Published:Updated:

செல்போன் டேப்லெட் லேப்டாப் கம்ப்யூட்டர் - காத்திருக்கும் ஆபத்துகள்... கவனமாகக் கையாளும் வழிமுறைகள்!

லேப்டாப்
பிரீமியம் ஸ்டோரி
லேப்டாப்

கம்ப்யூட்டர் / லேப்டாப் திரையானது நம் பார்வை அளவுக்கும் சற்று மேலே இருக்க வேண்டும். குனிந்து பார்ப்பது போல் இருக்கக் கூடாது.

செல்போன் டேப்லெட் லேப்டாப் கம்ப்யூட்டர் - காத்திருக்கும் ஆபத்துகள்... கவனமாகக் கையாளும் வழிமுறைகள்!

கம்ப்யூட்டர் / லேப்டாப் திரையானது நம் பார்வை அளவுக்கும் சற்று மேலே இருக்க வேண்டும். குனிந்து பார்ப்பது போல் இருக்கக் கூடாது.

Published:Updated:
லேப்டாப்
பிரீமியம் ஸ்டோரி
லேப்டாப்

கொரோனாவோடு வாழப் பழகிக்கொண்டோமோ இல்லையோ... வயது வித்தியாசம் இல்லாமல் அனைவரும் செல்போன், லேப்டாப், டேப்லெட், ஸ்மார்ட் கடிகாரம், ப்ளுடூத் உபகரணங்கள் உள்ளிட்ட பலவகையான கேட்ஜெட் களோடு ஒருகட்டத்தில் வாழப் பழகிவிட்டோம்.

கேட்ஜெட்களை பழித்தவர்கள்கூட, கொரோனாவை பின்தொடர்ந்த ஊரடங்கு வாழ்க்கையில், கேட்ஜெட்களின் துணையின்றி வாழ முடியாது என்ற நிலைக்கு ஆளானார்கள்.

செல்போன் டேப்லெட் லேப்டாப் கம்ப்யூட்டர் - காத்திருக்கும் ஆபத்துகள்... கவனமாகக் கையாளும் வழிமுறைகள்!
Deepak Sethi

இனி வரும் காலத்திலும் அப்படித்தான்... கேட்ஜெட்கள் நம் வாழ்வின் தவிர்க்க முடியாத அங்கங்களாகவே மாறும் என்ற நிலையில், அவற்றின் அதீத பயன்பாடு ஏற்படுத்தும் உடல், மன பாதிப்புகளையும் அறிந்து அவற்றிலிருந்து நம்மைத் தற்காத்துக்கொள்ள வேண்டியது அவசியம்.

கேட்ஜெட் பயன்படுத்துவோர் அவற்றைச் சரியாகப் பயன்படுத்த வேண்டியதன் அவசியம், தவறாகவும் அளவுக்கு அதிகமாகவும் பயன்படுத்துவதால் ஏற்படும் உடல், மனநல பாதிப்புகள், அவற்றின் அறிகுறிகள், தீர்வுகள் குறித்தும் விளக்குகிறார்கள் பல்வேறு துறைகளைச் சேர்ந்த மருத்துவ நிபுணர்கள்.

செல்போன் டேப்லெட் லேப்டாப் கம்ப்யூட்டர் - காத்திருக்கும் ஆபத்துகள்... கவனமாகக் கையாளும் வழிமுறைகள்!
fizkes

கண்ணீர் வற்றிப்போவது முதல் கழுத்துவலி வரை... கண் மருத்துவர் வசுமதி, சென்னை

“கண்ணில் உள்ள நீர்தான் பார்வையைத் தெளிவாக்குகிறது. மொபைல், லேப்டாப் மற்றும் டேப்லெட் போன்ற கேட்ஜெட்களிலிருந்து வரும் கதிர்வீச்சு, கண்ணீர்ப் படலத்தைத் தாக்கு வதால் கண்ணீர் வற்றி, கண்கள் வறண்டு விடுகின்றன. இதனால் நாம் பார்க்கிற காட்சி தெளிவாக இருக்காது. இதைத்தான் `கம்ப்யூட்டர் / மொபைல் விஷன் சிண்ட்ரோம்' (Computer / Mobile Vision Syndrome) என்கிறோம். இதனால் பார்வைக்குறைபாடு ஏற்பட்டு கண்ணாடி போட வேண்டிய தேவை ஏற்படலாம். அதை அலட்சியம் செய்துவிட்டு கண்ணாடி போடு வதைத் தவிர்த்தால் பார்வை பாதிப்பு மேலும் தீவிரமாகும்.

செல்போன் டேப்லெட் லேப்டாப் கம்ப்யூட்டர் - காத்திருக்கும் ஆபத்துகள்... கவனமாகக் கையாளும் வழிமுறைகள்!

கம்ப்யூட்டர் / லேப்டாப் திரையானது நம் பார்வை அளவுக்கும் சற்று மேலே இருக்க வேண்டும். குனிந்து பார்ப்பது போல் இருக்கக் கூடாது. கம்ப்யூட்டர் டேபிளில் உட்காரும்போது கால் தரையில் பதிந்திருக்க வேண்டும். முட்டிகளும் தொடைகளும் 90 டிகிரி கோணத்தில் இருக்க வேண்டும். அப்போதுதான் கழுத்துக்கு எந்தத் தொந்தரவும் இருக்காது. கழுத்து சரியான பொசிஷனில் இல்லாவிட்டால் கண்களும் பாதிக்கப்படும். அதேபோல் பார்வை, கணினித் திரையின் நேர்க்கோட்டில் இல்லையென்றாலும் கழுத்துவலி ஏற்படும். படுத்துக்கொண்டே மொபைல் போன் பயன்படுத்துவது மிகவும் தவறானது. பார்வைத் திறனை பாதிக்கும் என்பதால் உட்கார்ந்துதான் பயன்படுத்த வேண்டும்.”

செல்போன் டேப்லெட் லேப்டாப் கம்ப்யூட்டர் - காத்திருக்கும் ஆபத்துகள்... கவனமாகக் கையாளும் வழிமுறைகள்!
Oleksandr Shchus
செல்போன் டேப்லெட் லேப்டாப் கம்ப்யூட்டர் - காத்திருக்கும் ஆபத்துகள்... கவனமாகக் கையாளும் வழிமுறைகள்!

ஓவர் சவுண்டு காதுகளுக்கு ஆகாது! காது மூக்கு தொண்டை மருத்துவர் சூர்யகுமார், மதுரை

“நம் காதுகளால் இயல்பாக குறிப்பிட்ட அளவு ஒலியைத்தான் உள்வாங்க முடியும். அந்த அளவு அதிகரித்தால் கேட்கும் திறன் பாதிக்கப்படும். ஆகவே தான் ஸ்மார்ட்போன்களில் ஹெட்செட் பயன்படுத்தும்போது குறிப்பிட்ட ஒலி அளவுக்கு மேல் சென்றால் கேட்கும் திறன் பாதிக்கப்படும் என்ற எச்சரிக்கை வரும்படியாக வடிவமைக்கப் பட்டிருக்கிறது. அதன்படி செவித்திறனை பாதிக்காத வகையில் சரியான ஒலி அளவில் பயன்படுத்தலாம். காதுகளுக்குள் Hair cells எனப்படும் முடிகள் இருக்கும். கேட்கும் ஒலிக்குத் தகுந்தாற்போல் அசைந்து நம் கேட்கும் திறனுக்கு ஆதாரமாக விளங்குபவை அவை. பாதுகாப்பான ஒலி அளவைக் கடக்கும்போது Hair cells பாதிப்புக்குள்ளாகி செவித்திறன் குறைபாடு ஏற்படும். அதே போல் ஹெட்போனில் காதை அழுத்துவது போன்ற மாடலை பயன்படுத்தக் கூடாது. ஏனென்றால் அந்த அழுத்தத்தால் அங்கு புண் ஏற்பட்டு, தொற்று ஏற்படலாம். செவியை அழுத்தாமல் இருக்கும் விதமாக ரப்பர் பட்ஸ் வைக்கப்பட்டு வரும் ஹெட்போன் மாடல்களைப் பயன் படுத்துவது சிறந்தது.”

செல்போன் டேப்லெட் லேப்டாப் கம்ப்யூட்டர் - காத்திருக்கும் ஆபத்துகள்... கவனமாகக் கையாளும் வழிமுறைகள்!
செல்போன் டேப்லெட் லேப்டாப் கம்ப்யூட்டர் - காத்திருக்கும் ஆபத்துகள்... கவனமாகக் கையாளும் வழிமுறைகள்!
Nikhil Patil

கேம்ஸ், வீடியோகால் பிரியர்கள் கவனத்துக்கு... எலும்பு, மூட்டு அறுவைசிகிச்சை மருத்துவர் குரு, மதுரை

‘`கேம் விளையாடுவது, டெக்ஸ்ட் செய்வது உள்ளிட்ட மொபைல் பயன்பாடுகள் எல்லாம் கைவிரல்கள், மணிக்கட்டு, மூட்டு, கழுத்து ஆகிய பகுதிகளில் பாதிப்பை ஏற்படுத்தும். வாட்ஸ்அப் மாதிரியான மெசேஜ் ஆப்களில் அதிக நேரம் டைப் செய்யும்போது விரல்களில் இயற்கையான அசைவுகளுக்கு மாறான அசைவுகளைப் பயன் படுத்துகிறோம். இதனால் கையில் உள்ள சின்னச் சின்ன தசைகள் வலுவிழந்து வீக்கம் அடையும். தொடர்ச்சியாக இப்படிச் செய்யும்போது மூட்டுத் தேய்மானம் ஏற்படுகிறது.

செல்போன் டேப்லெட் லேப்டாப் கம்ப்யூட்டர் - காத்திருக்கும் ஆபத்துகள்... கவனமாகக் கையாளும் வழிமுறைகள்!
Deepak Sethi

கை மரத்துப்போய் விட்டது என்று கூறி 22 வயதுப் பெண்ணை என்னிடம் சிகிச்சைக்குக் கூட்டி வந்தார்கள். பரிசோதித்ததில் அவரது கை மணிக்கட்டில் மீடியன் நரம்பு (Median Nerve) அழுத்தப்பட்டு Carpal Tunnel Syndrome என்ற பிரச்னைக்கு அவர் ஆளாகியிருந்தது தெரியவந்தது. வீடியோ கால் பேசுவதற்காக நீண்ட நேரம் மணிக்கட்டை மடக்கியபடி வைத்திருக்கிறார் அந்தப் பெண். அதனால் மீடியன் நரம்பு அழுத்தப்பட்டு கட்டை விரலும் ஆள்காட்டி விரலும் உணர்விழந்து போயிருக்கின்றன. தொடக்க நிலையிலேயே சிகிச்சைக்கு வந்ததால் மருந்துகள் மூலம் குணப்படுத்தினோம். அதுவே தீவிரமாகி இருந்தால் அறுவைசிகிச்சை வரை செல்ல நேர்ந்திருக்கும்.

ஐ பேடு போன்ற பெரிய திரைகளில் கேம் விளையாடும்போது விரல்களை அகல விரித்துப் பிடித்திருப்பார்கள். இதனால் கைகளில் உள்ள தசை நார்களில் வீக்கம் ஏற்பட்டு `டி கொர்வின் சிண்ட்ரோம்' (De Quervain syndrome) எனும் பிரச்னைக்கு ஆளாகிறார்கள்.

செல்போன் டேப்லெட் லேப்டாப் கம்ப்யூட்டர் - காத்திருக்கும் ஆபத்துகள்... கவனமாகக் கையாளும் வழிமுறைகள்!
szefei

இதுவும் அறுவைசிகிச்சை வரை செல்லக்கூடியது என்பதால் கவனமாக இருக்க வேண்டும். `டென்னிஸ் எல்போ' (Tennis Elbow) என்று சொல்லக்கூடிய முழங்கை வீக்கம், ஒருகாலத்தில் விளையாட்டு வீரர்களுக்கு ஏற்படும் பிரச்னையாக இருந்தது. எடை கூடிய லேப்டாப்பை கையில் பிடித்துக்கொண்டே வேலை செய்வதால் அந்த அழுத்தத்தின் காரணமாக முழங்கையில் வீக்கம் ஏற்படும் பிரச்னை இன்று சாமானியர்களிடமும் அதிகரித்திருக்கிறது. மொபைல், கணினி எதுவாக இருந்தாலும் குனிந்து பார்த்தல், அண்ணாந்து பார்த்தல், படுத்துக்கொண்டே பார்த்தல் கூடாது. இதனால் கழுத்து வளைந்து, தசைப்பிடிப்பு மற்றும் எலும்புத் தேய்மானம் ஏற்பட்டு 30 – 40 வயதிலேயே கழுத்துவலி வரலாம்.  

செல்போன் டேப்லெட் லேப்டாப் கம்ப்யூட்டர் - காத்திருக்கும் ஆபத்துகள்... கவனமாகக் கையாளும் வழிமுறைகள்!
coscaron

குழந்தைகள் ஓடியாடி வெயில்பட விளையாட வேண்டும். அப்போதுதான் அவர்களுக்கு வைட்டமின் டி கிடைக்கும். அது அவர்களின் எலும்புகளின் ஆரோக்கியத்துக்கு அடிப்படை. கேட்ஜெட் பயன்பாடு அதிகரித்ததால் இப்போது ஓடியாடி விளையாடும் பழக்கமே மறைந்து வருகிறது. தவழும் வயதிலேயே குழந்தைகளை மொபைலோடு விளையாடப் பழக்குகிறோம். இது குழந்தையின் உடல் மற்றும் மன வளர்ச்சியில் பல பாதிப்புகளை உண்டாக்கும் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.’’

செல்போன் டேப்லெட் லேப்டாப் கம்ப்யூட்டர் - காத்திருக்கும் ஆபத்துகள்... கவனமாகக் கையாளும் வழிமுறைகள்!

அதிக நேர பயன்பாடு ஆபத்தானது! - நரம்பியல் மருத்துவர் புவனேஸ்வரி, சென்னை

“கேட்ஜெட்களைப் பயன்படுத்தாமல் இருக்க முடியாது. ஆனால் தொடர்ச்சியாகவும், அதிக நேரமும் பயன்படுத்துவதைக் கட்டுப் படுத்தினாலே அவை ஏற்படுத்தும் பாதிப்பு களிலிருந்து தப்பிக்கலாம். தூங்கப்போகிற நேரத்தில் போன் உபயோகிப்பதைத் தவிர்க்க வேண்டும். ஏனென்றால், போனிலிருந்து வெளிவரும் வெளிச்சக் கதிர்கள் தூக்கத்தைத் தடைசெய்யும். வலிப்பு பிரச்னை உள்ளவர் களுக்கு வலிப்பைத் தூண்டவும் வாய்ப்பிருக்கிறது. அதிக நேரம் போன் பயன்படுத்துவதால் மூளையில் கட்டி வரலாம் என்பது போன்ற தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன. அவற்றுக்கெல்லாம் பயப்படத் தேவை இல்லை என்றாலும், அதிக நேர போன் பயன்பாடு உடல்நலத்துக்கு உகந்ததல்ல என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

செல்போன் டேப்லெட் லேப்டாப் கம்ப்யூட்டர் - காத்திருக்கும் ஆபத்துகள்... கவனமாகக் கையாளும் வழிமுறைகள்!
ajijchan

நேரம், காலம் மறந்து, எல்லையைத் தாண்டி வீடியோ கேம் விளையாடும் குழந்தைகள், எதிர்மறை சிந்தனைகளோடு, குழந்தைத் தன்மை அற்று வன்முறையாளர்களாக வளர வாய்ப்புகள் அதிகம் என்பதால் குழந்தைகளின் ஆன்லைன் விளையாட்டுகளின் மீது பெற் றோருக்கு ஒரு கண் இருக்க வேண்டும்.

செல்போன் டேப்லெட் லேப்டாப் கம்ப்யூட்டர் - காத்திருக்கும் ஆபத்துகள்... கவனமாகக் கையாளும் வழிமுறைகள்!
செல்போன் டேப்லெட் லேப்டாப் கம்ப்யூட்டர் - காத்திருக்கும் ஆபத்துகள்... கவனமாகக் கையாளும் வழிமுறைகள்!
Prostock-Studio

கர்ப்பிணிகள் கேட்ஜெட்ஸ் பயன்படுத்தலாமா? - பெண்கள்நல மருத்துவர் நந்தினி, சென்னை

‘`கர்ப்ப காலத்தில் கேட்ஜெட் பயன்பாடு அளவுடன் இருக்க வேண்டும். கதிர்வீச்சில் Ionizing radiation, Non Ionizing radiation என இருவகை இருக்கின்றன. எக்ஸ்ரே, சி.டி ஸ்கேன் போன்றவற்றிலிருந்து வெளியேறுபவை Ionizing radiation. இது பெரும் விளைவை ஏற்படுத்தும் என்பதால்தான் கர்ப்பிணிகளுக்கு எக்ஸ்ரே, சி.டி ஸ்கேன் செய்யப் பரிந்துரைக்க மாட்டோம். தவிர்க்க முடியாமல் ஸ்கேன் செய்தே ஆக வேண்டிய நிலையிலும் கதிர்வீச்சு, குழந்தையைத் தாக்காதபடி ‘அப்டமன் ஷீட்’ (Abdomen sheet) போட்டுதான் செய்வோம். மொபைல் போன், வைஃபை, மைக்ரோ வேவ் ஓவன் போன்ற வற்றிலிருந்து வெளியேறுபவை Non Ionizing radiation. இது அவ்வளவு மோசமான விளைவுகளை ஏற்படுத்தாது என்றாலும் இதிலும் கவனமாக இருக்க வேண்டும்.

செல்போன் டேப்லெட் லேப்டாப் கம்ப்யூட்டர் - காத்திருக்கும் ஆபத்துகள்... கவனமாகக் கையாளும் வழிமுறைகள்!
tatyana_tomsickova

கருத்தரித்த பிறகான 2 முதல் 18 வாரங்கள் மிகவும் முக்கியமானவை. அந்தக் காலகட்டத்தில் இது போன்ற கதிர்வீச்சுகளை எதிர்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். இக்காலகட்டத்தில்தான் குழந்தையின் மூளை வளர்ச்சியடையும். அப்போது ஏற்படும் கதிர்வீச்சின் தாக்கத்தால் குழந்தையின் மூளை வளர்ச்சி மற்றும் உருவ ஒழுங்கில் பிரச்னை ஏற்படலாம். மொபைல் போன் தானே என்று பலரும் சாதாரணமாக நினைப்பார்கள். அந்த அலட்சியம் கூடாது.  

கட்டுப்பாடற்ற கேட்ஜெட் பயன்பாடு, பிறக்கவிருக்கும் குழந்தையின் நடத்தையில்கூட மாற்றத்தை உண்டாக்கலாம். வைஃபை ரவுட்டரிலிருந்து வெளியேறும் கதிர்வீச்சு, அரிதாகச்

சில நேரங்களில் கரு கலைவதற்கான காரணிகளில் ஒன்றாக அமையவும் வாய்ப்பிருக்கிறது. ஆகவே, வைஃபை ரவுட்டரை படுக்கையறையில் வைக்கக் கூடாது. பயன்படுத்தும் நேரம் தவிர்த்து மற்ற நேரங்களில் அணைத்து வைக்க வேண்டும். கர்ப்ப காலத்தில் மைக்ரோவேவ் ஓவன் மூலம் சமைத்த உணவை சாப்பிடுவதால் குழந்தை எடை குறைவாகவோ, குறைபாடுகளுடனோ பிறக்கக்கூடும் என்பதால் கர்ப்பிணிகள் அதைத் தவிர்க்கலாம்.

செல்போன் டேப்லெட் லேப்டாப் கம்ப்யூட்டர் - காத்திருக்கும் ஆபத்துகள்... கவனமாகக் கையாளும் வழிமுறைகள்!
Deepak Sethi

தொடர்ச்சியாக வேலை செய்யும்போது இடையிடையே ஓய்வெடுத்துக்கொள்ள வேண்டும். எழுந்து நடத்தல், ஸ்ட்ரெச்சிங் பயிற்சிகள் செய்தல் போன்றவற்றைப் பின்பற்றலாம். கர்ப்பிணிகள் லேப்டாப்பை மடியில் வைத்து வேலை செய்யக் கூடாது. ஏனென்றால் லேப்டாப்பிலிருந்து வெளியேறும் சூடு, குழந்தையைத் தாக்கும். கர்ப்பிணிகள் அதிக நேரம் மொபைல் பயன்படுத்துவதால் தூக்கமின்மை, மூளைச் சோர்வு, பதற்றம் ஆகியவை ஏற்படலாம். இதனால் குழந்தை ஹைப்பர் ஆக்டிவ்வாகப் பிறக்க வாய்ப்பிருப்பதாகவும், அவர்கள் உணர்வுகளைக் கட்டுக்குள் வைத்திருக்கத் தெரியாதவர்களாகவும், உறவுச் சிக்கல்களைக் கையாளத் தெரியாதவர்களாக வளரவும் வாய்ப்பிருப்பதாக ஆய்வுகள் சொல்கின்றன. எனவே, கர்ப்பிணிகள் கேட்ஜெட்களின் பயன்பாட்டைக் குறைத்துவிட்டு புத்தகம் வாசித்தல் போன்ற செயல்களில் ஈடுபடலாம். லேப்டாப், மொபைல் போன்ற கேட்ஜெட்களைக் குறிப்பிட்ட இடைவெளியில் வைத்துப் பயன் படுத்தலாம். மொபைலில் பேசும்போது ஹெட்போன் உபயோகிப்பது சிறந்தது.”

செல்போன் டேப்லெட் லேப்டாப் கம்ப்யூட்டர் - காத்திருக்கும் ஆபத்துகள்... கவனமாகக் கையாளும் வழிமுறைகள்!
செல்போன் டேப்லெட் லேப்டாப் கம்ப்யூட்டர் - காத்திருக்கும் ஆபத்துகள்... கவனமாகக் கையாளும் வழிமுறைகள்!
Deepak Sethi

விந்தணுக்கள் குறையலாம்... ஆண்மைக்குறைவு வரலாம்! - பாலியல் மருத்துவர் காமராஜ், சென்னை

“செல்போன், லேப்டாப் போன்ற கேட்ஜெட் பயன்பாட்டால் உடல் சூடாகிறது. சராசரியாக உடலின் வெப்பநிலை 37 டிகிரி செல்ஷியஸ் இருக்க வேண்டும். விந்துப்பையின் வெப்பநிலை 35 டிகிரிதான் இருக்க வேண்டும். கேட்ஜெட் களிலிருந்து வெளியாகும் கதிர்வீச்சின் (Electromagnetic radiation) காரணமாக குறிப்பிட்ட அளவைத்தாண்டி விந்துப்பை சூடாவதால் விந்தணுக்களின் எண்ணிக்கை குறைய வாய்ப்பிருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆகவே, கேட்ஜெட் பயன்பாட்டை கட்டுப் பாட்டுக்குள் வைக்க வேண்டும். கேட்ஜெட் பயன்பாடு காரணமாக ஆண்மைக்குறைவு ஏற்படும் என்பதற்கு நேரடியான எந்த அறிவியல்பூர்வ ஆதாரமும் இல்லை. இரவில் மெலட்டோனின் என்கிற ஹார்மோன் சுரப்பதால்தான் தூக்கமே வருகிறது. கேட்ஜெட்டிலிருந்து வரும் கதிர்கள், சூரியக் கதிர்கள் போன்று இருப்பதால் நமது மூளை பகலில் இருப்பதாகவே நினைத்துக் கொள்கிறது. இதனால் மெலட்டோனின் ஹார்மோன் சுரக்காமல் தூக்கமின்மை ஏற்படுகிறது. ஆகவேதான் தூங்குவதற்கு இரண்டு மணி நேரம் முன்பே டிவி மற்றும் மொபைல்போன் பார்ப்பதைத் தவிர்க்கச் சொல்கிறோம். நேரடியாக இல்லாவிட்டாலும் கேட்ஜெட் பயன்பாட்டின் விளைவாக ஏற்படும் தூக்கமின்மையால் ஆண்மைக் குறைவு போன்ற பாதிப்புகள் ஏற்படக்கூடும்.”

செல்போன் டேப்லெட் லேப்டாப் கம்ப்யூட்டர் - காத்திருக்கும் ஆபத்துகள்... கவனமாகக் கையாளும் வழிமுறைகள்!

உறவுகளைச் சிதைத்து, உயிர்களைப் பறிக்கும் கேட்ஜெட் கவர்ச்சி! - உளவியல் மருத்துவர் மோகன வெங்கடாசலபதி, சேலம்

“கேட்ஜெட்கள் நமது வாழ்வியலின் அங்கமாக மாறிவிட்ட பிறகு, அவற்றின் மூலம் ஏற்படும் புதிய புதிய உளவியல் பிரச்னைகள் கண்டறியப்பட்டு வருகின்றன. உதாரணத்துக்கு, செல்போன் பயன் பாட்டின் விளைவாக ஏற்படும் பிரச்னைகளில் நோமோபோபியா (Nomophobia) என்பது மிக முக்கியமானதாக இருக்கிறது. இப்பிரச்னைக்கு உள்ளானவர்களால் செல்போன் இல்லாமல்

ஒரு நிமிடத்தைக்கூட கடத்த முடியாது. சார்ஜ் குறைந்துவிடுமோ, போன் தொலைந்துவிடுமோ, முக்கியமான அழைப்பைத் தவற விட்டு விடுவோமோ என்கிற பதற்றத்திலேயே இருப்பார்கள். குளிக்கும்போதுகூட மொபைலை பக்கத்திலேயே வைத்துக்கொள்வார்கள். அதிக நேரம் செல்போன் பயன்படுத்துவதன் விளைவாக ஏற்படும் இந்தப் பிரச்னை ஒரு கட்டத்தில் சம்பந்தப்பட்டவரை பதற்ற நோயாளியாகவே மாற்றிவிடும் என்பதால் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

செல்போன் டேப்லெட் லேப்டாப் கம்ப்யூட்டர் - காத்திருக்கும் ஆபத்துகள்... கவனமாகக் கையாளும் வழிமுறைகள்!
Alessandro Biascioli

செல்போன் ரிங்டோன் ஒலிப்பது போல் நமக்குக் கேட்கும். எடுத்துப் பார்த்தால் அழைப்பே வந்திருக்காது. இது Phantom Vibration Syndrome எனப்படுகிறது. அதாவது, இல்லாத ஒன்றை இருப்பதாக உருவகித்துக்கொள்வது. எப்போது அழைப்பு வரும் என்ற பதற்றத்திலேயே இருப்பதால் ஏற்படும் விளைவு இது.

இணையம் இல்லாமல் கேட்ஜெட் இல்லை என்பதால் இணையத்தால் ஏற்படும் விளைவுகள் குறித்தும் இங்கே பேச வேண்டியது அவசியமாகிறது. சிறுவர்கள் மத்தியில் ஆன்லைன் கேம் அடிமைத்தனம் பூதாகரமான பிரச்னையாக உருவெடுத்து வருகிறது. பெற்றோர் அதன் தீவிரத்தை உணர்வதில்லை. எல்லாக் குழந்தைகளும்தானே விளையாடுகிறார்கள் என்று அலட்சியமாக இருந்துவிடுகிறார்கள். ஆன்லைன் கேம் அடிமைத்தனம் என்பது நாம் நினைத்துப் பார்த்திராத பேராபத்துகளை உண்டாக்குவது. விளையாடும் மும்முரத்தில் சாப்பிட மறந்து, உயிரைவிட்ட குழந்தைகள் இருக்கிறார்கள், பெற்றோரின் ஏ.டி.எம் கார்டை வைத்து ஆன்லைன் கேமுக்கு செலவழித்து லட்சங்களை இழந்த குழந்தைகள் இருக்கிறார்கள். கேம் விளையாடுவதற்கு இடையூறாக இருந்தவர்களைக் கொலைசெய்த குழந்தைகள்கூட இருக்கிறார்கள்.

செல்போன் டேப்லெட் லேப்டாப் கம்ப்யூட்டர் - காத்திருக்கும் ஆபத்துகள்... கவனமாகக் கையாளும் வழிமுறைகள்!
Blue Planet Studio

டிஜிட்டல் அடிக்‌ஷன்

வீடியோ கேம்கள் மிகப்பெரும் வன்மத்தை விளைவிக்கின்றன. இந்தியாவில் பப்ஜி தடை செய்யப்பட்டாலும் அதே போன்று வேறு கேம்கள் செயல்பாட்டில் இருந்து வருகின்றன. வி.பி.என் மூலம் வேறொரு நாட்டின் சர்வரைப் பயன்படுத்தி பப்ஜி விளையாடும் அளவுக்கு நம் குழந்தைகள் அப்டேட் ஆகியிருக்கிறார்கள்.

இது போன்ற ஆன்லைன் விளையாட்டுகளில் ஈடுபடும்போது மகிழ்ச்சியை உண்டாக்கும் `டோபமைன்' என்ற வேதிப்பொருள் சுரக்கிறது. அதுதான் அவர்களை அதற்கு அடிமையாக்கு

கறது. குடிப்பழக்கத்துக்கு அடிமையானவர்களை மீட்கும் மையங்களைப் போல், டிஜிட்டல் அடிமைத்தனத்துக்கு ஆளானவர்களை மீட்கும் மையங்கள் வெளிநாடுகளில் தொடங்கப்பட்டு விட்டன. கூடிய விரைவில் இந்தியாவிலும் அவை தொடங்கப்பட வாய்ப்புகள் இருக்கின்றன.  

குழந்தைகளைக் கண்காணிக்கும் பொறுப்பில் இருந்து தப்பிக்க அவர்கள் கையில் போனைக் கொடுத்துவிடுகிறார்கள். செல்போன் பார்த்தபடி குழந்தை எந்தச் சேட்டையும் செய்யாமல் அமைதியாக இருந்துவிடும் என்பதுதான் காரணம். குழந்தையிலிருந்தே செல்போனின் கவர்ச்சிக்கு ஆட்பட்டு வளரும்போது பின்னாளில் என்னென்ன விதமான பிரச்னை களுக்கு ஆளாகும் என்பதை யாரும் யோசிப்ப தில்லை.

செல்போன் டேப்லெட் லேப்டாப் கம்ப்யூட்டர் - காத்திருக்கும் ஆபத்துகள்... கவனமாகக் கையாளும் வழிமுறைகள்!
Shelyna Long

செல்போன் பயன்பாட்டாளர்களுக்கு தனி பாதை!

Phone Snubbing என்பதன் சுருக்கமான Phubbing மொபைல் போன் பயன்பாட்டின் முக்கிய விளைவாக இருக்கிறது. செல்போன் பயன்பாட்டில் தீவிரமாக மூழ்கி விடுவதன் விளைவாக எதிரில் இருப்பவர்களைக் கண்டு கொள்ளாமல் உதாசீனப்படுத்து வதன் பெயர்தான் Phubbing. நேரில் இருப்பவர்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்ளாமல், அவர்களுடன் உரையாடாமல் செல்போன் பயன் படுத்துவதிலேயே மும்முரமாக இருக்கிறார்கள் பலரும். கணவன் – மனைவி உறவில்கூட இப்பிரச்னை ஏற்படுகிறது. `என்னைவிட போன் முக்கியமா?' என்ற கேள்வியை இணையர் கேட்குமளவு மூழ்கிப் போய்விடுகின்றனர். சீனாவில்

ஒரு மாகாணத்தில் போன் பார்த்துக் கொண்டே குனிந்தபடி நடந்து செல்வதால் விபத்துகள் ஏற்படுகின்றன என்பதால், செல்போன் பயன் பாட்டாளர்களுக்கென்றே தனியொரு பாதை அமைக்கப்பட்டிருக்கிறது. குனிந்தபடியே செல்கிறவர்களுக்காக ஒரு நாட்டில் தரையிலேயே சிக்னல் பொருத்தப்பட்டிருக்கிறது. கேட்ஜெட் பயன்பாட்டின் அடிமைத்தனம் இந்த நிலையில் வந்து நிற்கிறது.

செல்போன் டேப்லெட் லேப்டாப் கம்ப்யூட்டர் - காத்திருக்கும் ஆபத்துகள்... கவனமாகக் கையாளும் வழிமுறைகள்!
Pornpak Khunatorn

தீர்வுகள்...

அதீத பயன்பாடு என்றைக்குமே ஆபத்தானதுதான் என்கிற உண்மையை மனதில் பதிய வைத்துக்கொள்ளுங்கள். செல்போனில் உள்ள தேவையற்ற அப்ளிகேஷன்களை நீக்கிவிடுங்கள். எந்நேரமும் நோட்டிஃபிகேஷன் வந்து கொண்டிருப்பது நம்மை ஒருவித பதற்றத்திலேயே வைத்திருக்கும். ஆகவே நோட்டிஃபி கேஷனை ஆஃப் செய்து விடுங்கள். ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளப் பயன்பாட்டில் மூழ்கிவிட்டீர்கள் என்றால் அதிலிருந்து மீண்டு வர எளிய வழி அப்ளிகேஷனை அன் இன்ஸ்டால் செய்வதுதான்.

எந்த ஒரு கேட்ஜெட்டும் அதன் கவர்ச்சியின் மூலம் நம்மை எளிதில் சுவீகரித்துக்கொள்ளும். நாம்தான் தெளிவுடன் இருக்க வேண்டும்.”

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
செல்போன் டேப்லெட் லேப்டாப் கம்ப்யூட்டர் - காத்திருக்கும் ஆபத்துகள்... கவனமாகக் கையாளும் வழிமுறைகள்!
ShikharBhattarai

20-20-20

கண்களைச் சிமிட்டிக்கொண்டே இருந்தால்தான் கண்ணீர் உற்பத்தி யாகி பார்வை தெளிவாகத் தெரியும். கேட்ஜெட் பயன்பாட்டின் தீவிரத் தால் நாம் கண் சிமிட்ட மறந்து தொடர்ச்சியாகத் திரையைப் பார்க் கிறோம். கண் மருத்துவத்தில் 20–20-20 விதியைப் பின்பற்றும்படி வலியுறுத்துவோம். அதாவது, தொடர்ச்சியாக 20 நிமிடங்கள் கம்ப் யூட்டர் / மொபைல் திரையைப் பார்க்கிறோம் என்றால் அதையடுத்து 20 நொடிகள், 20 அடி தொலை விலுள்ள காட்சியைப் பார்க்க வேண்டும். தவிர அவ்வப்போது கைகள் இரண்டையும் சூடு பறக்கத் தேய்த்து கண்களை மூடியபடி வைத்துக்கொள்ளலாம்.

செல்போன் டேப்லெட் லேப்டாப் கம்ப்யூட்டர் - காத்திருக்கும் ஆபத்துகள்... கவனமாகக் கையாளும் வழிமுறைகள்!
Deepak Sethi

டிப்ஸ்

நீண்ட நேரம் டைப் செய்வதால் பிரச்னை வருகிறது என்பதால் வாய்ஸ் மெசேஜ் அனுப்பலாம்.

லேப்டாப்பை மடியில் வைத்துப் பயன்படுத்தாமல் டேபிளில் வைத்து அதையும் டெஸ்க்டாப் போல் பயன்படுத்தலாம்.

முதுகுக்கு மேல் இருக்கும்படியான சாய்வு நாற்காலியைப் பயன்படுத்த வேண்டும். இருபுறமும் கைகளை வைத்துக் கொள்ளும்படியான ஹேண்ட் ரெஸ்ட் (Hand rest) இருக்க வேண்டும்.

உட்கார்ந்திருக்கும் நிலையில் கைகளுக்கு நேர்க்கோட்டிலோ, சற்று மேலோ கீபோர்டு இருக்கலாம். அதற்கும் மேலே இருக்கையில் கையைத் தூக்கியே வைத்து பணிபுரிய வேண்டிய சூழல் வரும்போது தோள்பட்டையில் தசைப்பிடிப்பு ஏற்படலாம்.

செல்போன் டேப்லெட் லேப்டாப் கம்ப்யூட்டர் - காத்திருக்கும் ஆபத்துகள்... கவனமாகக் கையாளும் வழிமுறைகள்!

பெற்றோருக்கான டிப்ஸ்... மனநல மருத்துவர் ஜெயந்தினி, சென்னை

“இன்று சிறு குழந்தைகள்கூட கேட்ஜெட்களின் பிடியில் சிக்கிக்கிடக்கிறார்கள். இணையத்தை 25 வயது நிரம்பியவர்கள் பயன்படுத்துவதைவிட, 15 வயதிலேயே குழந்தைகள் அதிக நுணுக்கத்துடன் பயன்படுத்தத் தொடங்கிவிடுவதாக யுனிசெஃப் (UNICEF) ஆய்வு ஒன்று தெரிவித்திருக்கிறது. இணையமும் கேட்ஜெட்ஸும் நன்மைகளை மட்டுமே தருவதில்லை; தீமைகளும் உண்டு. குறிப்பாக, ‘டிஜிட்டல் மூளை’ நிறைந்த குழந்தைகள் இந்தச் சமூகத்தில் சந்திக்கும் நான்கு முக்கியமான பிரச்னைகள் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தும்.

உடல்ரீதியான பிரச்னைகள்...

உளவியல் சிக்கல்கள்...

நன்னடத்தையில் பாதிப்பு

சமூகத்துடன் ஒன்றிப்போக முடியாமல் எதிர்கொள்ளும் பிரச்னைகள்.

செல்போன் டேப்லெட் லேப்டாப் கம்ப்யூட்டர் - காத்திருக்கும் ஆபத்துகள்... கவனமாகக் கையாளும் வழிமுறைகள்!
fizkes

கேட்ஜெட்ஸ், மொபைல் பயன்படுத்தும் பழக்கத்துக்கு அடிமை யான குழந்தைகளைக் கொஞ்சம் கொஞ்சமாக அவற்றிலிருந்து விடுவிக்க வேண்டும். திடீரென ஒரே நாளில் அவை அனைத்தையும் அவர்களிடமிருந்து பறிப்பது தவறு. அப்படியான அதிரடி நடவடிக்கைகள் அவர்களை மிகவும் மூர்க்கத்தனமாகவோ, அதீத மன இறுக்கத்துடனோ செயல்பட வைக்கும்.

இன்றைய சூழலில் கார்ட்டூன்கள் பலவற்றில் சண்டைக் காட்சிகள் மிக எளிமையாகவும் எதிர்த்துப் பேசும் வசனங்கள் இயல்பாகவும் காட்டப்படுகின்றன. அவை குழந்தைகளின் நடத்தையை பாதிக்கக்கூடும். எனவே, கார்ட்டூன் அதிகம் பார்க்கும் குழந்தைகள் மீது, பெற்றோர் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். குழந்தைகளுடன் உட்கார்ந்து பேசி, நன்னடத்தையின் முக்கியத் துவத்தை சொல்லித்தர வேண்டும்.

பதின்பருவக் குழந்தைகளின் கைகளில் `ஸ்மார்ட்போன்’ கொடுக்கும் பெற்றோர், அவர்களது `பிரவுசிங் ஹிஸ்ட்ரி’யை (Browsing History) தினமும் கண்காணிக்க வேண்டும். குழந்தைகளின் இணையவழித் தேடல்கள், செயல்கள் என அனைத்தும் பெற்றோரால் கண்காணிக்கப்பட வேண்டும்.

செல்போன் டேப்லெட் லேப்டாப் கம்ப்யூட்டர் - காத்திருக்கும் ஆபத்துகள்... கவனமாகக் கையாளும் வழிமுறைகள்!
MesquitaFMS

சரியான வழிமுறையில் கேட்ஜெட்ஸை எப்படி, எங்கே, எதற்காகப் பயன்படுத்துவது, ஆக்கபூர்வமான தகவல்களை எப்படிச் சேகரிப்பது என்று சொல்லிக் கொடுக்கவேண்டியது அவசியம்.

குழந்தைகளிடம் `இதைச் செய்தால், இத்தனை மணி நேரம் உனக்கு போன் தருவேன்’ என்று சொல்லி, எந்த வேலையையும் வாங்கக் கூடாது. அப்படி நிர்பந்தம் செய்தால், ‘போன் கிடைக்குமா?’ என்ற எதிர்பார்ப்புடனே இருப்பார்களே தவிர, ‘என்ன வேலை செய்கிறோம்’ என்பதில் கவனம் இருக்காது. இது அவர்களிடையே கவனச்சிதறலை ஏற்படுத்தும்.

ஒரு நாளில் எவ்வளவு நேரத்தை கேட்ஜெட்ஸ், இணையத்துக்குச் செலவிட வேண்டும் என்பதைப் பெற்றோர் முடிவுசெய்ய வேண்டும். அதை வலுக்கட்டாயமாக அவர்கள் மீது திணிக்காமல், அறிவுரையாகச் சொல்லிக் கொடுக்க வேண்டும்.

குழந்தைகளுக்கு எது நிஜம், எது கற்பனை என்பதைக் கண்டறிவதில் சிக்கல் இருக்கும். சிலர் இரண்டையும் குழப்பிக்கொள்வார்கள். உதாரணமாக டி.வி-யில் பார்க்கும், வீடியோ கேம்ஸில் செய்யும் சாகசங்களை நிஜத்திலும் செய்ய முயற்சி செய்வார்கள். எனவே சண்டைக் காட்சி, சோகக் காட்சிகளைப் பார்க்கும்போதும் அவற்றைப் பார்த்த பிறகும் அவர்கள் எப்படி `ரியாக்ட்’ செய்கிறார்கள் என்பதை கவனியுங்கள். அதீத உணர்ச்சி களை உள்வாங்கிக்கொண்டு அப்படியே செய்வது, சட்டென பயந்து நடுங்குவது, அழுவது, நீண்ட யோசனைக்குள் செல்வது போன்ற எந்தத் தீவிர நிலைக்கு அவர்கள் சென்றாலும், அதிலிருந்து அவர்களை மீட்டு நிஜ உலகுக்குக் கொண்டு வாருங்கள்.

எந்தச் சூழலிலும், குழந்தைகள் மீது நீங்கள் வைக்கும் நம்பிக்கையை இழக்காதீர்கள். குழந்தை தவறு செய்தால், அதனால் ஏற்பட்ட விளைவுகளை எடுத்துச் சொல்லுங்கள். பாதிக்கப்பட்டவரின் நிலையை குழந்தைக்குத் தெரிவித்து, மன்னிப்பு கேட்கச் சொல்லி அறிவுறுத்துங்கள். குழந்தையின் மீது தவறு இல்லையென்றால், குழந்தையின் தரப்பில் நின்று அவர்களுக்கு உறுதுணையாக இருங்கள். வன்முறையைக் கையில் எடுக்காமல், பிரச்னையை மிகவும் நிதானமாகக் கையாளுங்கள்.''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism