Published:Updated:

`டிக்டாக், ஹலோ, கேம் ஸ்கேனர் உள்ளிட்ட 59 சீன செல்போன் செயலிகளுக்குத் தடை!’- மத்திய அரசு

டிக்டாக்
டிக்டாக்

பயனாளர்களின் பாதுகாப்பு உள்ளிட்ட அம்சங்களை அடிப்படையாகக் கொண்டு 59 சீன மொபைல் அப்ளிகேஷன்களுக்குத் தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டிருக்கிறது.

உள்துறை அமைச்சகம் சார்பில் கடந்த ஏப்ரலில் ஒரு அறிவிப்பு வெளியானது. அதில், தேசிய சைபர் பாதுகாப்பு அமைப்பான CERT-ன் பரிந்துரையின்படி சீனத் தயாரிப்பான ஜூம் (ZOOM) செயலியைப் பயன்படுத்துவது குறித்து மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் அறிவுறுத்தல் இடம்பெற்றிருந்தது.

Zoom
Zoom

இதேபோல், ஜூம் செயலியை அரசு நடவடிக்கைகளில் பயன்படுத்துவதை தைவான் அரசு தடை செய்தது. மேலும், அவசரகாலங்களில் தனிநபர்களின் கணினிகளில் ஜூம் செயலியைப் பயன்படுத்துவது குறித்து ஜெர்மனி வெளியுறவுத் துறை அமைச்சகமும் அறிவுறுத்தலை வெளியிட்டது. அதேநேரம், அமெரிக்க செனட் சபை, தனது உறுப்பினர்களை வேறு செயலிகளைப் பயன்படுத்துமாறு கேட்டுக்கொண்டது. இந்த நாடுகள் அனைத்தும் பாதுகாப்புக் குறைபாட்டையே காரணமாகச் சுட்டிக்காட்டின. ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளை ஜும் தரப்பில் மறுத்து அறிக்கை வெளியிடப்பட்டது.

இந்திய உளவுத்துறை ரேடாரில் 52 சீன மொபைல் அப்ளிகேஷன்கள்? - முழுப்பட்டியல்

இந்தியாவில் மிகவும் பிரபலமான வீடியோ செயலியான டிக் டாக் குறித்தும் இதேபோன்று புகார் எழுந்தது. ஆனால், டிக் டாக் செயலியை நிர்வகித்துவரும் சீன இன்டர்நெட் நிறுவனமான பைட்டான்ஸ் (ByteDance) இதை முற்றிலுமாக மறுத்தது. அதேநேரம், இதன்மூலம் தனிநபர் பாதுகாப்பு கேள்விக்குறியாவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

Cam Scanner
Cam Scanner

இந்தநிலையில், டிக்டாக், ஹலோ உள்ளிட்ட சீனப் பின்னணியைக்கொண்ட 59 செல்போன் செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்து உத்தரவிட்டிருக்கிறது. இதுதொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், `இந்திய இறையாண்மை மற்றும் ஒருமைப்பாடு, இந்தியாவின் பாதுகாப்பு, நாடு மற்றும் பொதுமக்களின் பாதுகாப்புக் கருதி இந்த 59 செயலிகளுக்குத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவில் செல்போன் பயன்படுத்தும் கோடிக்கணக்கான பயனாளர்களின் நலன்கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. இந்திய சைபர்கிரைம் ஒருங்கிணைப்பு மையத்தின் பரிந்துரையின்படி எடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கை, இந்திய செல்போன் பயனாளர்களின் தனிப்பட்ட தகவல் பாதுகாப்பை உறுதி செய்யும்’’ என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

தடை விதிக்கப்பட்டுள்ள 59 சீன செல்போன் செயலிகள்

* TikTok

* Shareit

* Kwai

* UC Browser

* Baidu map

* Shein

* Clash of Kings

* DU battery saver

* Helo

* Likee

* YouCam makeup

* Mi Community

* CM Browers

* Virus Cleaner

* APUS Browser

* ROMWE

* Club Factory

* Newsdog

* Beutry Plus

WeChat
WeChat
Google Play

* WeChat

* UC News

* QQ Mail

* Weibo

* Xender

* QQ Music

* QQ Newsfeed

* Bigo Live

* SelfieCity

* Mail Master

* Parallel Space

* Mi Video Call Xiaomi

* WeSync

* ES File Explorer

* Viva Video QU Video Inc

* Meitu

* Vigo Video

* New Video Status

* DU Recorder

* Vault- Hide

* Cache Cleaner DU App studio

* DU Cleaner

* DU Browser

* Hago Play With New Friends

* Cam Scanner

* Clean Master Cheetah Mobile

* Wonder Camera

* Photo Wonder

* QQ Player

* We Meet

* Sweet Selfie

* Baidu Translate

* Vmate

* QQ International

* QQ Security Center

* QQ Launcher

* U Video

* V fly Status Video

* Mobile Legends

* DU Privacy

அடுத்த கட்டுரைக்கு