Published:Updated:

`தொழில்நுட்பக் கோளாறு தான் காரணம், அதைச் சரிசெய்துவிட்டோம்'- விளக்கமளித்த இன்ஸ்டாகிராம் நிறுவனம்!

இன்ஸ்டாகிராம்

தொழில்நுட்பக்கோளாறை சரிசெய்துவிட்டோம் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

`தொழில்நுட்பக் கோளாறு தான் காரணம், அதைச் சரிசெய்துவிட்டோம்'- விளக்கமளித்த இன்ஸ்டாகிராம் நிறுவனம்!

தொழில்நுட்பக்கோளாறை சரிசெய்துவிட்டோம் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

Published:Updated:
இன்ஸ்டாகிராம்
மெட்டா நிறுவனத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வரும் இன்ஸ்டாகிராம், உலக நாடுகளில் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு பிரபலமான சமூக வலைதளம். இந்தியாவில் பெருமளவில் இஸ்டாகிராம் பயன்பாட்டாளர்கள் இருக்கிறார்கள்.

இந்நிலையில் நேற்று (31.10.2022) திடீரென இன்ஸ்டாகிராம் சேவை முடங்கியது. இதனால் அதனைப் பயன்படுத்த முடியவில்லை எனப் பயனாளர்கள் பிற சமூக வலைதளங்களில் புகார் தெரிவித்தனர். இன்ஸ்டாகிராம் பயனர்கள், தங்களது கணக்குகள் தற்காலிகமாக சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளதாகவும், சிலர் தங்களது கணக்குகளில் பாலோவர்ஸ் எண்ணிக்கை குறைந்து வருவதாகவும் தெரிவித்திருந்தனர்.

இதனால் 'இன்ஸ்டாகிராம் ஷட் டவுன்' என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகிய நிலையில் இன்ஸ்டாகிராம் நிறுவனம் தற்போது வருத்தம் தெரிவித்துள்ளது. இன்ஸ்டாகிராம் வெளியிட்ட பதிவில், 'உங்களில் சிலருக்கு உங்கள் இன்ஸ்டாகிராம் கணக்கை அணுகுவதில் சிக்கல் இருப்பதை நாங்கள் அறிவோம். நாங்கள் அதை ஆராய்ந்து வருகிறோம், சிரமத்திற்கு வருந்துகிறோம்' சில இன்ஸ்டாகிராம் கணக்குகளில் தங்களை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை தற்காலிகமாக மாறுதல் அடைந்திருக்கலாம். தொழில்நுட்பக் கோளாறுதான் இதற்குக் காரணம். நாங்கள் அதை சரிசெய்துவிட்டோம்' என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

சமீபத்தில் மெட்டாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் வாட்ஸ் அப்பும் உலக அளவில் முடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.