Published:Updated:

கடன், டெலிவரி முதல் எக்ஸ்சேஞ்ச் வரை... `மண்டி' App-ல் என்னதான் இருக்கிறது? #Walkthrough

மண்டி | Mandee

விஜய் சேதுபதியை வைத்து ஒரு விளம்பரம் எடுத்து, மக்களின் கவனம் ஈர்த்திருக்கும் மண்டி, வணிகர் சங்கத்தின் எதிர்ப்பையும் சந்தித்திருக்கிறது. அப்படி என்னதான் இந்த ஆப்பில்?

கடன், டெலிவரி முதல் எக்ஸ்சேஞ்ச் வரை... `மண்டி' App-ல் என்னதான் இருக்கிறது? #Walkthrough

விஜய் சேதுபதியை வைத்து ஒரு விளம்பரம் எடுத்து, மக்களின் கவனம் ஈர்த்திருக்கும் மண்டி, வணிகர் சங்கத்தின் எதிர்ப்பையும் சந்தித்திருக்கிறது. அப்படி என்னதான் இந்த ஆப்பில்?

Published:Updated:
மண்டி | Mandee

கற்காலத்திலிருந்து இன்றைய டிஜிட்டல் யுகம் வரை மனிதன் மட்டுமில்லாமல் அவன் செய்துவந்த வணிக முறைகளும் மாறிக்கொண்டேதான் வந்திருக்கின்றன. பணம் கண்டுபிடிக்கப்படுவதற்கு முன், பண்டமாற்று முறையில் நாம் வணிகம் செய்துகொண்டிருந்தோம். பின்னர், ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு விலையை நிர்ணயித்து சந்தைகளிலும் தனிக்கடைகளிலும் வியாபாரம் செய்யத் தொடங்கினோம். அதன்பிறகு, சூப்பர் மார்க்கெட்டுகள் பெருக, இந்த வணிகம் வேறொரு தளத்தை நோக்கி நகர்ந்தது. இன்று, தொழில்நுட்பத்தின் அபார வளர்ச்சியின் காரணமாக ஆன்லைன் சந்தைகளில் வணிகம் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கிறது. பல பெரிய நிறுவனங்கள் ஆழம்பார்த்துக்கொண்டிருக்கும் இந்த ஆன்லைன் வணிகத்தில், சமீபத்தில் கால்வைத்திருக்கும் நிறுவனம்தான் `மண்டி'.

மண்டி | Mandee
மண்டி | Mandee
விஜய் சேதுபதியை வைத்து ஒரு விளம்பரம் எடுத்து, மக்களின் கவனம் ஈர்த்திருக்கும் மண்டி, வணிகர் சங்கத்தின் எதிர்ப்பையும் சந்தித்திருக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

என்ன செய்கிறது மண்டி?

மண்டி | Mandee
மண்டி | Mandee

அடிப்படையில், `மண்டி' மற்ற டிஜிட்டல் சேவைகள் போன்றதுதான். ஆனால் அமேசான், ஃப்ளிப்கார்ட், ஸ்விகி போல மண்டி Business-to-Consumer (B2C) சேவை கிடையாது. மாறாக, இது ஒரு Business to Business (B2B) சேவை. அதாவது, விற்பனை செய்பவரிடம் வணிகம் செய்யும் சேவை. இங்கு, எல்லா பொருள்களையும் கொள்முதல் விலையிலேயே வாங்கமுடியும். நீங்கள் எந்த வியாபாரம் செய்வதாக இருந்தாலும் உங்களுக்குத் தேவையான பலசரக்கு பொருள்கள் அனைத்தும் கிடைக்கும் ஒரே இடமாக இருக்கிறது மண்டி. மண்டியின் இணையதளம் அல்லது ஆப்பிற்கு சென்றால், முதலில் நீங்கள் மண்டியை எப்படிப் பயன்படுத்தப்போகிறீர்கள் என்று கேட்கும். பொருள்கள் வாங்குபவராக இருந்தால், விற்பனையாளர் (சிறு கடைகள்), பெரும் விற்பனையாளர் (சூப்பர் மார்க்கெட்), Horeca (Hotel, Restaurent, Cafe), இனிப்பு மற்றும் கார வகைகள் விற்கும் கடை என்ற பிரிவுகளில் ஏதேனும் ஒன்றை தேர்வுசெய்வதாக இருக்கும். மண்டியில் மொத்தமாகப் பொருள்கள் விற்கப்போகிறீர்கள் என்றால், மொத்தவிலை விற்பனையாளர் (Wholesale), விநியோகிப்பாளர் (Distributor), பொருள் சேமிப்புக் கிடங்கு வைத்திருப்பவர் (Superstockist), உற்பத்தியாளர் (Manufacturer) என்ற பிரிவுகளில் ஏதேனும் ஒன்றை தேர்வுசெய்வதாக இருக்கும்.

இப்படி வணிகம் சார்ந்த அனைவரையும் இணைக்கும் பாலம்தான் `மண்டி'. பெங்களூரைத் தலைமை இடமாகக் கொண்டு செயல்படும் இதில், தற்போது பொன்னி, ராஜபோகம், மணச்சநல்லூர், சோனா மசூரி, சீரகச் சம்பா போன்ற அரிசி வகைகள் கிடைக்கின்றன. மேலும், கடலைமாவு , சிறுதானிய வகைகள், துவரம் பருப்பு, உளுந்தம் பருப்பு, பட்டாணி, சர்க்கரை, உப்பு, வெல்லம், உலர் திராட்சைகள் ஆகியனவும் கிடைக்கின்றன. நூடுல்ஸ், சேமியா போன்ற உணவு வகைகளும் மற்றும் இதர மசாலா பொருள்களும்கூட கிடைக்கின்றன. இவை எல்லாமே கொள்முதல் விலையிலேயே தரப்படுகின்றன. இவற்றைப் பெருமளவில் வாங்க முடியும்.

மண்டி | Mandee
மண்டி | Mandee

மற்ற டிஜிட்டல் சேவைகளைப் போல மண்டியிலும் பொருள்களை ஆர்டர் செய்த பின்னர், அவற்றை உங்கள் அக்கவுன்ட்டில் சென்று ட்ராக் செய்ய முடியும். தற்போதைக்கு, பொருள்கள் வாங்கிய ஏழு நாட்களுக்குப் பிறகு பணம் செலுத்தும் வகையில் இதில் கடன் வசதி உள்ளது. ஆனால், இது உங்களின் நம்பகத்தன்மைக்கேற்ப அதிகமாக்கப்படலாம் என மண்டி நிறுவனம் கூறுகிறது. மேலும், ஆயிரம் ரூபாய்க்கு மேல் ஆர்டர் செய்யப்படும் பொருள்களுக்கு டெலிவரி சார்ஜ் வாங்கப்படுவதில்லை. மண்டியில் ஆர்டர் செய்த பொருள்கள், இரண்டு நாட்களில் உங்கள் இருப்பிடத்திற்கு வந்து சேரும். பொருள்களை ஆர்டர் செய்தபின், அந்த ஆர்டர் முழுவதுமாக ப்ராசஸ் ஆக்குவதற்கு முன்வரை கேன்சல் செய்து கொள்ளலாம். வாங்கிய பொருட்களை டெலிவரி செய்யப்பட்ட ஏழு நாள்களுக்குள் திருப்பி அனுப்பலாம் (return) அல்லது மற்ற பொருளுக்கு பரிமாற்றிக் (exchange) கொள்ளலாம்.

நீங்கள் வாங்கிய பொருள்கள் சேதமடைந்திருந்தலோ அல்லது நல்ல நிலையில் இல்லாமல் இருந்தாலோ, மண்டிக்கு திருப்பி அனுப்பி விடலாம். அதற்குரிய பணம் அல்லது இணையான பொருள்களை இதற்காகப் பெற்றுக்கொள்ளலாம். அருகில் இருக்கும் கொள்முதல் சந்தைகளில் கிடைக்கக்கூடிய பொருள்களைவிடக் குறைவான விலையில், உயர்ந்த தரத்தில் மண்டியில் பொருள்களை வாங்கலாம் என்கிறது இந்த ஆப். அதோடு மட்டுமல்லாமல், ஒரே பொருளைப் பல்வேறு வகையிலும், தரத்திலும் இங்கு பெறமுடிகிறது. பொருள்களைத் தேடி அலையாமல் உங்கள் வியாபாரத்திற்குத் தேவையான பொருள்கள் அனைத்தையும் இதிலேயே சுலபமாகப் பெறலாம்.

யார் வேண்டுமானாலும் `மண்டி'யில் பொருள்கள் வாங்கலாமா?

இல்லை, மேலே குறிப்பிட்ட பிரிவுகளில் ஏதேனும் ஒன்றில் நீங்கள் பொருந்திப்போவீர்கள் என்றால்தான் மண்டியில் பர்ச்சேஸ் செய்ய முடியும். இதற்காக, அக்கவுன்ட் தொடங்கப்பட்ட உடனே உங்களிடம் ஆவணங்கள் சிலவற்றை சமர்ப்பிக்கச் சொல்கிறது மண்டி. இதற்குப்பின் போன் வழியே வாடிக்கையாளர் மையம் மூலமும் நீங்கள் வெரிஃபை செய்யப்படுவீர்கள். ஆனால், தற்போது பலரும் மண்டியில் சேர்ந்துவருவதால், அழைப்பு வர தாமதமாகலாம் என்று மண்டியிலிருந்தே நமக்கு குறுஞ்செய்தி வருகிறது.

மண்டி | Mandee
மண்டி | Mandee

சிறு மற்றும் குறு வணிகம் செய்பவர்களை இந்தச் சேவை பெரிதும் கவரும் என நம்புகிறது `மண்டி'. பொருள்கள் எல்லாம் பெரும்பாலும் விவசாயிகளிடமிருந்து நேரடியாகப் பெறப்படுவதாகவும் அந்த நிறுவனம் தெரிவிக்கிறது. பொருள்கள் வாங்கும்போது ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால், ஆப்பில் இருக்கும் மொபைல் எண்ணுக்கு அழைத்தோ சாட் வசதியில் மெசேஜ் செய்வதன் மூலமோ வாடிக்கையாளர் தொடர்பு மையத்தைத் தொடர்புகொள்ள முடியும். மொத்தத்தில் ஏற்கெனவே வியாபாரம் செய்பவர்களுக்கும் சரி, புதிதாக மளிகைக் கடை, சூப்பர் மார்க்கெட் என ஆரம்பிப்பவர்களும் பொருள்கள் வாங்கும் வேலையை எளிமையாக்குகிறோம் என்கிறது இந்த `மண்டி'.