Published:Updated:

`அரசாங்கத்தின் அறிவுறுத்தல்!- தலைநகர் டெல்லியில் இணைய சேவை முடக்கம்!

CAB
CAB

2018-ம் ஆண்டில் உலகம் முழுவதும் 196 உத்தரவுகள் இணையத்தை முடக்குவதற்காகப் போடப்பட்டுள்ளன. அவற்றில் 134 உத்தரவுகள் இந்தியாவில் போடப்பட்டவை.

எங்கெல்லாம் போராட்டம் வெடிக்கிறதோ அங்கெல்லாம் இணையத்தை முடக்குவதை வழக்கமாக்கி வருகிறது மத்திய அரசு. உத்தரப்பிரதேசம், அஸ்ஸாம், மேற்கு வங்கத்தைத் தொடர்ந்து தற்போது நாட்டின் தலைநகரான டெல்லியிலும் பல இடங்களில் இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது.

இணைய சேவை முடக்கம்
இணைய சேவை முடக்கம்

குடியுரிமைச் சட்டம் அமல்படுத்தப்பட்டதிலிருந்தே, அதற்கு எதிராக நாட்டின் பல இடங்களிலும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. டெல்லியின் ஜாமியா பல்கலைக்கழகத்திலும் போராட்டம் நடைபெற்று அதைக் கலைப்பதற்காக போலீஸாரால் தடியடி நடத்தப்பட்டது. இதன் விளைவாக மாணவர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்தும் குடியுரிமைச் சட்டத்தை ரத்து செய்யக் கோரியும் நாடு முழுவதும் பல இடங்களில் மாணவர்கள் போராடத் தொடங்கினர்.

Jamia protest... Who is the man wearing a red T-Shirt? #CAA

போராட்டத்தைத் தடுக்க இணைய சேவையை பல இடங்களில் முடக்கியுள்ள மத்திய அரசு தற்போது டெல்லியில் ஜாமியா, ஷாஹீன் பாக், பவானா, சீலாம்பூர், ஜாஃப்ராபாத், மண்டி ஹவுஸ் மற்றும் வால்ஃட் சிட்டியின் சில இடங்களிலும் இணைய சேவையை முடக்கியுள்ளது. ட்விட்டரில் பயன்பாட்டாளர் ஒருவர் ஏன் இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது என்று ஏர்டெல் நிறுவனத்திடம் கேள்வி எழுப்பினார்.

அதற்கு ட்விட்டரில் பதில் அளித்துள்ள ஏர்டெல் நிறுவனம், அரசாங்க அறிவுறுத்தலின்படி டெல்லியில் சில இடங்களில் முடக்கியுள்ளோம். அந்த உத்தரவுகளை அரசு திரும்பப் பெற்ற பின் சேவைகள் பழையபடி இயங்கும் எனத் தெரிவித்துள்ளது. அரசால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்பதை ஜியோ மற்றும் வோடஃபோனும் உறுதிபடுத்தியுள்ளன.

2018-ம் ஆண்டில் உலகம் முழுவதும் 196 உத்தரவுகள் இணையத்தை முடக்குவதற்காகப் போடப்பட்டுள்ளன. அவற்றில் 134 உத்தரவுகள் இந்தியாவில் போடப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது, சுமார் மூன்றில் இரண்டு மடங்கு உத்தரவுகள் இந்தியாவில் போடப்பட்டவை.

அடுத்த கட்டுரைக்கு