Published:Updated:

`வெறுப்பு, அவதூறு பரப்ப முடியாது!'- `மஸ்டொடோன்' வலைதளத்துக்கு மாறும் இந்தியர்கள்

திடீரென அதிர்ஷ்டம் கதவைத் தட்டியதுபோல கடந்த சில நாள்களில் பல இந்திய வாடிக்கையாளர்களைப் பெறத்தொடங்கியிருக்கிறது இந்த `மஸ்டொடோன்'.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

கடந்த சில நாள்களாகவே இந்தியர்கள் பலரும் `இனி ட்விட்டரே வேண்டாம்' எனச் சொல்லி பெரிய பரிச்சயம் இல்லாத மற்றொரு சமூக வலைதளத்துக்கு மாறிவருகின்றனர். அதென்ன சமூக வலைதளம் என்று கேட்கிறீர்களா? அதன் பெயர் மஸ்டொடோன், ஜெர்மனியைச் சேர்ந்த யூகன் ரோஹ்கோ என்ற 26 வயது இளைஞரால் உருவாக்கப்பட்ட சமூகவலைதளம் இது. தொடங்கப்பட்டு இரண்டு வருடங்கள்தான் ஆகிறது என்பதால் இன்னும் பெருமளவில் பயன்பாட்டாளர்களைப் பெறவில்லை இந்த சமூகவலைதளம். ஆனால், திடீரென அதிர்ஷ்டம் கதவைத் தட்டியதுபோல கடந்த சில நாள்களில் பல இந்திய வாடிக்கையாளர்களைப் பெறத்தொடங்கியிருக்கிறது இந்த `மஸ்டொடோன்'.

மஸ்டொடோன் | mastodon
மஸ்டொடோன் | mastodon
மஸ்டொடோனின் பயோ
"The social network of the future: no ads, corporate surveillance, ethical design, and decentralisation! Own your data with Mastodon—Try it today for free.”

இதற்கு என்ன காரணம்?

இதற்கு முக்கிய காரணம் கடந்த சில நாள்களாக ட்விட்டரை சுற்றும் சர்ச்சைகள்தான். சமீபத்தில் சஞ்சய் ஹெக்டே என்ற உச்சநீதிமன்ற வழக்கறிஞரின் ட்விட்டர் அக்கவுன்ட் இடைநீக்கம் செய்யப்பட்டது. இவருடைய இரண்டு பதிவுகள் ரிப்போர்ட் செய்யப்பட்டதால் ட்விட்டர் இதைச் செய்திருக்கிறது. ``hateful or sensitive” என்று அதை வரையறுத்தது ட்விட்டர். ஆனால், அவை எதுவும் அப்படியாக அமையவில்லை. அதனால் இவருக்கு ஆதரவாகவும் ட்விட்டரின் நடவடிக்கைக்கு எதிராகவும் பலரும் குரல் கொடுக்கத்தொடங்கினர். இதன்பின், அவரது அக்கவுன்ட் மீண்டும் ஆக்டிவ்வானது. ஆனால், அடுத்த நாளே மீண்டும் அவரின் அக்கவுன்ட்டை இடைநீக்கம் செய்தது ட்விட்டர்.

சஞ்சய் ஹெக்டே
சஞ்சய் ஹெக்டே
Bar & Bench

மேலும், மக்களின் அக்கவுன்ட்களை வெரிஃபை செய்து ப்ளூ டிக் கொடுக்கும் ப்ராசஸில் பாரபட்சம் பார்க்கப்படுகிறது என்றும் பட்டியலின மக்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்களின் பதிவுகள் நீக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் ட்விட்டர் மேல் எழுந்துள்ளன. இதன்பின் சஞ்சய் ஹெக்டே, `ட்விட்டரில் கருத்து சுதந்திரம் முடக்கப்படுகிறது. நான் மஸ்டொடோன் தளத்துக்கு மாறப்போகிறேன்' என்று கூறினார். ட்விட்டர்போல அல்லாமல் இந்தத் தளம் மிகவும் பாதுகாப்பானது என்றும் தெரிவித்தார் அவர். ட்விட்டரின் எந்த பாலிசியையும் தான் மீறவில்லை என சட்டபூர்வமாக நோட்டீஸ் ஒன்றையும் ட்விட்டருக்கு அனுப்பியுள்ளார் சஞ்சய். இதற்குப்பின்தான் ட்விட்டரை எதிர்த்து பலரும் மஸ்டொடோன் தளத்துக்கு மாறிவருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

`ப்ளூ டிக் வழங்குவதில் சாதிய பாகுபாடு; கொந்தளித்த நெட்டிசன்கள்!’ - என்ன சொல்கிறது ட்விட்டர்?

மஸ்டொடோன், அதன் பயன்பாட்டாளர்களை ஏற்கெனவே இருக்கும் கம்யூனிட்டிகளில் நேரடியாக சர்வர் மூலம் சேர வழிகள் அமைத்துத் தருகிறது. வேண்டுமென்றால் நாமே ஒரு புதிய கம்யூனிட்டியை இதில் உருவாக்கமுடியும். நாம் தேர்ந்தெடுக்கும் சர்வரில் சேர்ந்தவுடன் நமக்கென்று ஒரு username தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். இதிலும் ட்விட்டரைபோல ஒரு பதிவுக்கு இத்தனை வார்த்தைகள்தான் என்ற வரம்பு உண்டு. ஆனால், ட்விட்டரைப்போல அல்லாமல் (280 கேரக்டர்கள்) இதில் லிமிட் 500 கேரக்டர்களாக நியமிக்கப்பட்டுள்ளது. ட்விட்டரில் யார் எதற்கு வேண்டுமானாலும் கருத்து சொல்லலாம் என்பதால் நிறையவே தேவையற்ற வெறுப்பு மற்றும் அவதூறு பரப்பும் பதிவுகள் பலவும் பதிவாகிவந்தன. ஆனால், மஸ்டொடோனில் நிலை அப்படி இருக்காதாம்.

அரசியல் விளம்பரங்கள் குறித்து முரண்படும் ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர்... எது சரி? #LongRead

பொதுமக்கள் மட்டுமல்லாமல் பிரபலங்கள் பலரும் கூட `மஸ்டொடோன்' தளத்தில் அக்கவுன்ட் தொடங்கியுள்ளனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு