Published:Updated:

அதிகரிக்கும் அடல்ட் பதிவுகள்... சைபர் புள்ளியிங்... சவால்களை எப்படி எதிர்கொள்ளப்போகிறது ஃபேஸ்புக்?

Facebook
Facebook

90'ஸ் கிட்ஸ்களின் பேவரைட்டாகத் தான் பேஸ்புக் இருக்கிறது. 2k கிட்ஸின் பேவரைட்ஸ் இன்ஸ்டாகிராமும், டிக்-டாக்கும் தான். பேஸ்புக் எப்போதுமே ராஜா தான், அது அது 2k கிட்ஸை எந்த வகையில் கவரப் போகிறது என்பதில் தான் இருக்கிறது அதன் சக்சஸ் சீக்ரெட்.

90'ஸ் கிட்ஸ்களின் ஃபேவைரட் சோஷியல் மீடியா ப்ளாட்பார்ம் என்றால், அது ஃபேஸ்புக் (Facebook)தான். ஆர்குட்டில் ஸ்க்ரேப்பிக் கொண்டிருந்த கூட்டத்தை மொத்தமாக, தன் வரவால் ஃபேஸ்புக் ஈர்த்தது. சாட்டிங் மட்டுமன்றி, போட்டோஸ், வீடியோஸ் எனப் பல வசதிகளையும் உள்ளடக்கியிருந்ததால் ஃபேஸ்புக்கின் வரவு அமோக வெற்றி என்று நிச்சயமாகச் சொல்லலாம்.
Facebook
Facebook

அதன் பிறகு ஃபேஸ்புக்கின் பயனர்களை தன் வசம் ஈர்த்த வாட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகியவற்றையும் ஃபேஸ்புக் நிறுவனம் தனதாக்கிக் கொண்டது. அனைவரும் பேசிக் கொள்வதற்கான, தகவல்களைப் பகிர்ந்துகொள்வதற்கான மீடியமாக இருந்தது ஃபேஸ்புக். வாட்ஸ்அப்பின் வரவு தகவல் பரிமாற்றத்தையும் எளிதாக மாற்றியது. காலம் மாற காட்சிகளும் மாறும் அல்லவா? தன்னிடம் உள்ள பயனர்களைத் தக்க வைக்க, புதிய வித்தியாசமான சேவைகளை வழங்க வேண்டும், புதிய போட்டியாளர்களையும் சமாளிக்க வேண்டும். எந்த ஒரு செயலியும் நம் மொபைலில் இருக்க வேண்டும் என்றால், ஏன் இது என் மொபைலில் அவசியம் இருக்க வேண்டும் என்ற கேள்விக்கான பதிலை அந்தச் செயலி பூர்த்தி செய்ய வேண்டும். அதற்காக ஃபேஸ்புக் என்ன செய்தது? இனி என்ன செய்யவிருக்கிறது என்பதைப் பார்க்கலாம்.

Facebook new look
Facebook new look
ஆப், டெஸ்க்டாப் என இரண்டில் ஃபேஸ்புக் பயன்படுத்துபவர்களுமே அதன் லுக் மாறியிருப்பதை கவனித்திருப்பீர்கள். லுக் மட்டுமல்ல பின்னணியிலும் பல மாற்றங்களுக்கு தாயாராகி வருகிறது ஃபேஸ்புக்.

தற்போது ஃபேஸ்புக் வழங்கி வரும் வசதிகள் போட்டோ, வீடியோ ஷேரிங் (Photos and videos sharing), மார்க்கெட் ப்ளேஸ் (Market Place), க்ரூப்ஸ் (Groups), ஈவன்ட்ஸ் (Events) மற்றும் மெசேஜிங் (Messaging). ஃபேஸ்புக்கில் பிராதனமாக வழங்கப்பட்டு வரும் சேவைகள் இவைதாம். இவற்றில் பதிவுகளைத் தவிர பெரிதாக எந்தச் சேவையும் முழுமையாகப் பயனர்களைச் சென்று சேரவில்லை. சேரவில்லை என்பதைவிட, பெரிய அளவில் பயனர்களைக் கவரவில்லை என்றே சொல்ல வேண்டும். ஃபேஸ்புக் என்றால் ஃபன் என்பதைத் தவிர மற்ற சீரியஸான விஷயங்களை பயனர்கள் விரும்பவில்லை. 2007-லேயே ஃபேஸ்புக் மார்க்கெட் ப்ளேஸ் சேவையை வழங்கத் தொடங்கியது. ஆனால், அப்போதுமே அந்தச் சேவைக்கு வரவேற்பு இல்லை. 2014-ல் அதை நிறுத்தி பின்னர், மீண்டும் 2016-ல் புதிய வடிவத்தில் மார்க்கெட் ப்ளேஸைக் களம் இறக்கியது. இப்போதுகூட அது இருக்கிறது. ஆனால், அப்படி ஒரு சேவை ஃபேஸ்புக்கில் இருப்பதே பலருக்குத் தெரியாது.

வடிவேலு, விஜய், மோடி...வைரல் `LinkedIn, Facebook, Instagram, Tinder' ஆல்பம்!
2017
Video-on-Demand சேவையாக ஃபேஸ்புக் வாட்ச் (Facebook Watch) என்ற சேவையைக் களம் இறக்கியது.
ஃபேஸ்புக் வாட்ச் (Facebook Watch)
ஃபேஸ்புக் வாட்ச் (Facebook Watch)

பிரபல வீடியோ சேவையான யூடியூப்புக்கு மாற்று என்ற அடிப்படையில் இந்தச் சேவையைக் களம் இறக்கியது ஃபேஸ்புக். வீடியோ என்பது பலருக்கும் பிடித்தமான ஒரு பொழுது போக்கு அம்சம்தான் எனினும், ஃபேஸ்புக் அறிமுகப்படுத்திய இந்தச் சேவை, அது தொடங்கப்பட்ட ஒரு வருடம் கடந்தபோதும் 50 சதவிகித பயனர்கள் தெரிந்திருக்கக்கூடவில்லை என்கிறது ஒர் அமெரிக்க ஆய்வு. தற்போது, பரவலாக இந்தச் சேவை பயன்படுத்தப்பட்டாலும், யூடியூபுக்கு மாற்று என்ற அதன் இலக்கைக் கொஞ்சமும் அது அடையவில்லை. ஃபேஸ்புக்கில் வரும் வீடியோக்களை ஸ்க்ரால் செய்யும் அந்த ஒரு நொடிக்குள் பார்ப்பவர்கள்தான் அதிகம். தனக்குப் பார்க்க வேண்டும் என்று நினைக்கின்ற வீடியோவை தேடிச் சென்று பார்க்கும் அளவுக்கு ஃபேஸ்புக் வாட்ச் இங்கு பயன்படுத்தப்படவில்லை.

இத்தனை சேவைகளை ஒரே இடத்தில் வழங்கியும் பயனர்களை அந்த சேவைகள் சென்று அடையாததற்கான காரணங்கள் என்ன?

Facebook
Facebook
Image Credit: Freepik

தனிப்பட்ட ஒரு செயலில் ஜொலிப்பவர்களைவிட ஆல்-ரவுண்டர்களுக்கு மதிப்பு கொஞ்சம் குறைவுதான்.

வீடியோவுக்கு யூடியூப் (Youtube), பொருள்களைப் புதிதாக வாங்க பிளிப்கார்ட் (Flipkart), பயன்படுத்திய பொருள்களை வாங்க ஓ.எல்.எக்ஸ் (OLX), கருத்துகளை ஷார்ட் அண்ட் ஸ்வீட்டாக பகிர்ந்துகொள்ள ட்விட்டர் (Twitter), போட்டோக்களுக்கு இன்ஸ்டாகிராம் (Instagram), தகவல் பரிமாற்றத்துக்கு வாட்ஸ்அப் (Whatsapp).

இப்படி ஃபேஸ்புக் அளித்த அத்தனை சேவைகளுக்குத் தனிப்பட்ட முறையில் ஜாம்பவான்கள் இருக்கும்போது ஆல்-ரவுண்டர்க்கான அவசியம் என்ன... என்ற கேள்வி மக்களிடம் உள்ளது. தனிப்பட்ட முறையில் ஒரு சேவையை வழங்கும் நிறுவனம் கொடுக்கும் அதே அளவு முக்கியத்துவத்தை ஆல்-ரவுண்டர்களால் கொடுக்க முடியாது என்பதே இதற்குக் காரணம்.

இவற்றை எல்லாம் பார்க்கும்போது ஃபேஸ்புக்கே தேவையில்லாமல் பயன்படுத்துகிறோமா எனத் தோன்றும். ஆனால், ஃபேஸ்புக்கின் சிறப்பம்சம் ஒன்று உள்ளதே. அது இருப்பதால்தானே இத்தனை வருடங்கள் கழித்தும் அதனால் நிலைத்து நிற்க முடிகிறது. அதுதான் சமூகக் கட்டமைப்பு. அனைவரும் ஒன்றினைந்து தங்கள் கருத்துகளை விரிவாக பகிர்ந்துகொள்ளவும், அது தொடர்பாக விவாதிக்கவும் உதவியாக ஃபேஸ்புக் இருக்கிறது. சமூக வலைதளம் எனக் கூறும்போது முதலில் நினைவுக்கு வரும் பெயர் ஃபேஸ்புக். யாரென்றே தெரியாத நபர்கள் குழுக்களாக இணைந்து செயலாற்றச் சிறந்த தளமாக ஃபேஸ்புக் இருக்கிறது. ஆட்டோமொபைல், அறிவியல், அழகு, கவிதை, இலக்கியம் என ஒன்றுபட்ட கருத்துகள் உடையவர்கள் ஒன்றாக இணைந்து தங்கள் கருத்துகளைப் பரிமாறிக்கொள்வது... இதுதான் ஃபேஸ்புக்கின் சிறப்பம்சம். இதுவரை ஆல்-ரவுண்டராக இருந்து குழுக்களில் தனிக்கவனம் செலுத்தவில்லை. இனி குழுக்களில்தான் (Facebook Groups) அதிக கவனம் செலுத்தப் போகிறோம் எனத் தெரிவித்திருக்கிறார் ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஸூக்கர்பெர்க்.

ஃபேஸ்புக் | Facebook
ஃபேஸ்புக் | Facebook

ஃபேஸ்புக்கின் எதிர்காலம் இதுதான். தனிப்பட்ட முறையில் ஃபேஸ்புக் சிறந்து விளங்க முடியுமென்றால், அது இந்தச் சமூகக் கட்டமைப்பில்தான் என்று, அதை ஒழுங்குபடுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடத் தொடங்கியிருக்கிறது அந்நிறுவனம்.

1.4 பில்லியன்
ஒவ்வொரு மாதமும் ஃபேஸ்புக் குழுக்களில் ஆக்டிவாக இருக்கும் பயனர்களின் எண்ணிக்கை.

அவர்களுள் 400 மில்லியன் பயனர்கள்தான் தங்கள் குழுக்கள் பயனுள்ளதாக இருப்பதாகத் தெரிவித்திருக்கிறார்கள். இதுதான் தற்போது மார்க்கின் முன்னால் இருக்கும் மிகப் பெரிய சவால். சமூகக் கட்டமைப்பை உருவாக்குவதைவிட அதைத் தவறான விதங்களில் பயன்படுத்தாமல் இருக்க வேண்டும். அதை உறுதி செய்வதில்தான் இருக்கிறது ஃபேஸ்புக்கின் எதிர்காலம். குழுக்களுக்கான ப்ரைவசியை அந்தந்தக் குழுவின் அட்மின்கள்தான் தீர்மானிக்கிறார்கள். ப்ரைவசி 'Closed' என இருந்தால் அந்தக் குழுவில் இடப்படும் பதிவுகளை ஃபேஸ்புக் நிறுவனத்தால்கூடப் பார்க்க முடியாது. அதற்கு இவர்கள் வகுத்துள்ள பிரைவசி பாலிசியே காரணம்.

`போலியான தகவல்களைப் பார்த்தால் எச்சரிக்கை’ -  வதந்தி பரவுவதைத் தடுக்க ஃபேஸ்புக் அதிரடி நடவடிக்கை
2017-ல் அமெரிக்காவில் விர்ஜினியா மாகணத்தில் உள்ள கார்லோட்வில்லியில் (Charlotteville) ஒரு பெரும் பேரணி நடைபெற்றது. வெள்ளையர்கள்தான் முதன்மையானவர்கள் என்ற கருத்தின் அடிப்படையில் வெள்ளையின மக்கள் இணைந்து நடத்திய பேரணி அது. அந்தப் பேரணியில் இருந்தவர்கள், கருத்துகளைப் பரிமாறிக் கொள்ளவும், அந்தப் பேரணி நடந்ததற்கும் பெரும் பங்கு ஃபேஸ்புக்கில் இருக்கும் அவர்கள் சார்ந்த குழுவுக்கு உள்ளது.

நம்மூரில் சாதி ஆதிக்கப் பெருமை பேசுவதற்கு இருக்கும் ஃபேஸ்புக் குழுக்கள் ஏராளம். தவறான, சமூகத்துக்கு எதிரான செயல்களும் அந்தக் குழுக்களின் மூலம் நடைபெறுகின்றன. அதைக் களைவதற்காகச் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது ஃபேஸ்புக். எனினும் முழுமையாக அது போன்ற கருத்துகள் கொண்ட பதிவுகளை ஃபேஸ்புக்கில் இருந்து களைய முடியவில்லை. இது தவிர சைபர் புள்ளியிங் (Cyber Bullyimg), அடல்ட் பதிவுகள் (Adult Content) ஆகியவற்றுக்காகவும் ஃபேஸ்புக் குழுக்களில் அதிகமாகப் பயன்படுகின்றன. இவற்றைக் களைய ஃபேஸ்புக் எடுக்கும் நடவடிக்கைகளே, மக்கள் இதை எந்த அளவுக்குப் பயன்படுத்துவார்கள் என்பதை உறுதிப்படுத்தும்.

குழுக்களைத் தவிர ஃபேஸ்புக் அதிகமாக கவனம் செலுத்தவிருப்பது, ஈவன்ட்ஸ் (Events). பழைய நண்பர்கள் ஒன்று கூடவோ அல்லது சிறிய விழாக்களைப் பலருக்கும் தெரியப்படுத்தவோ தனிப்பட்ட முறையில் எந்த சேவைகளும் இல்லை. அவற்றைச் சரியாக ஆர்ஃகனைஸ் செய்யவும் சில பல மாற்றங்களை ஃபேஸ்புக்கிடம் இருந்து எதிர்பார்க்கலாம்.

Facebook
Facebook

ஃபேஸ்புக் மொபைல் செயலிக்கும், ஃபேஸ்புக் வலைதளத்துக்குமே நிறைய வித்தியாசங்கள் இருக்கும். செயலியில் குழுக்கள், மார்க்கெட் ப்ளேஸ் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கும். வலைதளத்தில் ஃபேஸ்புக் வாட்ச் மற்றும் கேமிங்கிற்கு (Gaming) அதிக முக்கியத்துவம் கொடுப்பட்டிருக்கும். உலகளவில் கேமிங்கிற்கென தனி மார்க்கெட் உள்ளது. கேமர்களைக் கவரும் விதமாக லைவ் ஸ்ட்ரீமிங் வசதியையும் அளிக்கிறது ஃபேஸ்புக். ஆனால், முன்னர் கூறியது போலவே யூடியூபிலும் லைவ் ஸ்ட்ரீமிங் வசதி உள்ளது, அது தவிர தனிப்பட்ட கேமிங் கம்யூனிட்டி செயலிகளும் உள்ளன. அதனால் இந்த வசதியும் பெரிதாகப் பயன்படுத்தப்படுவதில்லை.

இன்னும் 90'ஸ் கிட்ஸ்களின் பேவரைட்டாகத்தான் ஃபேஸ்புக் இருக்கிறது. 2k கிட்ஸின் பேவரைட்ஸ் இன்ஸ்டாகிராமும், டிக்-டாக்கும்தான். ஃபேஸ்புக் எப்போதுமே ராஜாதான். ஆனால் தொடருமா என்பது அது 2k கிட்ஸை எந்த வகையில் கவரப்போகிறது என்பதில்தான் இருக்கிறது!
அடுத்த கட்டுரைக்கு