Published:Updated:

`அதிகரிக்கும் இணையப் பயன்பாடு' - ஸ்ட்ரீமிங் தரத்தைக் குறைக்கும் நெட்ஃப்ளிக்ஸ், யூடியூப்!

Netflix
Netflix ( Image Credit: Freepik )

இதன் மூலம் இணைய உபயோகத்தைக் குறைக்கலாம், அனைவருக்கும் தேவையான இணையம் சென்றுசேரும் எனத் தெரிவிக்கின்றன அந்த நிறுவனங்கள்!

உலகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் இருப்பதால், மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவில் 21 நாள்களுக்குத் தேசிய ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மொத்த உலகமுமே வீடுகளில் முடங்கியுள்ளது. இதனால் ஏற்படும் சலிப்பைப் போக்க இணையம் மட்டும் பலருக்கும் ஒரே வழியாக இருக்கிறது. கடந்த சில வருடங்களில் நடந்திருக்கும் இணைய ஊடுருவலால் யூடியூப், நெட்ஃபிளிக்ஸ், ப்ரைம் போன்ற ஸ்ட்ரீமிங் தளங்களைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது.

 இன்டர்நெட்
இன்டர்நெட்

இப்போது அனைவருமே வீட்டில் இருப்பதால் இந்தத் தளங்களின் பயன்பாடு இன்னும் அதிகரித்திருக்கிறது. மொத்தமாகவே வரலாறு காணாத அளவிற்கு இணையதள டிராஃபிக் அதிகமாகிவிட்டது எனச் சொல்லலாம். இதனால் போதிய இணையத்தை மக்கள் அனைவருக்கும் கொண்டு போய் சேர்ப்பது சில இடங்களில் இணையச் சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு! பெரும்பாலான மக்கள், வீடுகளிலிருந்து பணிபுரிய இணையத்தையே பெரிதும் நம்பியிருக்கின்றன.

இந்த நிலை கருதி நெட்ஃப்ளிக்ஸ், தனது வீடியோக்களின் ஸ்ட்ரீமிங் தரத்தைச் சற்றே குறைத்திருக்கிறது. இப்படி bitrate குறைக்கப்பட்டாலும் தரத்தில் பெரிய ஒரு வித்தியாசத்தை உங்களால் உணர முடியாது என்கிறது நெட்ஃப்ளிக்ஸ். இதன் மூலம் இணைய உபயோகத்தைக் குறைக்கலாம், அனைவருக்கும் தேவையான இணையம் சென்றுசேரும் எனத் தெரிவிக்கிறது அந்த நிறுவனம்.

`நெட்ஃப்ளிக்ஸ், ப்ரைம் எல்லாம் வழி விடுங்க!' - இந்தியா வருகைக்குத் தேதி குறித்த டிஸ்னி+

இதே யுக்தியை தற்போது யூடியூப், பிரைம் வீடியோ, ஆப்பிள் டிவி+ ஆகிய நிறுவனங்கள் பின்தொடர ஆரம்பித்துவிட்டன. யூடியூப் தனது வீடியோ தரத்தை 'Auto' மோடில், 1080p-ல் இருந்து 480p ஆகக் குறைந்திருக்கிறது. பயனாளர்களுக்குத் தேவையென்றால் செட்டிங்ஸ் சென்று, அதிக தரத்தைத் தேர்வு செய்து அதனை மாற்றிக் கொள்ளலாம் எனத் தெரிவித்திருக்கிறது. எனவே, இனிமேல் தடையின்றி அனைவரும் அடுத்த சில வாரங்களுக்கு இந்த நடைமுறை அமலில் இருக்கும்.

யூடியூப்
யூடியூப்

உலகமெங்கும் பயனாளர்கள் கொண்டுள்ள கூகுள் நிறுவனம் (யூடியூப்பின் தாய் நிறுவனம்), 'எந்தவொரு சூழ்நிலையையும் மக்கள் இணையப் பயன்பாட்டிலிருந்து விலகக் கூடாது; உணவு, உடை, இருப்பிடத்தைத் தொடர்ந்து அத்தியாவசிய தேவையாக இருக்கும் இணையச் சேவையை அவர்களுக்கு எப்போதும் தங்கு தடையின்றி கொடுப்பது நமது கடமை' என்று இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளது.

அடுத்த கட்டுரைக்கு