Published:Updated:

`இனி அமெரிக்க GPS வேண்டாம்... இந்தியாவின் NavIC ரெடி!' இஸ்ரோ அதிரடி

NAVIC vs GPS
NAVIC vs GPS ( Gareeb Scientist )

இந்தத் திட்டம் பயன்பாட்டுக்கு வந்த பிறகு, இந்தியாவுக்குள் பயன்படுத்தும் சேவைகளுக்கு அமெரிக்காவின் GPS அல்லது ரஷ்யாவின் GLONASS-ஐ மட்டும் நாம் நம்பியிருக்க வேண்டிய தேவை இருக்காது.

எத்தனை நாளைக்குத்தான் `சீனா இந்தத் திட்டத்தை உருவாக்குகிறது, ரஷ்யா இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துகிறது' என்று மற்ற நாடுகளின் சாதனைகளை மட்டும் பார்த்து படித்துக் கொண்டிருப்பது. இந்த முறை அமெரிக்காவின் GPS-க்கு போட்டியாக இந்தியாவுக்கு மட்டுமான சொந்த Positioning System ஒன்றை வடிவமைத்திருக்கிறது இஸ்ரோ. இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் கார்கில் போர் நடந்த சமயத்தில் இந்தியப் படை GPS நம்பியே செயல்பட வேண்டிய சூழல் இருந்தது. இந்தத் தொழில்நுட்பம் முழுவதும் அமெரிக்காவுடையது என்பதால் அனைத்து நேரமும் இந்தத் தொழில்நுட்பத்தை நம்பியே இருக்க முடியாது. அமெரிக்காவுடன் சரியான உறவு இல்லாத நேரங்களில், அமெரிக்கா பின் வாங்கவும் வாய்ப்புள்ளது என்பதால் இந்தியாவுக்குச் சொந்தமான, இந்தியாவுக்கு மட்டுமான Positioning system ஒன்றை உருவாக்க வேண்டுமென அன்றே முடிவு செய்யப்பட்டது.

ISRO Control unit
ISRO Control unit
ISRO
இந்தத் திட்டம் பயன்பாட்டுக்கு வந்த பிறகு, இந்தியாவுக்குள் பயன்படுத்தும் சேவைகளுக்கு அமெரிக்காவின் GPS அல்லது ரஷ்யாவின் GLONASS-ஐ நாம் நம்பியிருக்க வேண்டிய தேவை இருக்காது.

ஏப்ரல் 2010-ல் இந்தத் திட்டத்துக்கு முழுமையான வரைவு ஒன்று தயாரிக்கப்பட்டு, திட்டத்துக்கு NavIC (Navigation with Indian Constellation) எனப் பெயரும் வைக்கப்பட்டது. இந்தத் திட்டத்தின்படி மொத்தம் இரண்டு பாகங்களாக இந்த அமைப்பு செயல்படும். Space Segment மற்றும் Ground Segment. மொத்தம் 7 செயற்கைக் கோள்களுடன் Space Segment-ம், 21 நேவிகேஷன் மையங்களுடன் Ground Segment-ம் செயல்படும். இந்த மொத்த அமைப்பும் 1,420 கோடி ரூபாய் நிதியில் திட்டமிடப்பட்டுள்ளது.

NavIC
NavIC
Youtube

`IRNSS-1' ( Indian Regional Navigation Satellite System) என்ற பெயரில் A, B, C என வரிசைப்படுத்தப்பட்ட ஏழு செயற்கைக் கோள்கள் 2011-ம் ஆண்டிலிருந்து விண்ணில் செலுத்தப்பட்டு வந்தன. அவற்றுள் IRNSS-1A செயற்கைக்கோளில் கோளாறு ஏற்பட்டதால் அதற்கு மாற்றான IRNSS-1H செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட்டது. ஆனால், அந்தச் செயற்கைக் கோளையும் விண்ணில் நிலைநிறுத்த முடியாமல்போனது. கடைசியாக இவற்றுக்கு மாற்றான IRNSS-1I என்ற செயற்கைக் கோள் 2018, ஏப்ரல் 12 அன்று விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது. தற்போது Space segment-ன் ஏழு செயற்கைக் கோள்களும் தயார் நிலையில் உள்ளன.

`தமிழகத்தில் 2 வது ராக்கெட் ஏவுதளம் ஏன்?' - இஸ்ரோ சிவன் சொன்ன விளக்கம்!

இந்த ஏழு செயற்கைக் கோள்கள் தரும் தகவல்களை ஒழுங்கு படுத்தவும், செயற்கைக் கோள்களைக் கண்காணிக்கவும் IRNSS Range And Integrity Monitoring System, IRNSS CDMS Ranging Station, IRNSS Spacecraft Control Facility, IRNSS Network Timing Facility மற்றும் IRNSS Navigation Centre என்ற ஐந்து மையங்கள் கொண்ட அமைப்பை இந்தியா முழுவதும் நிறுவியுள்ளது இஸ்ரோ. இவையனைத்தும் சேர்த்து Ground Segment ஆக செயல்படும். இவற்றுள் Navigation Centre தான் இவற்றுக்குத் தலைமையகமாகச் செயல்படும். Range and Integrity Monitoring என்ற வரையறைகளைக் கண்காணிக்கும் மையங்கள் மட்டும் இந்தியாவில் 15 இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன. இந்தியாவைத் தவிர மொரீஷியஸில் ஒரு மையமும் இந்தோனேஷியாவில் பியக் தீவில் ஒரு மையமும் அமைக்கவிருக்கின்றனர்.

Xiaomi
Xiaomi
Chinadaily.cn.com

எந்தக் காரணத்தைக் கொண்டும் இதன் செயல்பாடுகளில் தடங்கல்கள் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக ஒன்றுக்கு இரண்டு இடங்களில் தலைமையகத்தை அமைத்திருக்கிறது இஸ்ரோ. பெங்களூருவில் முதல் தலைமையகமும் லக்னோவில் இரண்டாவது தலைமையகத்தையும் அமைத்துள்ளனர். இந்த இரண்டு தலைமையகங்களுக்கு இடையில் அறைக்கட்டுப்பாடுகள் அனைத்தையும் இடமாற்றியும் சோதனை செய்யப்பட்டது. Space Segment-ல் உள்ள செயற்கைக் கோள்களில் கோளாறு ஏற்பட்டால் அதை உடனடியாக மாற்றுவதற்காகவும் IRNSS-1J,K,L,M மற்றும் N ஆகிய ஐந்து செயற்கைக் கோள்கள் தயார் நிலையில் உள்ளன. இந்திய எல்லையைக் கடந்து 1,500 கிலோ மீட்டர் தூரம் வரை NAVIC செயல்படும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி சிவன் இஸ்ரோ சிவனான கதை ஆடியோ வடிவில்...!
NavIc
NavIc
Twitter.com

இந்தச் சேவையை மக்களுக்குக் கொண்டு சேர்க்கும் வகையில் பிரபல புராசஸர் தயாரிக்கும் நிறுவனமான குவால்கமுடனும் ஒப்பந்தம் செய்துள்ளது இஸ்ரோ. NavIC-ன் சிக்னல்களைக் கண்டறிந்து அவற்றை பெறும் வகையில் சிப்களை உருவாக்க குவால்கம் நிறுவனத்துடன் இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. அந்த சிப்களை இந்தியாவில் விற்பனை செய்யும் மொபைல் ஃபோன்களில் பயன்படுத்த ஷாவ்மி நிறுவனத்துடனும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. அதிகமான மக்கள் உபயோகப்படுத்த வேண்டும் என்பதால் முதலில் பட்ஜெட் மொபைல்களில் இந்த சிப்பைப் பொருத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த ஆண்டின் நடுவில் NavIC-ன் பயன்பாட்டை நம் கைகளில் எதிர் பார்க்கலாம். சீனாவும் இதே போன்று சொந்தமான Positioning System ஒன்றை உருவாக்கி வருகிறது. அது உலகளவிலான GPS-க்கு போட்டியாக 2020-ல் தான் மக்கள் பயன்பாட்டுக்கு வரவிருக்கிறது. இந்தத் திட்டம் பயன்பாட்டுக்கு வந்த பிறகு, இந்தியாவுக்குள் பயன்படுத்தும் சேவைகளுக்கு அமெரிக்காவின் GPS அல்லது ரஷ்யாவின் GLONASS-ஐ நாம் நம்பியிருக்க வேண்டிய தேவை இருக்காது.

அடுத்த கட்டுரைக்கு