Published:Updated:

பட்ஜெட்டில் `Quantum Computing’-கிற்கு ரூ.8,000 கோடி! -`குவான்டம் தொழில்நுட்பம்’ என்றால் என்ன?

Quantum Computing
Quantum Computing ( cxotoday.com )

குவான்டம் தொழில்நுட்பங்களைப் பொருளாதாரத்துக்கும், ராணுவத்துக்கும் அமெரிக்கா மற்றும் சீனா போன்ற நாடுகள் பயன்படுத்தத் தொடங்கிவிட்டன.

மத்திய அரசு சமீபத்தில் வெளியிட்ட பட்ஜெட்டில், `குவான்டம் கம்ப்யூட்டிங்'கிற்காக (Quantum Computing) 8,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்குவதாக அறிவித்தார் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். தொழில்நுட்பத்தில் உலக நாடுகள் முன்னேறிக்கொண்டிருக்கிற நேரத்தில் இந்தியாவும் தொழில்நுட்பத்தில் முன்னேற்றங்களை முன்னெடுக்க வேண்டியிருக்கிறது.

quantum computing
quantum computing
metro.co.uk

`அடுத்த ஐந்து ஆண்டுகளில் கம்ப்யூட்டிங், தகவல் தொடர்பு மற்றும் இணையப் பாதுகாப்பு என அனைத்துத் துறைகளிலும் குவான்டம் தொழில்நுட்பம் சார்ந்த சாதனங்கள் மற்றும் சேவைகளை உருவாக்குவதற்காக இந்த 8,000 கோடி ரூபாய் செலவிடப்படும்’ எனத் தெரிவித்துள்ளார் நிர்லமா சீதாராமன்.

`குவான்டம் டெக்னாலஜி' என்றால் என்ன? அதற்கான தேவைகள் இப்பொழுது ஏன் எழுந்துள்ளன?

`குவான்டம் இயற்பியலின்' கோட்பாடுகளைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டது தான் `குவான்டம் மெக்கானிக்ஸ்'. இந்த குவான்டம் மெக்கானிக்ஸின் விதிகளைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் தொழில்நுட்பங்கள்தான் குவான்டம் டெக்னாலஜி. இந்த குவான்டம் டெக்னாலஜியைப் அடிப்படையாக வைத்து உருவாக்கப்படும் தொழில்நுட்பங்கள் தற்போது இருக்கும் தொழில்நுட்பங்களைவிட பல மடங்கு வேகமானதாகவும் விவேகமானதாகவும் இருக்கும். நாம் தற்போது பயன்படுத்திக்கொண்டிருக்கும் கணினிகள் பல பில்லியன் ஆண்டுகளில் தீர்க்கக் கூடிய கணிதத்தைக் குவான்டம் கணினியால் 200 நொடிகளில் தீர்க்க முடியும்.

Quantum Computing
Quantum Computing
Smartenergy.com

தற்போது இதன் அவசியம் என்ன?

சீனாவும் அமெரிக்காவும் ஏற்கெனவே இந்த குவான்டம் தொழில்நுட்பத்தில் போட்டிபோட்டு முன்னேறிக் கொண்டிருக்கின்றன. 2018-லேயே குவான்டம் கணினியை உருவாக்கிவிட்டோம் என அறிவித்தது சீனா. அது மட்டுமல்லாமல் குவான்டம் செயற்கைக்கோளையும் ஏவியதாக அறிவித்தது. 2018-ல் 1.2 பில்லியன் டாலர்களைக் குவான்டம் டெக்னாலஜி தொடர்பான ஆராய்ச்சிகளுக்காக ஒதுக்கியுள்ளது அமெரிக்கா. குவான்டம் தொழில்நுட்பங்களில் தாங்கள்தான் நம்பர் 1 ஆக இருக்க வேண்டும் என பல பில்லியன் டாலர்களைச் செலவு செய்து வருகிறது சீனா. எவ்வளவு என தெளிவான தகவல்கள் வெளிவராத போதிலும் தோராயமாக 10 பில்லியன் டாலர்கள் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

Vikatan

`குவான்டம் என்டேங்கிள்மென்ட்' (Quantum Entanglement) மூலமாக செயற்கைகோளுக்கும், பூமிக்கும் இடையிலான தகவல் தொடர்பைச் சாத்தியப்படுத்தியுள்ளது சீனா. குவான்டம் தொழில்நுட்பங்கள் மூலமாக மேற்கொள்ளப்படும் தகவல் தொடர்புகள் உறுதியானவை. ஆனால், என்கிரிப்சன் (Encryption) செய்யப்படும் தகவல் தொடர்பை அவற்றால் சாதாரணமாக, உடைத்து எளிதாகத் தகவல்களைத் திருட முடியும். சீனா குவான்டம் தொழில்நுட்பங்கள் மூலம்தான் தற்போது தகவல் தொடர்பை மேற்கொள்கிறது. இது மற்ற நாடுகளும் குவான்டம் தொழில்நுட்பங்களில் மேம்படுத்துவது அவசியம் என எச்சரிக்கிறது.

Quantum
Quantum
Theconversation.com

குவான்டம் தொழில்நுட்பங்களைப் பொருளாதாரத்துக்கும், ராணுவத்துக்கும் அமெரிக்கா மற்றும் சீனா போன்ற நாடுகள் பயன்படுத்தத் தொடங்கிவிட்டன. இந்தச் சமயத்தில் நம்முடைய குவான்டம் தொழில்நுட்பங்களை மேம்படுத்துவது அவர்களது தொழில்நுட்பங்களிலிருந்து நம்மைத் தற்காத்துக்கொள்ள உதவும்.

இந்தியாவில் குவான்டம் தொடர்பான ஆராய்ச்சிகளுக்காக Department of Science and technology, QuEST (Quantum Enabled science and Technology) என்ற திட்டம் ஒன்றை உருவாக்கியது. 80 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு மூன்று வருடங்கள் ஆராய்ச்சிகளை மேற்கொள்ளவிருக்கிறார்கள். அதன் ஒரு பகுதியாக, இந்தியாவின் முதல் குவான்டம் கணினியும் தயாராகிறது. மூன்று வருடங்களில் குவான்டம் தொழில்நுட்பங்களுக்கான அடிப்படைக் கட்டுமானங்கள் தயாரான பிறகு, ISRO (Indian Space Research Organization), DRDO (Defense Research and Development Organization) மற்றும் DAE (Department of Atomic Energy) ஆகியவை இணைந்து QuEST திட்டத்தை இரண்டாம் கட்டத்துக்கு எடுத்துச் செல்லவிருக்கின்றன.

அடுத்த கட்டுரைக்கு