Published:Updated:

2019-ல் அதிக வருமானம் ஈட்டிய கேம்கள் மற்றும் தளங்கள்! #VikatanInfographics

வீடியோ கேம்களிலே மொபைல், கணினி மற்றும் கன்சோல் என விளையாடப் பல தளங்கள் உள்ளன. இவற்றுள் நான்கு லட்சம் கோடி வருமானத்துடன் முதல் இடத்தில் இருப்பது மொபைல் பிளாட்ஃபார்ம்தான்

Game
Game

சினிமாவைப் போலவே உலகமெங்கும் வீடியோ கேம்களுக்கும் தனி ரசிகர் பட்டாளம் உண்டு. டெக்னாலஜி வளர வளர கேமிங் அனுபவங்களிலும் பல புதுமையான யுக்திகள் அறிமுகமாகிக்கொண்டே இருக்கின்றன. நாம் தினந்தோறும் பொழுதுபோக்குக்காக விளையாடும் கேம்களின் மூலம், கோடிகளில் வருமானத்தைக் குவிக்கின்றன வீடியோ கேம் நிறுவனங்கள். 2019-ல் அதிக வருமானத்தை ஈட்டிய கேம்கள் எவை என்பதைப் பார்க்கலாம்.

வீடியோ கேம்களிலே மொபைல், கணினி மற்றும் கன்சோல் என விளையாடப் பல தளங்கள் உள்ளன. இவற்றுள் நான்கு லட்சம் கோடி வருமானத்துடன் முதல் இடத்தில் இருப்பது மொபைல் பிளாட்ஃபார்ம். இரண்டு லட்சம் கோடி வருவாயுடன் கணினியும், ஒரு லட்சம் கோடி வருவாயுடன் கேமிங் கன்சோல்களும் அதற்கு அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

video game revenue 2019
video game revenue 2019
VikatanInfographics
வீடியோ கேம் விளையாடுவது படைப்பாற்றலை அதிகரிக்குமா? - ஆய்வில் புதிய தகவல்!  

இந்தியாவில் வளர்ந்து வரும் வணிகமாகவே கேமிங் பார்க்கப்படுகிறது. 2010-ம் ஆண்டில் 25 கேமிங் நிறுவனங்களே இந்தியாவில் இருந்தன. ஆனால், தற்போது 250-க்கும் மேல் கேமிங் நிறுவனங்கள் உள்ளன. தொடர்ந்து வளர்ந்து வருவதால் பல முன்னணி நிறுவனங்களும் இந்திய கேமிங் துறையில் ஆர்வமுடன் முதலீடு செய்கின்றனர். 2012-க்குப் பின்னர் பெருகிய அபரிமித ஸ்மார்ட் போன் பயன்பாடும் இந்திய கேம் சந்தையை வளர்ந்து வரும் வணிகமாக மாற்றியது. இந்தியாவும் ஸ்மார்ட் போன் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 81 கோடியாக உள்ளது. இந்தியா உள்ளிட்ட தெற்காசிய நாடுகளில் கேம் மூலம் கிடைத்த வருவாயிலும் இரண்டு லட்சம் கோடி ரூபாயுடன் மொபைலே முடலிடத்தில் உள்ளது.

smarphone usage
smarphone usage
VikatanInfographics

2019-ல் அதிக வருவாயாக 12,916 கோடி ரூபாய் ஈட்டி Fortnite கேம் முதலிடத்தில் உள்ளது. உலகமெங்கும் பிரபலமான கேம்களான Candy Crush Saga-ம், Pokemon Go-ம் 10,764 கோடி மற்றும் 10,046 கோடியுடன் முறையே நான்கு மற்றும் ஐந்தாம் இடங்களில் உள்ளன. ஆன்லைன் கேமிங்கைப் பொறுத்தவரை அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக அதிக பயனர்களுடன் இந்தியாவே இரண்டாம் இடத்தில் உள்ளது. அதற்கு அடுத்த இடங்களில் சீனா, பிரேசில் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் உள்ளன. தற்போது இந்தியாவில் 628 மில்லியன் பயனர்கள் கேமிங்கில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தாண்டு இந்த பயனர்களின் எண்ணிக்கை ஒரு பில்லியனைத் தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

`விளம்பரமில்லாமல் மொபைல் கேம்ஸ்…!’ - கூகுளின் புதிய முயற்சி
Internet usage
Internet usage
VikatanInfographics

மொத்தமாக கேமிங்கைப் பொறுத்தவரை மொபைல்தான் மாஸ் என்றாலும், உலகில் மிகவும் பிரபலமான PubG-ன் வருவாயில் 81 சதவிகிதம் கணினியின் மூலம் வந்ததுதான். 2019-ல் PubG கணினியின் மூலம் 790 மில்லியன் அமெரிக்க டாலர் வருவாய் ஈட்டியுள்ளது. அதே நேரத்தில் மொபைலின் மூலம் ஈட்டிய வருமானமோ 65 மில்லியன் அமெரிக்க டாலர்தான். இதுதவிர கேமிங் மூலமாக யூடியூப் கேமிங் வீடியோக்களும் கடந்தாண்டு அதிகரித்துள்ளன. கேம் விளையாடுபவர்களில் 61 சதவிகிதம் பேர் அது தொடர்பான வீடியோக்களை இணையதளங்களில் பார்க்கின்றனர் என்கிறது ஒரு தரவு.

இந்தியாவில் கேமிங்கில் 21 வயது முதல் 35 வயது வரை உள்ளவர்களே அதிகளவு விளையாடுகின்றனர்.

இவையனைத்தும் சேர்த்துதான் கேமிங்கை உலகளவில் வளர்ந்து வரும் வணிகமாக மாற்றியுள்ளது.