Published:Updated:

ஆதாரில் திருத்தம் செய்வது மற்றும் பான் கார்டுடன் இணைப்பது எப்படி? ஒரு வழிகாட்டல்! 

How to link PAN with Aadhaar
How to link PAN with Aadhaar ( vikatan )

ஆதாரில் சில தகவல்களை இணையதளத்திலேயே மாற்றிக் கொள்ளலாம், சில தகவல்களை ஆதார் நிரந்தர சேர்க்கை மையத்துக்குச் சென்றுதான் மாற்ற வேண்டும். அவை என்னென்ன என்பதை இங்கே பார்க்கலாம்.

ஆதார் வந்ததில் இருந்தே பெரும் குழப்பங்கள் வந்த வண்ணமே உள்ளன. எதற்கெல்லாம் ஆதார் தகவல்களைக் கொடுக்கலாம் எதற்கெல்லாம் கொடுக்கக் கூடாது எனச் சந்தேகங்கள் பலருக்கும் இருந்துகொண்டே உள்ளன. இன்னொருபுறம், வங்கிக் கணக்கு முதல் பான் கார்டு வரை ஆதாரை இணைப்பது கட்டாயம் என்ற அரசாணை மேலும் சிக்கலைக் கொண்டுவந்து சேர்த்தது. ஆதாரில் கொடுக்கப்பட்டிருக்கும் தகவல்களும், பான் கார்டில் கொடுக்கப்பட்டிருக்கும் தகவல்களிலும் சிறு வேறுபாடு இருந்தாலும் அதை இணைக்க முடியாது. ஆதாரில் சில தகவல்களை, அதற்கான இணையதளத்திலேயே மாற்றிக் கொள்ளலாம். ஆனால், சில குறிப்பிட்ட தகவல்களை ஆதார் நிரந்தரச் சேர்க்கை மையத்துக்குச் (Permanent Enrollment Centre) சென்றுதான் மாற்ற வேண்டும். அவை என்னென்ன என்பதை இங்கே பார்க்கலாம்.

உங்கள் ஆதாரில் திருத்தம் செய்வது எப்படி?
உங்கள் ஆதாரில் திருத்தம் செய்வது எப்படி?
Vikatan

ஆதார் மாற்றம் - ஆன்லைன்:

ஆன்லைனில் ஆதார் மாற்றம் செய்ய வேண்டுமெனில் நீங்கள், உங்கள் மொபைல் எண்ணை ஆதாருடன் இணைத்திருக்க வேண்டும். வீட்டு முகவரியில் மாற்றம்செய்ய வேண்டுமெனில் ஆதார் இணையதளத்திலேயே செய்துகொள்ளலாம். https://ssup.uidai.gov.in/ssup/ இந்த இணையதளத்தில் உங்கள் ஆதார் எண்ணைக் கொடுத்தால், பதிவு செய்த மொபைல் எண்ணுக்கு OTP அனுப்பப்படும். அதைத் தொடர்ந்து உங்களின் புதிய மற்றும் பழைய முகவரிகளைக் கொடுத்து பின் அதற்கான ஆதாரத்தையும் ஸ்கேன் செய்து சமர்ப்பிக்க வேண்டும். என்னென்ன ஆதாரங்களைச் சமர்ப்பிக்கலாம் என்பதை கீழே பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.

download

ஆதார் மாற்றம் - நிரந்தர சேர்க்கை மையம்:

வீட்டு முகவரியைத் தவிர்த்து வேறு என்ன விதமான திருத்தம் செய்ய வேண்டும் என்றாலும் நீங்கள் நிரந்தர சேர்க்கை மையத்தைத்தான் அணுக வேண்டும். உங்களுக்கு அருகில் இருக்கும் நிரந்தர சேர்க்கை மையத்தைத் தெரிந்துகொள்ள https://appointments.uidai.gov.in/easearch.aspx?AspxAutoDetectCookieSupport=1 இந்த லிங்க்கில் உங்கள் பின்கோடைப் (Pincode) பயன்படுத்தி தெரிந்துகொள்ளலாம். பெயர் திருத்தம் அல்லது பிறந்த தேதி திருத்தம் ஆகியவற்றுக்குச் சரியான ஆதாரத்தைச் சமர்ப்பிக்க வேண்டும். சேர்க்கை மையத்துக்குச் செல்லும்போது அசல் ஆதாரங்களை எடுத்துச்செல்ல வேண்டும். நகல்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. இதற்கும் என்னென்ன ஆதாரங்களை எடுத்துச் செல்லலாம் என்ற பட்டியலைக் கீழே காணலாம்.

download

நம் ஆதார் மாற்றக் கோரிக்கை எந்த நிலையில் உள்ளது என்பதை அறிய https://resident.uidai.gov.in/check-aadhaar இந்த லிங்க்கில் உங்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ள Enrollment ID, Date and Timeஐ பயன்படுத்தி தெரிந்துகொள்ளலாம்.

ஆதார் மற்றும் பான் கார்டு இணைப்புக்கு - ஆன்லைன்:

ஆதாருடன் பான் கார்டை இணைப்பதற்கான வரம்பு மார்ச் 31, 2020 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆதாரை பான் கார்டுடன் இணைப்பதற்கு https://www.incometaxindiaefiling.gov.in/home இந்த லிங்க்கில் உள்ள வருமான வரித்துறையின் இணையதளத்துக்குச் சென்று உங்கள் பான் கார்டு எண் மற்றும் ஆதார் எண் இரண்டையும் கொடுத்து இணைத்துக்கொள்ளலாம்.

Aadhar - PAN
Aadhar - PAN

ஆதார் மற்றும் பான் கார்டு இணைப்புக்கு - SMS மூலம்:

ஆதார் மற்றும் பான் கார்டை SMS மூலம் இணைப்பதற்கு `UIDAI Aadhar Number Pan Number' என்ற வரிசையில் உங்கள் ஆதார் மற்றும் பான் எண்ணை டைப் செய்து 567678 அல்லது 56161 என்ற எண்ணுக்கு SMS செய்தால் போதும்.

அடுத்த கட்டுரைக்கு