Published:Updated:

இந்தியாவில் சைபர் தாக்குதலில் சென்னையே முதலிடம்! அதிர்ச்சி தரும் அறிக்கை விவரம்! 

சைபர் தாக்குதலில் இரண்டாம் இடம்

இணையத்தைப் பயன்படுத்தத் தெரிந்த அனைவருக்கும் அதைப் பாதுகாப்பாகப் பயன்படுத்தத் தெரியுமா என்று கேட்டால் சந்தேகம்தான்.

இந்தியாவில் சைபர் தாக்குதலில் சென்னையே முதலிடம்! அதிர்ச்சி தரும் அறிக்கை விவரம்! 

இணையத்தைப் பயன்படுத்தத் தெரிந்த அனைவருக்கும் அதைப் பாதுகாப்பாகப் பயன்படுத்தத் தெரியுமா என்று கேட்டால் சந்தேகம்தான்.

Published:Updated:
சைபர் தாக்குதலில் இரண்டாம் இடம்

இந்தியாவில் இணையத்தைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை கடந்த சில ஆண்டுகளாக அசுர வேகத்தில் உயர்ந்து வருகிறது. வளர்ந்த நகரங்கள் என்பதைத் தாண்டி கிராமங்களிலும் இணையப் பயன்பாடு சர்வ சாதாரணமாகி விட்டது. ரோட்டுக்கடையில் டீ குடித்துவிட்டு "Paytm பண்ணிட்டேன்" எனக் கூறிச் செல்பவர்களைப் பல இடங்களில் பார்க்க முடிகிறது. ஆனால், பாதுகாப்பு என்கிற ஒரு விஷயத்தைப் பற்றி பலரும் யோசிக்கவில்லை என்பதுதான், இங்கு அச்சப்பட வேண்டிய விஷயம்.

இரண்டாம் கட்ட நகரங்கள் அதிகமாக இணையப் பயன்பாட்டுக்கு மாறி வருவதும், பாதுகாப்புத் தொடர்பாகப் பெரிய விழிப்புணர்வு இல்லாமல் இருப்பதும் சைபர் குற்றங்கள் புரிபவர்களுக்கு பெரிய வாய்ப்பாகிவிடுகிறது. எனவே, அவர்களின் பார்வை இவர்கள் பக்கம் திரும்பியுள்ளது.

K7 computing நிறுவனம் இந்த வருடத்தின் இரண்டாம் காலாண்டுக்கான அறிக்கையில், இந்தியாவில் பெரும் நகரங்களைவிடவும் இரண்டாம் கட்ட நகரங்களான பாட்னா, கௌகாத்தி, லக்னோ, புவனேஷ்வர் மற்றும் ஜெய்ப்பூர் ஆகிய நகரங்களே அதிக சைபர் தாக்குதல்களைச் சந்தித்திருக்கின்றன' என்று கூறியுள்ளது. இதில், முதலிடத்தில் உள்ள பாட்னாவில் 47 சதவிகித இணையப் பயன்பாட்டாளர்கள் மற்ற நகரங்களில் முறையே 45, 44, 43 மற்றும் 40 சதவிகித இணையப் பயன்பாட்டாளர்கள் சைபர் தாக்குதல்களைச் சந்தித்திருக்கின்றனர்.

2016-ம் ஆண்டிலிருந்து 2018-ம் ஆண்டு வரை சைபர் தாக்குதல் அதிகம் நடைபெற்ற நாடுகளின் பட்டியலில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

Cyber Stalking
Cyber Stalking

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

முதல் கட்ட நகரங்களில் 46 சதவிகிதத்தோடு சென்னை முதலிடத்தில் உள்ளது. அதைத் தொடர்ந்து 41 சதவிகிதத்தோடு ஹைதராபாத்தும் கொல்கத்தாவும் உள்ளன. 2016-ம் ஆண்டிலிருந்து 2018-ம் ஆண்டு வரை சைபர் தாக்குதல் அதிகம் நடைபெற்ற நாடுகளின் பட்டியலில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. 2019-ல் மட்டும் 973 மில்லியன் சைபர் தாக்குதல் நிகழ்வுகள் இந்தியாவில் நிகழ்ந்துள்ளன. இவையனைத்தும் விண்டோஸ் இயங்குதளத்தில் மட்டும் நிகழ்ந்தவை. ஆண்ட்ராய்டைப் பொறுத்தவரை இன்னும் பெரிய அளவில் எதுவும் இல்லை. ஆனால், சென்ற ஆண்டைவிடவும் மொபைல்களைக் குறிவைத்து நடக்கும் சைபர் தாக்குதல்கள் 50 சதவிகிதம் அதிகரித்திருக்கிறது என்கிறது 'செக் பாய்ன்ட்' நிறுவனத்தின் Cyber Attack Trends அறிக்கை.

Internet
Internet

தற்போது கணினியைவிட மொபைல்களே அனைத்து விதமான பணப் பரிமாற்றங்களுக்கும் பயன்படுத்தப்படுகின்றன. அது மட்டும் இல்லாமல் நம்முடைய பாஸ்வேர்டுகள், பேங்க்கிங் தகவல்கள் மற்றும் நம்முடைய தனிப்பட்ட தகவல்கள் என அனைத்தையும் மொபைலில்தான் சேமித்து வைக்கின்றோம். நமக்கு நெருக்கமானவர்களின் எண்கள்கூட நமக்கு மனப்பாடமாகத் தெரியாது. எனவே, மொபைலை ஹேக் செய்வது என்பது நம் மூளையை ஹேக் செய்வது போன்றது. அப்படி இருக்கும்போது அந்த விஷயத்தில் நாம் எவ்வளவு பாதுகாப்பாக இருக்க வேண்டும். ஆனால், நாம் அதீத அலட்சியத்தைக் காட்டுவது மொபைல் சம்பந்தமான பாதுகாப்பு விஷயத்தில்தான். தேவையில்லாத செயலிகளை ஊர் பேர் தெரியாத இணையதளங்களிலிருந்து பதிவிறக்கம் செய்வது முதல் முகம் தெரியாத மின்னஞ்சல் முகவரிகளுக்கு சப்ஸ்கிரைப் செய்வது வரை நம்முடைய அலட்சியத்தை முதலீடாக்கி அதன் மூலம் பணம் பெற முயல்கின்றனர் சைபர் குற்றவாளிகள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இணையத்தைப் பயன்படுத்தத் தெரிந்த அனைவருக்கும் அதைப் பாதுகாப்பாகப் பயன்படுத்தத் தெரியுமா எனத் தெரியவில்லை. டிஜிட்டல் இந்தியா என்ற வாசகத்தை முழங்கத் தெரிந்த அரசுக்கு, இணையம் குறித்த பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பது அவசியம் என்பதைச் சொல்ல வேண்டியிருக்கிறது. விழிப்புணர்வு என்கிற பெயரில் ஆங்காங்கே சிறு சிறு நிகழ்வுகள் நடந்தாலும், இந்தியா போன்ற அதிக மக்கள்தொகை கொண்ட ஒரு நாடு சர்வமும் இணைய மயம் என மாறி வரும்போது இந்த வேகம் போதாது.

Hack
Hack

அரசு விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் ஏற்படுத்தாவிட்டாலும் பாதுகாப்பாக இருக்க வேண்டியது நமது கடமை. சைபர் தாக்குதல் நடந்தால் பறிபோகப்போவது நம்முடைய பணம்தான்.

சரி, பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றால் என்னதான் செய்ய வேண்டும்?

பெரிதாய் எதுவும் செய்யத் தேவையில்லை, நீங்கள் பயன்படுத்தும் இயங்குதளங்களின் நிறுவனங்கள் கூறும் பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றினாலே போதும்.

இந்த இணையமயமாதல் என்பது இந்தியாவின் வளர்ச்சிக்கான ஒரு படிதான் என்றாலும், பாதுகாப்பு அம்சங்களையும் கெட்டியாகப் பற்றிக் கொண்டால் இன்னும் ஆரோக்கியமான 'டிஜிட்டல் இந்தியா' உருவாகும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism