்றும் கல்வி நிறுவனங்களுக்கான பயன்பாடு என ஒவ்வொருவருக்கும் அவர்களுக்கு ஏற்ற வகையில் தனிப்பட்ட வசதிகளையும் வழங்கியது.

Network Enforcement Law, Hate Speech Law... ஜெர்மன், பிரான்ஸ் நாடுகளின் டிஜிட்டல் அவதூறுக்கு எதிரான சட்டங்கள்!

இதற்கு முன்னர் Zoom செயலியானது தங்கள் சேவையில் பயனர் எண்ணிக்கை 300 மில்லியன் எனக் குறிப்பிட்டிருந்தது. பின்னர், அது பயனர் எண்ணிக்கை இல்லை, தினசரி ஆன்லைன் மீட்டிங்கில் கலந்து கொள்பவர்கள் எண்ணிக்கையைத் தவறாகக் குறிப்பிட்டுவிட்டோம் எனத் தெரிவித்தது Zoom. கடந்த ஏப்ரல் மாதம் வரை Zoom-ஐ தரவிறக்கம் செய்தவர்களின் எண்ணிக்கை 131 மில்லியன்.

Aarogya setu
Aarogya setu

மேலும், ஏப்ரல் மாதம் உலகளவில் அதிகம் தரவிறக்கம் செய்யப்பட்ட செயலிகள் பட்டியலில் முதல் இடத்தில் Zoom செயலியும், ஏழாவது இடத்தில் இந்திய அரசின் கொரோனா வைரஸ் ட்ராக்கிங் செயலியான ஆரோக்கிய சேதுவும் உள்ளது.

அடுத்த கட்டுரைக்கு