Published:Updated:

`ஒரு நாளில் எத்தனை நிமிடங்கள் ஸ்ட்ரீமிங்கில் இந்தியர்கள் செலவு?!'- நோக்கியா சொல்லும் ரிப்போர்ட்

இணையம் | Internet
இணையம் | Internet

சராசரியாக ஒவ்வொரு இந்தியனும் மாதத்துக்கு 11 GB அளவிலான இணையத்தைப் பயன்படுத்துவதாக இந்த அறிக்கை தெரிவிக்கிறது.

ஜியோவின் என்ட்ரிக்குப் பிறகு இந்தியாவில் இணையம் மிகவும் மலிவான ஒரு விஷயமாக மாறியது. இது பல தொழில்துறை வளர்ச்சிகளுக்கு விதை போட்டிருக்கிறது. பல புதிய சேவைகள் இணையத்தை மையமாகக் கொண்டு இங்கு ஆரம்பிக்கப்பட்டன. பலவும் வெற்றியும் கண்டன. இன்று பல சேவைகளுக்காகவும் இணையத்தைப் பயன்படுத்துகிறோம்.

ஆனால், இந்த இணையப் பயன்பாடு எந்த அளவுக்கு அதிகரித்துள்ளது என்பதைக் காட்டும் விதமாக ஓர் ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது நோக்கியா. சராசரியாக ஒவ்வொரு இந்தியனும் மாதத்துக்கு 11 GB அளவிலான இணையத்தைப் பயன்படுத்துவதாக இந்த அறிக்கை தெரிவிக்கிறது.

Telecom
Telecom

நோக்கியாவின் இந்த வருடாந்திர MBiT (Mobile Broadband India Traffic Index) அறிக்கையில் `இந்தியாவில் அதிக 4G பயன்பாட்டால் ஒட்டுமொத்த மொபைல் போக்குவரத்து 2019-ல் 47 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. மேலும், இந்தியாவின் மொத்த இணையப் பயன்பாட்டில் 96% 4G சேவைதான் ஆக்கிரமித்துள்ளது. இதனால் 3G இணையச் சேவையின் பயன்பாடு 30% அளவுக்கு குறைந்துள்ளது' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது பற்றி நோக்கியா இந்தியாவின் முதன்மை மார்க்கெட்டிங் அதிகாரியான அமித் மார்வா கூறுகையில் ``ஒரு தனிநபரின் மாத சராசரி இணையப் பயன்பாடானது கடந்த டிசம்பர் மாதம் 11 GB-யை கடந்திருக்கிறது. இது கடந்த ஆண்டைவிட 16 சதவிகிதம் அதிகம். இதற்குக் காரணம் 4G இணைய வசதியின் மேம்பாடு, குறைந்த கட்டணத்தில் இணைய சேவை, மலிவான ஸ்மார்ட்போன்கள் மற்றும் வீடியோ மோகம் ஆகியவையே. மேலும், உலகிலேயே அதிகமாக இணையத்தைப் பயன்படுத்தும் நாடுகளில் சீனா, அமெரிக்கா, பிரான்ஸ், தென் கொரியா, ஜப்பான், ஜெர்மனி ஆகிய நாடுகளை இந்தியா பின்னுக்குத் தள்ளியுள்ளது" என்றார். இதோடு VoLTE மொபைல்போன்களின் பயன்பாடும் இந்தியாவில் 43.2 கோடியைத் தொட்டுள்ளது. பிராட்பேண்டு இணைய ஊடுருவல் இந்தியாவில் 47 சதவிகிதமாகவே உள்ளது. இது சீனா (95%) மற்றும் இதர ஐரோப்பிய நாடுகளை (95%) விட குறைந்ததே" என்றார்.

`ஆதார் எடுப்பதுதான் எங்கள் வேலையா?!'- செவிலியர்களைக் கொந்தளிக்க வைத்த அரசின் 2.0 இணைய வசதி

இன்று இணையப் பயன்பாடு என்பது நாம் இணையத்தில் பார்க்கும் வீடியோக்களின் தரத்தை வைத்துத்தான் நிர்ணயிக்கப்படுகிறது. பொதுவாக ஒரு GB டேட்டாவில் நம்மால் 200 பாடல்களைக் கேட்கவும், ஒரு மணி நேர வீடியோவை பார்க்கவும் முடியும். இன்று இந்தியாவில் இணையச் சேவையின் கட்டணமும் ஒரு GB-க்கு 7 ரூபாயாகதான் உள்ளது. உலகில் வேறு எங்கும் இதைவிடக் குறைந்த விலையில் இணையம் கிடைக்காது. இந்தியாவில் 4G இணைய சேவையின் வாடிக்கையாளர்கள் மட்டும் 59.8 கோடி பேர் இன்று இருக்கின்றனர். ஆனால், 3G சேவையைப் பயன்படுத்துபவர்கள் வெறும் 4.4 கோடி மக்கள் மட்டுமே. நெட்ஃபிளிக்ஸ், அமேசான், ஹாட்ஸ்டார் போன்ற ஓடிடி சேவைகள் பெருகி வருவதால் அதிகம் வீடியோ பார்க்கும் சமூகமாக இந்தியா மாறிவருகிறது. அதைதான் இந்த அறிக்கையும் எடுத்துச்சொல்கிறது. ஒரு நாளைக்குச் சராசரியாக ஸ்ட்ரீமிங்கில் மட்டும் சுமார் 70 நிமிடங்கள் கழிக்கிறான் ஒரு இந்தியன்.

ஸ்ட்ரீமிங்  தளங்கள்!
ஸ்ட்ரீமிங் தளங்கள்!

4K/8K வீடியோவெல்லாம் அதிகமாகிக்கொண்டிருக்கும் இந்த சூழலில் இணையப் பயன்பாடு இன்னும் பல மடங்கு உயரவே செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த கட்டுரைக்கு