Published:Updated:

இந்த கேமின் ஹீரோ அபிநந்தன்! - இந்திய விமானப் படை வெளியிடும் மொபைல் கேம்

விஷால் ராம்

ஒரு விமானி போர் விமானத்தோடு நிற்பதுபோல் விரிகிறது காட்சி. அந்த விமானி வேற யாரும் இல்லை; புல்வாமா தாக்குதலுக்குப் பதிலடி கொடுத்து பிரபலமான ராணுவ வீரர் அபிநந்தன்தான்.

மொபைல் கேம்
மொபைல் கேம் ( Indian air force )

மொபைல் கேம்களின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இன்று PUBG இல்லாத ஸ்மார்ட் போனே இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. கேமிங் மீதான இந்த ஆர்வம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்திருக்கிறது. எந்த அளவுக்கு எ‌ன்றால் இந்திய விமானப் படையே INDIAN AIR FORCE - A CUT ABOVE என்ற ஒரு புதிய மொபைல் கேம் ஒன்றை வடிவமைக்கும் அளவுக்கு. இதற்கான முன்னோட்டத்தை இந்திய விமானப் படை தனது யூடியூப் பக்கத்தில் வெளிட்டுள்ளது.

ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ் இயங்கு தளங்களில் வரும் ஜூலை 31 முதல் தரவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று இந்திய விமானப் படை அறிவித்துள்ளது.

ஒரு விமானி போர் விமானத்தோடு நிற்பதுபோல் விரிகிறது காட்சி. அந்த விமானி வேற யாரும் இல்லை; புல்வாமா தாக்குதலுக்குப் பதிலடி கொடுத்து பிரபலமான ராணுவ வீரர் அபிநந்தன்தான். தன் கம்பீர மீசையோடு கெத்தாக நிற்கிறார் அபிநந்தன்.

இந்தியப் போர் விமானங்கள் எதிரி விமானங்களைச் சுட்டு வீழ்த்துவது, பீரங்கிகள் நிலத்தில் தாக்குவதுபோல் பிரமாண்ட கிராஃபிக்ஸோடு வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ் இயங்கு தளங்களில் வரும் ஜூலை 31 முதல் தரவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று இந்திய விமானப் படை அறிவித்துள்ளது.

காத்திருப்போம்!