Published:Updated:

கூகுள் பாராட்டிய இந்திய இளைஞர்; மொத்த வெகுமதி 65 கோடி -யார் இவர்?

அமன் பாண்டே ( linkedin )

ஆச்சரியமான செய்தி, இந்தியர் ஒருவரை மட்டும் தனித்து குறிப்பிட்டு தங்கள் சேவைகளைப் பாதுகாக்க உதவியதற்காக நன்றியைத் தெரிவித்துள்ளது கூகுள்.

கூகுள் பாராட்டிய இந்திய இளைஞர்; மொத்த வெகுமதி 65 கோடி -யார் இவர்?

ஆச்சரியமான செய்தி, இந்தியர் ஒருவரை மட்டும் தனித்து குறிப்பிட்டு தங்கள் சேவைகளைப் பாதுகாக்க உதவியதற்காக நன்றியைத் தெரிவித்துள்ளது கூகுள்.

Published:Updated:
அமன் பாண்டே ( linkedin )

மிகப்பெரிய டெக் சேவை நிறுவனங்கள் தங்கள் மென்பொருட்களில் ஹேக்கர்கள் ஊடுருவும் வாய்ப்பைத் தவிர்க்க, அதில் உள்ள பாதுகாப்பு குறைபாடுகளைச் சுட்டிக்காட்டும் நபர்களுக்கு வெகுமதி அளிப்பது வழக்கம். உலகின் டெக் ஜாம்பவானான கூகுள், அதன் சேவைகளான க்ரோம், ப்ளே ஸ்டார் போன்ற செயலிகளில் உள்ள தவறைக் கண்டறிந்து அறிவித்த நபர்களுக்கு இந்த ஆண்டு மட்டும் 8.7 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் 65 கோடி) வெகுமதியாக வழங்கியிருக்கிறது. Google Vulnerabilities Program கீழ் இந்த வெகுமதிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதில் ஆச்சரியமான செய்தி, இந்தியர் ஒருவரை மட்டும் தனித்து குறிப்பிட்டு தங்கள் சேவைகளைப் பாதுகாக்க உதவியதற்காக நன்றியைத் தெரிவித்துள்ளது கூகுள். அந்த நபர், அமன் பாண்டே. NIT போபாலில் படித்தவர் அமன், BugsMirror நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை அதிகாரி.

அமன் பாண்டே
அமன் பாண்டே
linkedin

BugsMirror நிறுவனம் 2021 இல் தான் தொடங்கப்பட்டது. ஆனால் 2019 இல் இருந்தே ஆண்ட்ராய்ட், க்ரோம் உள்ளிட்ட கூகுள் சேவைகளில் உள்ள மென்பொருள் குறைபாடுகளைச் சுட்டிக்காட்டி வந்துள்ளார், அமன். இந்த ஆண்டு மட்டும் அவர் கண்டறிந்து கூகுளுக்கு ரிப்போர்ட் செய்தவற்றின் எண்ணிக்கை 232. கூகுளின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள பதிவில், "2019 -ல் இருந்து அமன் ரிப்போர்ட் செய்த ஏற்கக்கூடிய பாதுகாப்பு குறைபாடுகள் 280 க்கும் மேல் இருக்கும். இந்த புரோக்ராமை வெற்றிகரமாக மாற்ற அமன் முக்கிய பங்காற்றியுள்ளார்" எனப் பாராட்டியுள்ளார்கள். கூகுள் இதற்காகவே தனித்ததொரு இணையத்தளத்தையும் தொடங்கியிருக்கிறது. இந்த vulnerabilities ப்ரோக்ராமில் ரிகார்ட் பிரேக்கிங் ஆண்டு இது. கூகுள், அமனுக்கு மட்டுமில்லாது ஒட்டுமொத்த ஆய்வு சமூகத்திற்கும் நன்றியைத் தெரிவித்துள்ளது. 115 நபர்கள் கண்டறிந்த 333 தனித்துவமான பாதுகாப்பு குறைபாடுகளுக்கு 3.3 மில்லியன் வெகுமதி வழங்கியுள்ளதாக கூகுள் தெரிவிக்கிறது.