Published:Updated:

`கையில் அணியும் கருவி!’ - கொரோனா தடுப்பில் இந்திய அரசின் புதிய முயற்சி

ஆரோக்கிய சேது செயலி
ஆரோக்கிய சேது செயலி

இந்த நிலையில் கொரோனா பாதித்தவர்கள் மற்றும் பாதித்திருக்கக்கூடும் எனக் கணிக்கப்பட்டவர்களைக் கண்காணிக்கக் கையில் அணிந்துகொள்ளக் கூடிய வகையிலான கருவி ஒன்றையும் உருவாக்கும் முயற்சியில் இருக்கிறது இந்திய அரசு.

கொரோனாவைக் கட்டுப்படுத்த தினமும் புதிய யோசனைகளோடு அரசுகள் பல்வேறு விதமான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றன. இந்திய அரசு 'ஆரோக்கிய சேது' (Aarogya Setu) என்ற செயலியை அறிமுகப்படுத்தியது. இதன் மூலம் கொரோனா பாதிக்கப்பட்ட நபருக்கும் அருகில் செல்ல நேர்ந்தால் அதைப் பயனருக்குத் தெரிவிக்கும் விதமாக இந்தச் செயலி உருவாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் கொரோனா பாதித்தவர்கள் மற்றும் பாதித்திருக்கக்கூடும் எனக் கணிக்கப்பட்டவர்களைக் கண்காணிக்கக் கையில் அணிந்துகொள்ளக் கூடிய வகையிலான கருவி ஒன்றையும் உருவாக்கும் முயற்சியில் இருக்கிறது இந்திய அரசு.

ஆரோக்கிய சேது செயலி
ஆரோக்கிய சேது செயலி

இந்தக் கருவியானது ஆரோக்கிய சேது செயலியுடன் இணைத்துப் பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டு வருகிறது. இதை பாதிக்கப்பட்டவர்களும் தனிமையில் வைக்கப்பட்டவர்களும் கையில் அணிந்துகொள்வதன் மூலம், அவர்களுடைய உடல்நிலையை மருத்துவர்கள் அறிந்துகொள்ள முடியும். இதைத் தயாரிக்க Broadcasting Engineering Consultant India (BECIL) என்ற நிறுவனம் வேலை பார்த்து வருகிறது. தற்போது இந்தக் கருவிக்கான வடிவமைப்பை இறுதி செய்யும் வேலைகள் நடந்து வருகின்றன. இதன் விலையானது 2,000 ரூபாய்க்கும் மேல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

`380 பேருக்குக் கொரோனா தொற்று; 77 சிவப்பு மண்டலங்கள்!' -ரத்து செய்யப்பட்ட அமர்நாத் யாத்திரை
Aarogya setu App
Aarogya setu App

இந்தக் கருவியைக்கொண்டு தனிமைப்படுத்தப்பட்ட நபர் ஒரே இடத்தில் இருக்கிறாரா என்பதையும் அறிந்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனுடன் சேர்த்து மற்றும் பல தனிப்பட்ட தகவல்களையும் அந்தக் கருவி சேகரிக்கும். மேலும், தேசப் பாதுகாப்பிற்கு ஊறு விளைவிக்கும் வகையில் நடைபெறும் செயல்பாடுகளையும் அந்தக் கருவி கண்காணிக்கும் என அந்தக் கருவியினைப் பற்றி அளித்த குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தனியுரிமை தொடர்பான பல்வேறு கேள்விகளையும் எழுப்பியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு