Published:Updated:

தட்கல் டிக்கெட் எடுப்பதில் நடந்த பெரும் மோசடி...இனி அதிக டிக்கெட்கள் கிடைக்கும்!

இனி தட்கலில் அதிக டிக்கெட்கள் கிடைக்கும்!
இனி தட்கலில் அதிக டிக்கெட்கள் கிடைக்கும்!

மோசடி கண்டுபிடிக்கப்பட்டதால் இனி தட்கல் டிக்கெட் எடுப்பது அவ்வளவு சிரமமாக இருக்காது.

ரயில் பயணம் என்னதான் சுகமாக இருந்தாலும், அதற்கு டிக்கெட் எடுப்பது பெரும்பாடுதான். அதுவும் பயணத்திற்கு முந்தைய நாள் தட்கல் டிக்கெட் எடுப்பது மிகவும் கடினம். ஆனால், இனி தட்கல் டிக்கெட்கள் எடுப்பது முன்பைப் போல அவ்வளவு கடினமாக இருக்காது. பயனாளர்களுக்கு இனி அதிக டிக்கெட்கள் தட்கல் முறையில் கிடைக்கும் எனத் தெரிவித்திருக்கிறது இந்திய ரயில்வே.

railway
railway
pixabay

இந்த தட்கல் டிக்கெட்களை பிளாக் செய்துவைக்கும் பல முக்கியச் சட்ட விரோத மென்பொருள்களைக் கண்டறிந்துள்ளது இந்திய ரயில்வே. மேலும், இப்படிக் குறுக்குவழிகள் மூலம் மொத்தமாக டிக்கெட் எடுக்கும் ஏஜென்ட்கள் சுமார் 60 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதனால் தட்கல் டிக்கெட்கள் முன்பு போல நிமிடங்களில் தீர்ந்துவிடாது. பயணிகளுக்கு இந்த டிக்கெட்கள் சில மணிநேரங்கள் கூட இனி இருக்கும் என நம்பிக்கை தெரிவித்திருக்கிறார் ரயில்வே பாதுகாப்புப் படையின் (RPF) தலைமை இயக்குநரான அருண் குமார்.

ANMS, MAC, Jaguar போன்று கண்டறியப்பட்ட மென்பொருள்கள், IRCTC தளத்தில் லாகின் செய்யும்போது கேட்கும் captcha, முன்பதிவு செய்யும் முன் கேட்கும் captcha, OTP போன்றவற்றைக் கடந்துவிடும். ஆனால், சாதாரணமாக முன்பதிவு செய்பவர்கள் ஒவ்வொன்றாக டைப் செய்து அடுத்தகட்டத்துக்குச் செல்லவேண்டும்.

IRCTC Rail Connect
IRCTC Rail Connect
சாதாரண பயனாளருக்கு முன்பதிவு செய்ய சராசரியாக 2.55 நிமிடங்கள் ஆகிறதென்றால், இந்த மென்பொருள்கள் மூலம் 1.48 நிமிடங்களிலேயே முன்பதிவு செய்துவிட முடிகிறது.
Vikatan
50-100 கோடி ரூபாய்
ஒரு வருடத்தில் இந்த மோசடி மென்பொருள்களால் மட்டும் நடந்திருக்கும் வர்த்தகத்தின் மதிப்பு.

மேலும் பேசுகையில் ``இனி ஒரு தட்கல் டிக்கெட் கூட இது மாதிரியான சட்ட விரோத மென்பொருள்கள் மூலம் முன்பதிவு செய்யப்படாது. IRCTC தளத்தில் இருக்கும் குறைகளையும் கலைந்துள்ளோம். மோசடி செய்து வந்த முக்கிய முகவர்களையும் கைது செய்துள்ளோம்" எனத் தெரிவித்தார் அருண் குமார்.

அடுத்த கட்டுரைக்கு