Published:Updated:

"ஐரோப்பாவுக்கு ஒரு நியாயம், இந்தியாவுக்கு ஒரு நியாயமா?" வாட்ஸ்அப்பை எச்சரிக்கும் இந்திய அரசு!

வாட்ஸ்அப்
வாட்ஸ்அப்

Personal Data Protection bill பாராளுமன்றத்தில் சட்டமானால் வாட்ஸ்அப்பின் புதிய கொள்கைகள் இங்கே சட்ட விரோதமாகும் என்றும் இந்தக் கடிதத்தில் எச்சரித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ப்ரைவசி கொள்கைகளையும் பயன்பாட்டு விதிகளையும் மாற்றுவதாகச் சமீபத்தில் அறிவித்தது வாட்ஸ்அப். அவற்றுக்கு 'Agree' கொடுக்காமலிருந்தால் வாட்ஸ்அப்பை பயன்படுத்த முடியாது என்றது வாட்ஸ்அப். இது உலகமெங்கும் இருக்கும் வாட்ஸ்அப் பயனர்களிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் டெக் உலகில் பெரும் சர்ச்சையாகவும் வெடித்தது. பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்துக்கொண்டிருக்கும் இந்த வேளையில் தொடர்ந்து 'புதிய ப்ரைவசி கொள்கைகளில் எந்த சிக்கலும் இல்லை' என அதனால் முடிந்தளவு பரப்புரை செய்துவருகிறது வாட்ஸ்அப். இந்த விஷயத்தில் அரசு குறுக்கிட வேண்டும், 'Privacy' ஒரு இந்தியக் குடிமகனின் அடிப்படை உரிமை எனப் பலரும் குரல் எழுப்பிவருகின்றனர். இந்தியாவில் மட்டும் வாட்ஸ்அப்பிற்கு 40 கோடி பயனர்கள் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வாட்ஸ்அப் சர்ச்சை... மே வரை ப்ரைவஸியில் மாற்றம் இல்லையாம்... ஏன் தெரியுமா?!
வாட்ஸ்அப்
வாட்ஸ்அப்

இப்போது புதிய ப்ரைவசி கொள்கைகளைத் திரும்பப் பெற்றுக்கொள்ளுமாறு வாட்ஸ்அப்பிற்கு மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் கடிதம் எழுதியிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஃபேஸ்புக்கிற்கு சொந்தமான வாட்ஸ்அப்பின் CEO வில் கேத் கார்ட்டுக்கு இந்தக் கடிதம் எழுதப்பட்டிருக்கிறது. பிரைவசி மற்றும் டேட்டா பாதுகாப்பு குறித்த அணுகுமுறையை வாட்ஸ்அப் மறுபரிசீலனை செய்யவேண்டும் என்று அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்.

ஏற்கெனவே அதன் ப்ரைவசி கொள்கைகளை மே மாதம் வரை தள்ளிவைத்திருக்கிறது வாட்ஸ்அப் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் என்ன மாதிரியான தகவல்கள் பெறப்படுகின்றன, அதற்குப் பயனர்களிடமிருந்து என்ன மாதிரியான அனுமதிகள் பெறப்படுகின்றன, தகவல்கள் பெறப்படுவதன் அவசியம் என்ன என விரிவாக விளக்கும்படியும் கேட்டிருக்கிறது IT அமைச்சகம். பயன்பாட்டு அடிப்படையில் இந்தியப் பயனர்கள் தரம் பிரிக்கப்படுகின்றனரா என்றும் கேள்வி எழுப்பியிருக்கிறது மத்திய அரசு. மற்ற நாடுகளில் இருக்கும் ப்ரைவசி கொள்கைகளுக்கும் இந்தியாவில் இருக்கும் ப்ரைவசி கொள்கைகளுக்கும் இருக்கும் வித்தியாசம் என்னவென்று விசாரிக்கப்பட்டிருக்கிறது.

வாட்ஸ்அப்
வாட்ஸ்அப்

ஐரோப்பாவில் ஒரு மாதிரியும் இந்தியாவில் ஒரு மாதிரியும் வாட்ஸ்அப் செயல்படுகிறது. இதை இந்திய அரசும் கவனித்திருப்பதாகக் கூறப்படுகிறது. Personal Data Protection bill பாராளுமன்றத்தில் சட்டமானால் வாட்ஸ்அப்பின் புதிய கொள்கைகள் இங்கே சட்ட விரோதமாகும் என்றும் இந்த கடிதத்தில் எச்சரித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வாட்ஸ்அப் தரப்பில் இதற்கு எந்தப் பதிலும் இதுவரை அளிக்கப்படவில்லை.

சந்தையில் ஆரோக்கியமான போட்டி நிலவுகிறதா என்பதை உறுதிசெய்யும் Competition Commission of India (CCI) ஆணையமும் இந்த விவகாரத்தைப் பற்றி விசாரிக்கும் எனத் தெரிகிறது. சந்தையில் தனக்கிருக்கும் ஆதிக்கத்தைத் துஷ்பிரயோகம் செய்து இதுபோன்ற கொள்கைகளை வாட்ஸ்அப் கொண்டு வருகிறதா என விசாரிக்கப்படும்.

வாட்ஸ்அப்பிற்கு எதிராகத் தொடுக்கப்பட்ட பொது நல வழக்கை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம் "வாட்ஸ்அப் ஒரு தனியார் சேவை. அதன் கொள்கைகள் பிடிக்கவில்லை என்றால் யாரும் அதைப் பயன்படுத்த வேண்டாம் என்ற கட்டாயம் இல்லை. டேட்டா என்பது அனைத்து டிஜிட்டல் சேவை நிறுவனங்களும் பெறுவதுதான்" எனக் கருத்து தெரிவித்தது.

அடுத்த கட்டுரைக்கு