Published:Updated:

`இரான் சைபர் போர் தொடுக்கும் அபாயம்..!’ - உஷார் நிலையில் அமெரிக்கா

Trump
Trump

ஏற்கெனவே இருந்த இந்தப் பிரச்னைகளுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க அன்று அதிகாரத்தில் இருந்த ஒபாமா அரசு, இரானுடன் 2015-ம் ஆண்டு `அணு ஒப்பந்தம்' செய்துகொண்டது.

இரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையேயான மோதல் கடந்த சில வாரங்களாகவே உச்சத்தில் இருந்து வருகிறது. இரானின் ராணுவத் தளபதி கொல்லப்பட்டது அந்நாட்டுக்குப் பெரும் இழப்பாகக் கருதப்படுகிறது. போர் மூளும் அபாயம் நாளுக்குநாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.

Cyber attack
Cyber attack

இந்நிலையில் இரான் பதிலடியாக இணையத் தாக்குதலை (Cyber Attack) நிகழ்த்தலாம் என வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

`ஒருவருக்கு ஈடாக 52 இடங்கள் குறிவைக்கப்படும்!’- இரானைக் கடுமையாக எச்சரிக்கும் ட்ரம்ப்

2012-ம் ஆண்டிலேயே இரானுடனான மோதலில் அமெரிக்காவின் பல வங்கிகள் மற்றும் நிறுவனங்கள் இரான் ஹேக்கர்களால் சைபர் தாக்குதலுக்குள்ளாகின. பல சைபர் தாக்குதல்கள் அடுத்தடுத்த ஆண்டுகளிலும் தொடர்ந்தன. இறுதியாக அன்று அதிகாரத்தில் இருந்த ஒபாமா அரசு, இரானுடன் 2015-ம் ஆண்டு `அணு ஒப்பந்தம்' செய்துகொண்டது. அதன் பிறகு அமெரிக்கா அல்லது அமெரிக்க நிறுவனங்கள் மீது இரான் சைபர் தாக்குதல்களை நிகழ்த்தவில்லை.

காசிம் சுலைமானி
காசிம் சுலைமானி

``தற்போது ட்ரம்ப் எடுத்திருக்கும் இந்த முடிவால் நிலைமை இந்த ஒப்பந்தத்திற்கு முன் இருந்ததைப் போல ஆகிவிடுமோ என்ற கவலை எங்களைத் தொற்றியுள்ளது" என அமெரிக்கத் தொழில்நுட்ப வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே, அமெரிக்காவின் பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் இணையப் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும், `எந்த வகையில் எல்லாம் ஹேக்கர்கள் தாக்கலாம், அவற்றை எப்படித் தடுப்பது?' என்பது குறித்து ஆலோசித்து வருகின்றனர்.

`கரு நிறமாக மாறிய தெஹ்ரான்; கதறி அழுத மூத்த தலைவர்!' - மக்கள் வெள்ளத்தில் மிதந்த சுலைமானி உடல்
அடுத்த கட்டுரைக்கு