Published:Updated:

ஒரு ட்ரில்லியன் டாலர் சந்தை மதிப்பை எட்டிய 'ஆல்பபெட்!'

Google
Google

2018-ல் ஆப்பிளும் அதைத் தொடர்ந்து மைக்ரோசாஃப்ட் மற்றும் அமேசான் ஆகிய நிறுவனங்களும் ஒரு ட்ரில்லியன் டாலர்கள் சந்தை மதிப்பு என்ற மைல் கல்லை எட்டியிருந்தன.

கூகுள் நிறுவனத்தின் தாய் நிறுவனமான 'ஆல்பாபெட்'டின் (Alphabet) சந்தை மதிப்பு ஒரு ட்ரில்லியன் அமெரிக்க டாலரை எட்டியிருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. உலகின் முன்னணி டெக் ஜாம்பவான்களில் ஒன்றான கூகுள் 2015-ல் கூகுளின் மற்ற துணை நிறுவனங்களான யூடியூப், ஆண்ட்ராய்டு ஆகியவற்றுடன் கூகுளையும் ஆல்பாபெட்டை தாய் நிறுவனமாக வைத்து ஒரே குடையின் கீழ் கொண்டு வந்தது. இதன் மூலம் கூகுளின் செயல்பாடுகளைத் தனியாக வரையறுக்கலாம் என்று இந்த முடிவை எடுத்தது.

 சுந்தர் பிச்சை | alphabet
சுந்தர் பிச்சை | alphabet
ஆப்பிள், சாம்சங், அமேசான், சோனி, எல்.ஜி நிறுவனங்களின் எதிர்காலத் தயாரிப்புகள் என்னென்ன?

தற்போது இதன் மதிப்பு ஒரு ட்ரில்லியன் டாலர் மதிப்பை எட்டியுள்ளது. இதற்கு முன்னதாக 2018-ல் ஆப்பிளும், அதைத் தொடர்ந்து மைக்ரோசாஃப்ட் மற்றும் அமேசான் ஆகிய நிறுவனங்களும் ஒரு ட்ரில்லியன் டாலர்கள் சந்தை மதிப்பு என்ற மைல் கல்லை எட்டியிருந்தன. நிறைய துணை நிறுவனங்கள் இருந்தாலும் இப்போதும் கூகுளின் முதன்மை வருமானமாகக் கூகுள் தேடுபொறிதான் இருந்து வருகிறது.

Sundar pichai
Sundar pichai

கடந்த டிசம்பர் மாதம் அந்நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக இருந்த லாரி பேஜ் தான் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்து, சுந்தர் பிச்சையே ஆல்பபெட் நிறுவனத்துக்கும் தலைமை செயல் அதிகாரியாகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

அடுத்தாக ஃபேஸ்புக் நிறுவனமும் ஒரு ட்ரில்லியன் டாலர் சந்தை மதிப்பை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த கட்டுரைக்கு