Published:Updated:

இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப்போடு தன் பெயரையும் சேர்க்கும் ஃபேஸ்புக் - என்ன காரணம்?

கார்க்கிபவா

ஃபேஸ்புக்கின் சேவைகள் மற்றும் தயாரிப்புகள் பற்றி எங்கள் வாடிக்கையாளர்களுக்குத் தெளிவுபடுத்த விரும்புகிறோம். அதற்காகத்தான் இந்த முன்னெடுப்பு என்கிறது ஃபேஸ்புக்

Facebook
Facebook ( Pixabay )

ஃபேஸ்புக்தான் உலகில் அதிகமானோர் பயன்படுத்தும் சமூக வலைதளம். ஃபேஸ்புக்குக்குச் சொந்தமான இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப்பையும் 100 கோடிக்கும் அதிகமானோர் பயன்படுத்துகிறார்கள்.

வாட்ஸ்அப்
வாட்ஸ்அப்

இரண்டு செயலிகளுமே வெவ்வேறு ஸ்டார்ட்அப் ஆர்வலர்களால் தொடங்கப்பட்டு பின்னர் ஃபேஸ்புக்கால் வாங்கப்பட்டன. இன்று பலருக்கும் இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப் ஆகியவை ஃபேஸ்புக்குக்குச் சொந்தமானவை என்பது தெரியாது.

இப்போது சிலரின் இன்ஸ்டாகிராம் கணக்கில், செட்டிங்க்ஸ் பக்கத்தில் "Instagram from Facebook" என்று சேர்க்கப்பட்டிருக்கிறது. போலவே, விரைவில் வாட்ஸ் அப்பிலும் இதைச் சேர்ப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இது பற்றி ராய்டர்ஸ் நிறுவனத்திடம் பேசிய ஃபேஸ்புக் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் "ஃபேஸ்புக்கின் சேவைகள் மற்றும் தயாரிப்புகள் பற்றி எங்கள் வாடிக்கையாளர்களுக்குத் தெளிவுபடுத்த விரும்புகிறோம். அதற்காகத்தான் இந்த முன்னெடுப்பு" எனச் சொல்லியிருக்கிறார்.

இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப்போடு தன் பெயரையும் சேர்க்கும் ஃபேஸ்புக் - என்ன காரணம்?

உலகம் முழுவதும் பல நாடுகளில் ஃபேஸ்புக் கடுமையான சோதனைகளைச் சந்தித்து வருகிறது. பயனர்களின் தகவல்களை ஃபேஸ்புக் யாரோடு பகிர்ந்துகொள்கிறது, என்ன செய்கிறது என்பதை பல நாடுகளும் கேட்டு வருகின்றன. அதனால், பிரைவஸி விஷயத்தில் பல முக்கியமான மாற்றங்களையும் பாதுகாப்பு விஷயங்களையும் ஃபேஸ்புக் சேர்த்து வருவது குறிப்பிடத்தக்கது.