Published:Updated:

`இன்டர்நெட் இல்லை, வருவாயும் இல்லை'- இணையமுடக்கத்தால் இந்தியா இழந்தது எவ்வளவு?

Internet
Internet

இன்டர்நெட் இல்லாத ஒவ்வொரு மணி நேரத்துக்கும் டெலிகாம் நிறுவனங்கள் 2.45 கோடி ரூபாய் வருவாய் இழப்பைச் சந்தித்துள்ளன.

உலகிலேயே இணைய முடக்கத்தில் இந்தியாதான் நம்பர் 1 என்ற தகவல் சமீபத்தில் வெளியானது. ஆனால், அந்த இணைய முடக்கத்தால் நாட்டுக்கு எவ்வளவு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது எனத் தெரியுமா?

வருவாய் இழப்பு
வருவாய் இழப்பு
business standard

Indian Council for Research on International Economic Relations-ன் 2018-ம் அறிக்கையின்படி 5 வருடங்களில் சுமார் 21,000 கோடி ரூபாய் வருவாய் இழப்பு இணைய முடக்கத்தால் மட்டும் ஏற்பட்டுள்ளது.

இணைய முடக்கம்... இந்தியா நம்பர் ஒன்!

``இணையத்தையே மையமாகக் கொண்டு இயங்கும் இ-காமர்ஸ் தளங்கள்தான் இதனால் அதிக பாதிப்புக்கு உள்ளானது" எனத் தெரிவித்துள்ளார் COAI (Cellular Operator Association of India) அமைப்பின் டைரக்டர் ஜெனரலான ராஜன் மேத்யூஸ். இணையம் துண்டிக்கப்பட்ட ஒவ்வொரு மணி நேரத்துக்கும் 3.67 கோடி ரூபாய் அந்நிறுவனங்களுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. டெலிகாம் நிறுவனங்கள் ஒவ்வொரு மணி நேரத்துக்கும் 2.45 கோடி ரூபாய் வருவாய் இழப்பைச் சந்தித்துள்ளன.

internet
internet
`இலவச வை-ஃபை அறிமுகம் செய்யும்போதே இணையம் முடக்கம்!' - டெல்லியில் முரண்

பாதிக்கப்பட்ட இடங்களில் உள்ள ஸ்டார்ட்அப்கள்தான் இந்த இணைய முடக்கத்தால் முழுமையான பாதிப்பைச் சந்தித்திருக்கும். அவர்களின் மொத்த உழைப்பும் இதனால் காணாமல் போயிருக்கிறது. அவர்களுக்கு என்ன தீர்வு சொல்லப் போகிறது இந்த அரசு?!

அடுத்த கட்டுரைக்கு