Published:Updated:

மோடி அரசுடன் வலுக்கும் மோதல்... ட்விட்டர் அதிகாரிகள் கைதா?!

அமெரிக்காவில் நடந்த கேபிடால் கலவரங்களையும் ஜனவரி 26 செங்கோட்டையில் நடந்த கலவரங்களையும் வேறு வேறு விதமாகக் கையாள்கிறது ட்விட்டர் என்று குற்றம்சாட்டுகிறது அரசு.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

பிரபல சமூக வலைதளமான ட்விட்டருக்கும் மோடி தலைமையிலான மத்திய அரசுக்கும் இடையே ஏற்பட்டிருக்கும் கருத்து வேறுபாடு இப்போது மோதலாக மாறியிருக்கிறது. மத்திய அரசு கொண்டுவந்த மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராகக் கடந்த நவம்பர் மாதம் முதல் தலைநகர் டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்திவருகிறார்கள். இது தொடர்பாக பதியப்படும் கருத்துகள் சிலவற்றை நீக்கக்கோரியும் சில கணக்குகளை முடக்கக்கோரியும் ட்விட்டருக்கு உத்தரவிட்டது அரசு. அதையடுத்து சிலரின் பக்கங்களை ட்விட்டர் நீக்கியது, அவர்களின் தரப்பில் சரியான விளக்கம் கொடுத்ததை அடுத்து அவர்களின் பக்கங்கள் மீண்டும் செயல்பட அனுமதி வழங்கியது. சில பதிவுகளை நீக்க மறுத்துவிட்டது.

Twitter
Twitter

அவதூறு, வன்முறையைப் போற்றுதல், வன்முறைச் சம்பவங்களைத் தூண்டும் வகையிலான பதிவுகள் மூலம் ட்விட்டர் விதிகளை மீறிய நூற்றுக்கணக்கான கணக்குகளை முடக்கி நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. இது போன்ற விதிமீறலில் ஈடுபட்ட 500-க்கும் மேற்பட்ட கணக்குகளை இடைநீக்கம் செய்திருக்கிறோம். இந்திய அரசின் விதிமுறைகளுக்கு ஏற்ப சில கணக்குகளை முடக்கியிருக்கிறோம். சில கணக்குகள் இந்தியாவில் மட்டுமே தடை செய்யப்பட்டிருக்கின்றன என்று ட்விட்டர் தெரிவித்திருக்கிறது.

`இந்தியச் சட்டத்தின் கீழ் சுதந்திரமாகக் கருத்து தெரிவிப்பதற்கான அடிப்படை உரிமையைப் பறிக்கிறது இந்த உத்தரவு. ட்விட்டர் பயனாளர்கள் சுதந்திரமாகக் கருத்துகளைப் பதிவிடுவதையே நாங்கள் விரும்புகிறோம்’ என்று ட்விட்டர் விளக்கம் கொடுத்தது.

இந்த உத்தரவை உடனடியாக பின்பற்ற வேண்டும் ட்விட்டர். இதில் விவாதத்திற்கே இடமில்லை. இது இந்த நாட்டின் சட்டம், எங்கள் உத்தரவில் ஏதேனும் பிரச்னை இருந்தால் சட்டரீதியாக அதை எதிர்கொள்ளுங்கள்.
மத்திய அரசு

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கொடுக்கும் உத்தரவுகளை உடனே பின்பற்றவேண்டும். நன்றாக ஆலோசித்து பொறுமையாக 10-12 நாட்களுக்கு பிறகு அந்த உத்தரவைப் பின்பற்றுவது உத்தரவை அவமதிக்கும் செயலாகவே பார்க்கப்படும்.

மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ரவி சங்கர் பிரசாத்துடன் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யுமாறு ட்விட்டர் தரப்பில் கேட்கப்பட்டது. இதற்கு அரசு தரப்பு உடன்படவில்லை. பொதுவெளியில் 'உத்தரவுகளைப் பின்பற்ற மாட்டோம்' என ட்விட்டர் தெரிவித்திருப்பது அரசைக் கொதிப்படையச் செய்திருக்கிறது.

#ModiPlanningFarmerGenocide என்ற ஹேஷ்டேக்கில் ட்வீட் செய்த 257 கணக்குகளை முடக்கவேண்டும் என அரசு தரப்பில் கூறப்பட்டிருக்கிறது. இதில் வெறும் 126 கணக்குகளை மட்டுமே நீக்கியிருக்கிறது. இந்த 257 கணக்குகளில் பிரபல ஊடகமான கேரவன்(@thecaravanindia), இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), செயற்பாட்டாளர் ஹன்ஸ்ராஜ் மீனா போன்ற முக்கிய கணக்குகளும் அடங்கும்.

ட்விட்டர் CEO ஜாக் டார்ஸி
ட்விட்டர் CEO ஜாக் டார்ஸி
Francois Mori

முழுவதுமாக உத்தரவைப் பின்பற்றாததற்கு ட்விட்டர் அதிகாரிகளைக் கைது செய்ய முடிவெடுக்கப்பட்டிருப்பதாக செய்திகள் கசிகின்றன.

"இதுபோன்ற விஷம கருத்துகளைப் பகிரும் கணக்குகளை முடக்காமல் அதில் ஆதாயம் பார்க்கிறது ட்விட்டர். இந்தியா ஒரு குடியரசு நாடு. பாராளுமன்றத்தில் நடத்தப்பட்ட விவாதத்திற்கு பிறகே சட்டங்கள் இயற்றப்பட்டிருக்கின்றன. அதை விட ஒரு தனியார் நிறுவனம் தனக்கு தானே வகுத்துக் கொள்ளும் சட்டதிட்டங்கள்தான் பெரிதென நினைப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது" என்று தெரிவித்திருக்கிறது தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்.

அமெரிக்காவில் நடந்த கேபிடால் கலவரங்களையும் ஜனவரி 26 செங்கோட்டையில் நடந்த கலவரங்களையும் வேறு வேறு விதமாகக் கையாள்கிறது ட்விட்டர் என்றும் குற்றம்சாட்டுகிறது அரசு.

அரசுக்கும் ட்விட்டருக்குமான இந்த மோதலை எப்படிப் பார்க்கிறீர்கள்?!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு