Published:Updated:

16 லட்சம் வேலைவாய்ப்புகள்... கோடிங்கில் கலக்கும் இந்தியா!

2024-ல் அமெரிக்காவையும் தாண்டி அதிக மொபைல் நிரலாக்க நிபுணர்களை இந்தியாவில் பார்க்கலாம்

It Tech
It Tech

வளர்ந்துவரும் தொழில்நுட்பங்கள் என்றாலே ஆர்ட்டிஃபீஷியல் இன்டெலிஜென்ஸும் இன்டர்நெட் ஆஃப் திங்க்ஸும் தவிர வேறு ஒன்றுமில்லை என்று நினைத்துவிடாதீர்கள். இவை தவிர, இன்னும் பல விஷயங்கள் இருக்கின்றன.

கிட்டத்தட்ட அனைத்து மக்களின் கையிலும் இருக்கும் ஒரு தொழில்நுட்பம், தொலைபேசி. நிபுண‌ர்களின் கணிப்பின்படி, இந்தியாவில் 2022-ம் ஆண்டில் 90% ‌மக்களின் கையில் மொபைல் இருக்கும். மக்கள்தொகையில் ஏறக்குறைய‌ 25% ஸ்மார்ட் போன் பயன்படுத்துப‌வர்களாக இருப்பார்கள். இவற்றில் கோடிங் செய்ய இரண்டு பிரபல ஆபரேட்டிங் சிஸ்டம் கூகுளின் ஆண்ட்ராய்டு மற்றும் ஆப்பிளின் ஐ.ஓ.எஸ் (iOS) உள்ளன. விரிவாக படிக்க க்ளிக் செய்க... http://bit.ly/2lcfYM7

ஜாவா, எக்ஸ்.எம்.எல் (XML) போன்ற நிரலாக்க மொழிகள் (Programming Language) கொண்டு ஆண்ட்ராய்டு ஸ்டூடியோவில் அதன் எஸ்.கே.டி-யைப் (SDK - Software Development Kit) பயன்படுத்தி, முதல்படியாக ஒரு ‘Hello world!’ ஆப் (app) எழுதி அதை சோதித்தும்விடலாம். எந்த ஒரு நிரலாக்க மொழியிலும் முதலில் போடும் பிள்ளையார் சுழி கோடிங் ‘Hello world!’. இந்த இரண்டு வார்த்தைகள் சரியாக வந்துவிட்டால், நீங்கள் மேலும் எழுதலாம்.

எந்த ஒரு நிரலாக்க மொழியிலும் முதலில் போடும் பிள்ளையார் சுழி கோடிங் ‘Hello world!’.

சமீபத்தில் வெளிவந்த செய்திகளின்படி, இனிவரும் காலத்தில் இந்த ஆப் சார்ந்த பொருளாதாரத்தில் மிக அதிக‌ வ‌ளர்ச்சி காணும் நாடு இந்தியாவாக இருக்கும். 2024-ல் அமெரிக்காவையும் தாண்டி அதிக மொபைல் நிரலாக்க நிபுணர்களை இந்தியாவில் பார்க்கலாம். கிட்டத்தட்ட 16 லட்சம் வேலைவாய்ப்புகள் இதில் இருக்கின்றன. தொலைக்காட்சி வந்த புதிதில் சீரியல்கள் பார்த்து அதற்கு அடிமை யானதுபோல‌, இந்தக் கருவியை வீடியோ, விளையாட்டிற்கு மட்டும் பயன்படுத்தாமல் பயனுள்ள வழிகளில் உபயோகிப்பது அவசியம்.

கோடிங் செய்வதைவிட முக்கியம், அந்த ஆப் பார்க்க எப்படி இருக்கிறது, அதைப் பயன்படுத்துபவர்களுக்குச் சுலபமாக இருக்கிறதா என்பதே. த‌டுக்கி விழுந்தால் பணப் பட்டுவாடா, வீட்டுவாசலில் துரித உணவு, சமூக ஊடகங்களில் சாட் போன்ற பல ஆப்புகள் வந்துவிட்டன. இதைக் கொண்டு ஒரு லாபம் தரும் வணிகம், நிறுவனம் தொடங்கி அதை நடத்துவதே முக்கியம்.

it work
it work

மொபைலுக்கு அடுத்தபடியாக அதிகமாகப் பயன்படுத்தப்படும் ஒரு கருவி, சமூக வலைத்தளம். மற்ற தொழில்நுட்பங்கள்போல, இதுவும் பல தவறான வழிகளில் பயன்படுகிறது. பொய்யான செய்திகள், உண்மையான அடையாளத்தை மறைத்துச் சிக்கலில் மாட்டிவிடும் நபர்க‌ள் மற்றும் மாணவர்களுக்கு நேரவிரயம் போன்றவை. நல்ல வழியில் பயன்படுத்தினால் பயனுள்ள செய்தி களைப் படிக்கவும் மற்றவர்க‌ளுடன் பகிர்ந்துகொள்ளவும் நமக்குப் பிடித்த துறையில் தொடர்புக‌ளை ஏற்படுத்திக்கொள்ளவும் இது உதவும்.

- இத்துடன், சாட்பாட் மனிதர்கள், எப்போதும் பயனளிக்கும் அனலிடிக்ஸ், பொதுவான கணினித்துவம், 3டி பிரின்டிங் மற்றும் மாய உலகத்தில் பொருள்கள் ஆகியவை குறித்து விரிவாக அறியலாம். Infosys Knowledge Institute-ன் தொழில்நுட்ப ஆலோசகர் சு.ராமச்சந்திரன் எழுதும் ரீஸ்கில்லிங் பற்றிய 'திறன் பழகு, திறமை மேம்படுத்து' தொடர் பகுதியை நாணயம் விகடன் இதழில் முழுமையாக வாசிக்க > திறன் பழகு, திறமை மேம்படுத்து - மனிதர்களுடன் ரோபோக்கள் பணியாற்றும் காலம்! https://www.vikatan.com/news/general-news/series-about-reskilling-12