நாளுக்கு நாள் இணையத்தைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் வரை எவ்வளவு `டேட்டா' இந்தியர்களால் பயன்படுத்தப்பட்டுள்ளது என்ற விவரத்தை TRAI அமைப்பு வெளியிட்டுள்ளது.

2014-ம் ஆண்டில் இந்தியர்கள் மொத்தமாக 828 மில்லியன் GB அளவு டேட்டா பயன்படுத்தியிருந்தனர். இந்தப் பயன்பாடு 2018-ம் ஆண்டு 46,404 மில்லியன் GB என்னும் அளவைத் தொட்டது. இது இந்த வருடம்(செப்டம்பர் வரை மட்டும்) 54,917 மில்லியன் GB என்ற புதிய உயரத்தைத் தொட்டிருக்கிறது. 2014-ஆம் ஆண்டு 281.58 மில்லியனாக இருந்த டேட்டா பயனர்களின் எண்ணிக்கை இந்த வருடம்(செப்டம்பர் வரை) 664.80 மில்லியனாக உயர்ந்துள்ளது.

கடந்த நான்கு ஆண்டுகளில் டெலிகாம் டேட்டாவின் விலை மலிவாக்கப்பட்டதும், 4G போன்ற அதிவேகத் தொழில்நுட்பங்கள் வந்தததும்தான் இந்தப் பெரும் மாற்றத்திற்கு முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுகிறது.
சிறு குறு நிறுவனங்கள் முதல் பெரு நிறுவனங்கள் வரை இன்று இணையத்தைப் பயன்படுத்திதான் ஏராளமான சேவைகளை வழங்கி வருகின்றன. அரசு சேவை மையங்களையும் இணையத்தின் மூலம் சுலபமாக அணுக முடிகிறது. இந்த வளர்ச்சி அடுத்த 10 ஆண்டுகளில் இன்னும் வேகமாகத்தான் இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.