Published:Updated:

`Insta Reels ' பார்க்க இனி கட்டணமா? அறிமுகமாகுமா புதிய திட்டம்!

Instagram ( Photo by Brett Jordan from Pexels )

இன்ஸ்டாகிராம் புதிதாக கிரியேட்டர்களுக்கான பிரத்யேக சந்தா சேவையை சோதித்து வருகின்றனர்.

`Insta Reels ' பார்க்க இனி கட்டணமா? அறிமுகமாகுமா புதிய திட்டம்!

இன்ஸ்டாகிராம் புதிதாக கிரியேட்டர்களுக்கான பிரத்யேக சந்தா சேவையை சோதித்து வருகின்றனர்.

Published:Updated:
Instagram ( Photo by Brett Jordan from Pexels )

மெட்டா குழுமத்தைச் சேர்ந்த இன்ஸ்டாகிராம் கிரியேட்டர்களுக்கு வருமானம் கிடைக்கும் வகையில், பார்வையாளர்கள் சந்தா செலுத்தி பார்க்கும் வசதியை அறிமுகப்படுத்தஉள்ளது. முதற்கட்டமாக இதை சோதிக்க அமெரிக்காவின் பிரபலமான 10 கிரியேட்டர்களுக்கு இந்த தேர்வு வழங்கப்பட்டு உள்ளது. இதில் பேஸ்கட் பால் பிளேயர் செடோனா பிரின்ஸ், மாடல் க்ளேஷி குக், நடிகர் ஆலன் சிக்கின் ஷா உள்ளிட்டோர் அடக்கம்.

இன்ஸ்டா அறிமுகப்படுத்த இருக்கும் புதிய சேவை
இன்ஸ்டா அறிமுகப்படுத்த இருக்கும் புதிய சேவை
instagram blog

"இந்த சேவை மூலமாக கிரியேட்டர்கள் தங்கள் பார்வையாளர்களுடன் நெருக்கமான தொடர்பில் இருக்க முடியும். ஏற்கனவே இயங்கும் தளத்தில் சந்தாதாரர்களுக்கு பிரத்யேக வீடியோக்கள் வழங்குவதன் வழியாக கிரியேட்டர்கள் தங்கள் வருவாயை அதிகரித்துக் கொள்ளஇயலும்" என்று இன்ஸ்டாகிராம் குறிப்பிடுகிறது. புரொபைல் பக்கத்தில் இருக்கும் சப்ஸ்கிரைப் என்ற ஆப்ஷனை க்ளிக் செய்வதன் மூலம் பயனர்கள் இதில் இணைய முடியும். கிரியேட்டர்கள் தங்களது பதிவில் வரும் கமென்ட், தனிச்செய்திகள் போன்றவற்றில் சந்தாதாரர்களைத் தனித்து கண்டுகொள்ள முடியும். இது இருவருக்குமான தொடர்பை வலுப்படுத்தும் என இன்ஸ்டாகிராம் தெரிவிக்கிறது. இதற்கான மாத சந்தா மாதம் 0.99 டாலர் (ரூ.89) ஆக இருக்கலாம். ஏற்கெனவே ட்விட்டரில் இருக்கும் ட்விட்டர் ப்ளூ சேவையைப் போலவே இன்ஸ்டாவின் இந்த புதிய அப்டேடும் இருப்பதாக நெட்டிசன்கள் கருதுகின்றனர். இதுவரை சந்தா சேவையில் இணையாமல் இருந்த பேஸ்புக் குழும ஆப்களில் இன்ஸ்டா இந்த அப்டேட் தரவிருக்கிறது. இது மட்டுமில்லாது இன்ஸ்டா ஸ்டோரிகளை வெர்டிகல் மோடில் பார்க்கும் வசதியும் சோதனையில் உள்ளது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism