Published:Updated:

`5G சோதனை ஓட்டத்தில் வாவேக்கும் வாய்ப்பு!'- அமெரிக்காவின் கோரிக்கையைப் புறந்தள்ளிய இந்தியா

5G
5G ( AF.mil )

இந்தியாவில் தொலைத்தொடர்புத் துறையின் அடுத்தகட்டமான 5G தொழில்நுட்பத்தின் சோதனை ஓட்டத்திற்கு இந்தியத் தொலைத்தொடர்புத்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.

இந்தியாவில் தொலைத்தொடர்புத் துறையின் அடுத்தகட்டமான 5G தொழில்நுட்பத்தின் சோதனை ஓட்டத்திற்கு இந்தியத் தொலைத்தொடர்புத்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. இது பற்றிய அறிவிப்பை நேற்று வெளியிட்ட அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் கூறும் போது, ``5G தொழில்நுட்பத்திற்கான சோதனை ஓட்டத்தைச் செய்து பார்க்க அரசு முடிவு செய்துள்ளது. இதில் அனைத்துத் தொலைத்தொடர்பு மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கும் வாய்ப்பளிக்கப்படும்" எனத் தெரிவித்தார்.

Huawei
Huawei

இந்தச் சோதனை ஓட்டத்தில் வாவே(Huawei) நிறுவனத்துக்கும் வாய்ப்பளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்பு காரணங்களால் கடந்த சில மாதங்களுக்கு முன் வாவே நிறுவனத்தை அமெரிக்கா தடை செய்தது. அது மற்ற நாடுகளையும் அந்நிறுவனத்தைத் தடை செய்யுமாறு கேட்டுக் கொண்டது. அமெரிக்காவைத் தொடர்ந்து ஆஸ்திரேலியா, ஜப்பான், நியூசிலாந்து மற்றும் தைவான் ஆகிய நாடுகளும் வாவே நிறுவனத்தைத் தடை செய்தன.

புதிய இயங்குதளத்துக்கான செயலிகளைக் களமிறக்கிய ஹூவாவே!

ஆனால், இந்தியா இது தொடர்பாக எந்த அறிவிப்பையும் வெளியிடாமலே இருந்துவந்த நிலையில் தற்போது அந்த நிறுவனத்திற்கு அனுமதியளித்துள்ளது. இந்த அனுமதியளிப்பு, சீன நிறுவனங்களுடன் கைகோப்பது பற்றியான எங்கள் சந்தேகங்களுக்கு விடையளித்துள்ளது என COAI (Cellular Operations Association of India) அமைப்பின் டைரக்டர் ஜெனரலான ராஜன் மேத்யூஸ் தெரிவித்தார் .

5G இந்தியா எப்போது?
5G இந்தியா எப்போது?

இதைப் பற்றி வாவே நிறுவனத்தின் இந்தியத் தலைமைச் செயல் அதிகாரியான ஜே சென் கூறுகையில், ``இந்தியாவின் இந்த முடிவு எங்களுக்கு மகிழ்ச்சியளிக்கிறது. எங்கள் நிறுவனத்தின் மீது நம்பிக்கை வைத்ததற்காக இந்திய அரசுக்கு எங்கள் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு