Published:Updated:

மீண்டும் செயல்படத் தொடங்கின யூடியூப், ஜிமெயில்... என்ன நடந்தது?

Google | யூடியூப்
Google | யூடியூப்

சேவைகள் முடங்கிய போதும் Incognito Mode-ல் யூடியூப் வேலை செய்வதாக சிலர் குறிப்பிட்டிருந்தனர். இதனால் கூகுள் கணக்கு சார்ந்த எதோ விஷயத்தில்தான் சிக்கல் ஏற்பட்டிருக்கும் என கணிக்கப்படுகிறது.

உலகின் முன்னணி இணைய நிறுவனமான கூகுளின் பெரும்பான்மையான சேவைகள் உலகமெங்கும் சிறிது நேரம் முடங்கி போயின. யூடியூப், ஜிமெயில், கூகுள் டாக்ஸ், கூகுள் அசிஸ்டன்ட் தொடங்கி முக்கிய சேவைகள் அனைத்துமே முடங்கின. ட்விட்டரில் பலரும் இதைக் குறிப்பிட்டு பதிவுகளிட #YoutubeDown, #GoogleDown, #GoogleOutage போன்ற ஹேஷ்டேக்குகள் உலகமெங்கும் வைரலாகிவருகின்றன. இந்திய மணியளவில் சுமார் ஐந்து மணிக்கே பலருக்கும் கூகுளின் சேவை தடைப்பட்டிருக்கிறது. DownDetector தளத்தில் மக்கள் பதிவிட்டதன்படி சுமார் மாலை 5.10 மணிக்கு இந்தச் சேவைகள் முடங்கியிருக்கின்றன.

#GoogleOutage
#GoogleOutage

ஆனால், கூகுள் சேவைகளின் தற்போதைய ஸ்டேட்டஸை காட்டும் 'AppStatus' பக்கத்தில் எந்த ஒரு பிரச்னையும் இல்லை என்றே முதலில் காட்டியிருக்கிறது. 5.25 மணியளவில்தான் கூகுள் சேவைகள் முடங்கியுள்ளன என அந்தப் பக்கத்தில் அப்டேட் செய்யப்பட்டிருக்கிறது. 5.42 மணியளவில் எப்போது இந்த பிரச்னை தீர்க்கப்படும் எனத் தெரிவிக்கப்படும் என அங்கு குறிப்பிட்டிருக்கிறது கூகுள். இந்த நிலையில், இப்போது ஜிமெயில், யூடியூப் சேவைகள் மீண்டும் வேலைசெய்ய தொடங்கியுள்ளன. மற்ற சேவைகளும் ஒவ்வொன்றாக மீளத் தொடங்கியிருக்கின்றன.

#GoogleOutage
#GoogleOutage

சேவைகள் முடங்கிய போதும் Incognito Mode-ல் யூடியூப் வேலை செய்வதாக சிலர் குறிப்பிட்டிருந்தனர். இதனால் கூகுள் கணக்கு சார்ந்த எதோ விஷயத்தில்தான் சிக்கல் ஏற்பட்டிருக்கும் என கணிக்கப்படுகிறது.

#GoogleOutage
#GoogleOutage

இதற்கு முன்பும் வாட்ஸ்அப் போன்ற சேவைகள் இப்படி முடங்கியிருக்கின்றன. ஆனால், இந்த அளவில் உலகமெங்கும் தாக்கத்தை அவை ஏற்படுத்தவில்லை. தொழில் நிறுவனங்கள் தொடங்கி தனிநபர்கள் வரை அனைத்து தரப்பினருமே கூகுளின் பண்பட்ட சேவைகளை நம்பியிருக்கின்றனர். அதனால் இதன் பாதிப்பு உலகமெங்கும் உணரப்பட்டிருக்கிறது. என்ன பிரச்னை என்பதற்கான விரிவான விளக்கத்தை கூகுள் கூடிய விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த கட்டுரைக்கு