Published:Updated:

புதிய இயங்குதளத்துக்கான செயலிகளைக் களமிறக்கிய ஹூவாவே!

huawei apps
News
huawei apps ( gizchina.com )

கூகுளுக்கு மாற்று என வேறொரு நிறுவனம் களம் காண்பது இதுவே முதல் முறை. ஹூவாவே வெற்றி பெறுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

ஹூவாவே நிறுவனத்துக்கு அமெரிக்கா தடை விதித்ததற்குப் பிறகு, அந்த நிறுவனத்தால் கூகுள் நிறுவனத்தின் இயங்குதளமான ஆண்ட்ராய்டு உட்பட எவ்விதமான சேவைகளையும் பயன்படுத்த முடியாது என்ற நிலை ஏற்பட்டது. ஆனால், அந்தத் தடையைச் சமாளிக்கும் விதமாக 'ஹார்மனி ஓ.எஸ்' (HarmonyOS) என்ற இயங்குதளத்தைச் சொந்தமாக உருவாக்கியது ஹுவாவே நிறுவனம்.

Huawei
Huawei

இயங்குதளம் மட்டுமல்லாது Google play servies-ஐ மாற்றாக Huawei Mobile Services என்ற பெயரில் அதன் இயங்குதளத்துக்குத் தேவையான அனைத்து செயலிகளையும் உருவாக்கியுள்ளது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இதற்கு முன்னரே மற்ற ஆப் டெவலப்பர்களுக்கும் அவர்களின் செயலியை ஹூவாவே மொபைல் சர்வீஸஸின்கீழ் வெளியிடுமாறும் அழைப்பு விடுத்திருந்தது. அவர்களுக்கு வேண்டிய அனைத்து வித உதவிகளையும் செய்து தருவதாகவும் உறுதியளித்திருந்தது.

ஹூவாவே மொபைல் சர்வீஸஸை டிசம்பர் மாத இறுதியில் வெளியிடப்போவதாக அந்நிறுவனம் அறிவித்திருந்தது. அது போலவே தற்போது அதன் பீட்டா வெர்ஷனை வெளியிட்டுள்ளது. சீனாவில் தற்போது ஹூவாவே நிறுவனத்தின் செயலிகளைப் பதிவிறக்கம்செய்து கொள்ளலாம் என அறிவித்திருக்கிறது.

huawei mobile services
huawei mobile services
gizchina.com

கூகுளுக்கு மாற்று என வேறொரு நிறுவனம் களம் காண்பது இதுவே முதல் முறை. ஹூவாவே வெற்றி பெறுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.