Published:Updated:

TrueCaller ஆப் உங்களிடமிருந்து என்னென்ன எடுக்கிறது தெரியுமா? #DoubtOfCommonMan

TrueCaller
TrueCaller

உங்கள் மொபைலின் IP Address, மொபைல் மாடல் எண் மற்றும் அடையாள எண், நமது Call History மற்றும் Messages போன்ற தகவல்களை TrueCaller App சேகரிக்கிறது.

விகடனின் #DoubtOfCommonMan பக்கத்தில், ``TrueCaller எப்படி வேலை செய்கிறது? யார் அதை இயக்குகிறார்கள்?" என்ற கேள்வியை எழுப்பியிருந்தார், சரவணன் என்னும் வாசகர். அந்தக் கேள்வியின் அடிப்படையில் எழுதப்பட்ட கட்டுரை இது.

இன்று, உலகில் 15 மில்லியனுக்கும் மேற்பட்ட பயனர்கள் பயன்படுத்தும் ஆப் `Truecaller'. Android மற்றும் iOS-ல் இலவசமாகக் கிடைக்கும் இந்த ஆப், நமக்குத் தெரியாத நம்பரில் இருந்து யாரேனும் அழைத்தால், அவர்களின் பெயர், இடம் போன்ற தகவல்களைச் சொல்லிவிடும். ஆனால், TrueCaller App எப்படி நமது கான்டக்ட்டில் இல்லாத நபரின் பெயர், இடம் உள்ளிட்ட தகவல்களைக் காட்டுகிறது? எவ்வாறு அந்தத் தகவல்களைப் பெறுகிறது? போன்ற கேள்விகளுக்குப் பதில், அவர்களின் Privacy Policy-யிலேயே தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.

Doubt of common man
Doubt of common man
முதலில் TrueCaller ஆப்பை இன்ஸ்டால் செய்தவுடன், உங்களுடைய மொபைல் எண் மற்றும் பெயர்கள் மட்டுமல்லாது, நீங்கள் சேமித்து வைத்திருக்கும் நபர்களின் மொபைல் எண்களையும் பெயர்களையும் பெற்றுக்கொள்ள அனுமதி கேட்கிறது.

நாம் அதற்கு Access தரவில்லை என்றால், ஆப் இயங்காது. அதனால் நாம் கண்டிப்பாக நமது Contact List, Call History மற்றும் Messeges Data போன்ற தரவுகளை Truecaller எடுத்துக்கொள்ள அனுமதி தரவேண்டும். நம்மிடம், பெற்றுக்கொண்ட அனைத்து தகவல்களும் TrueCaller சர்வரில் அப்லோடு செய்யப்படுகிறது. பிறகு, எவரேனும் மொபைல் எண் குறித்த தகவல்களைத் தேடும்போது, நம்மிடமிருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களைத் தேடுபவர்களுக்குக் கொடுக்கிறது.

TrueCaller
TrueCaller
ட்ரூகாலர் அப்டேட்டில் இருந்த`பக்’ - நடவடிக்கை எடுத்த என்.பி.சி.ஐ! #NPCI

TrueCaller App எந்த மாதிரியான விவரங்களைச் சேகரிக்கிறது என்று அதன் Privacy Policy-ல் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. அதன்படி உங்கள் மொபைலின் IP Address, மொபைல் மாடல் எண் மற்றும் அடையாள எண், நமது Call History மற்றும் Messages போன்ற தகவல்களை TrueCaller App சேகரிக்கிறது. பின், சேகரித்த தகவல்களை அதன் நம்பகமான மூன்றாம் தரப்பு நிறுவனங்களிடம் பகிர்ந்துகொள்வதாகத் தனது Privacy Policy-ல் கூறியுள்ளது TrueCaller. ஆனால், இங்கு பிரச்னை என்னவென்றால், அந்த மூன்றாம் நிலை நிறுவனங்கள்தான் நமக்கு தினமும் call செய்து தொந்தரவு செய்கின்ற Spam அழைப்புகள். மேலும் நம்முடைய பெயர் மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்கள் பொது வெளியில் இருப்பது ஆபத்தானதுதான். அதனால், முடிந்தவரை இம்மாதிரியான செயலிகளை உபயோகிக்காமல் இருப்பது நல்லது என்கின்றனர் டெக் வல்லுநர்கள்.

சரி, எப்படியோ நம் தகவல்களைப் பெற்றுவிட்டார்கள். அதை அழிக்க வழி இருக்கா? என்று கேட்டால், நிச்சயமாக முடியும் என்கிறார்கள் Truecaller தரப்பினர். https://www.truecaller.com/unlisting என்ற இந்த லிங்க்கில் சென்று நமது மொபைல் எண்ணைக் கொடுத்து, நமது தகவல்களை TrueCaller-ல் காட்டிடாமல் செய்துகொள்ள முடியுமாம்.

Doubt of common man
Doubt of common man

TrueCaller மட்டுமல்ல, நாம் பயன்படுத்துகின்ற ஒவ்வொரு ஆப்பும் நம்மிடமிருந்து தகவல்களைப் பெற முயற்சி செய்துகொண்டேதான் இருக்கின்றன. ஆகவே, ஒவ்வொரு ஆப்பையும் Install செய்யும்போது மிகவும் கவனமாக அனுமதிகளை (Permissions) கொடுத்திட வேண்டும். சில ஆப்ஸ் தேவையே இல்லாமல் நமது Contacts, Call Logs, Messages போன்றவற்றை Access செய்வதற்கு Permission கேட்கும். அவற்றையெல்லாம் கவனிக்காமல் ஓகே கொடுத்துவிடக் கூடாது. முடிந்த வரை தெரியாத ஆப்களை ப்ளே ஸ்டோர் அல்லாத இடங்களிலிருந்து இன்ஸ்டால் செய்வதைத் தவிர்த்தல் நன்று.

இதேபோல விகடனின் #DoubtOfCommonman பக்கத்தில் கேட்க உங்களிடம் கேள்விகள் இருந்தால், இந்தப் படிவத்தில் பதிவுசெய்யவும்.

அடுத்த கட்டுரைக்கு