Published:Updated:

`இனி ரயில் பயணங்களில் தடையில்லாத வீடியோ ஸ்ட்ரீமிங் வசதி!' - CoD சேவைக்குத் தயாராகும் இந்திய ரயில்வே

Railway
Railway

இந்தச் சேவையின் மூலம் நீங்கள் தடையில்லாமல் அந்தத் தளத்தில் உள்ள படங்கள் மற்றும் வீடியோக்களைக் காண முடியும்.

ரயில் பயணத்தின்போது பயணிகளுக்காக Content on Demand (CoD) சேவையை வழங்கப்போவதாக அறிவித்திருக்கிறது இந்திய ரயில்வே. ரயிலில் பயணம் செய்யும்போது சிக்னல் பிரச்னை காரணமாக நேரடியாக இணையத்தில் படங்கள் அல்லது வீடியோக்களை நம்மால் பார்க்க முடியாது. தற்போது Zee Entertainment-ன் Margo Netowork-உடன் இணைந்து CoD சேவையை உருவாக்கி வருகிறது இந்திய ரயில்வே.

cod
cod
Pixabay

இந்தச் சேவையை உருவாக்குவதற்காக Railtel, Margo netrwork மற்றும் Mini Ratna PSU ஆகியவற்றுடன் கைகோத்துள்ளது. இந்தச் சேவையின் மூலம் பயணிகள் தடையில்லாமல் அந்தத் தளத்தில் உள்ள படங்கள் மற்றும் வீடியோக்களைக் காண முடியும் எனத் தெரிவித்துள்ளது ரயில்வே நிர்வாகம்.

`Carbon Negative' திட்டத்தை நடைமுறைப்படுத்த உறுதியேற்ற மைக்ரோசாஃப்ட்!

இந்தச் சேவை 2022-ம் ஆண்டு பயன்பாட்டுக்கு வரும் எனத் தெரிகிறது. இதை நாடு முழுவதும் 8,731 ரயில்கள் மற்றும் வைஃபை வசதி உடைய 5,563 ரயில் நிலையங்களிலும் கொண்டு வரத் திட்டமிட்டுள்ளனர்.

railways
railways

இந்தச் சேவையை இலவசமாகவும் பயன்படுத்தலாம், பணம் செலுத்தியும் பயன்படுத்தலாம். மேலும், இந்தச் சேவையின் மூலம் விளம்பர வருமானத்தைப் பெறவும் திட்டமிட்டு வருகிறது ரயில்வே நிர்வாகம்.

`இனி அமெரிக்க GPS வேண்டாம்... இந்தியாவின் NavIC ரெடி!' இஸ்ரோ அதிரடி
அடுத்த கட்டுரைக்கு