Published:Updated:

சந்திரயான் -2: `திட்டப்படியே நடக்கும் மேப்பிங் பணிகள்’ - ஓராண்டு மகிழ்ச்சியில் இஸ்ரோ

சந்திரயான்-2
சந்திரயான்-2

நிலவின் மேற்பரப்பு மற்றும் துருவப் பகுதியில் மேற்கொள்ள வேண்டிய மேப்பிங் திட்டப்படியே நடந்து வருகிறது என இஸ்ரோ கூறியுள்ளது.

இந்திய விண்வெளி மையமான இஸ்ரோ வரும் அக்டோபர் முதல் சந்திரயான்-2 அளிக்கும் அறிவியல் தரவுகள் உலகின் பயன்பாட்டிற்காக வெளியிடப்படும் என்று அறிவித்துள்ளது. இந்தியாவின் இரண்டாவது நிலவு திட்டமான சந்திரயான்-2 GSLV-MKIII-MK1 மூலம் செலுத்தப்பட்டு ஒரு வருடம் ஆகிவிட்டதாக இந்திய விண்வெளி ஆய்வு மையம் இஸ்ரோ தெரிவித்துள்ளது.

சந்திரயான் 2
சந்திரயான் 2

ஜுலை 22, 2019 அன்று இந்திய விண்வெளித்துறையின் பாகுபலி என்றழைக்கப்படும் அந்த GSLV ராக்கெட், ஆந்திராவின் ஶ்ரீஹரிக்கோட்டாவிலுள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருத்து புறப்பட்டது. 23 நாள்கள் பூமியின் சுற்றுப்பாதையில் சுற்றிவந்தப் பிறகு, நிலவை நோக்கி அதன் பயணத்தை ஆகஸ்ட் 14 அன்று துவங்கியது. சந்திரயான்-2 விண்வெளிகலம் கடந்த ஆகஸ்ட், 20 2019 அன்று நிலவின் சுற்றுப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டது. சந்திரயான்-2வில் இருந்த பேலோடுகள் துருவப் பகுதியில் இருக்கும் நீர், பரப்பு எல்லையில் உள்ள ஆர்கன்-60 எனும் வாயு பற்றிய தகவல்களை அளிக்கிறது என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

`சந்திரயான் 2' தரையிறங்கும் முன்பு சைபர் தாக்குதலா?- எச்சரித்த சைபர் ஒருங்கிணைப்பு மையம்!

சந்திரயான்-2 மூலம் நடத்தப்பட்ட அறிவியல் பரிசோதனைகள் அளித்த கண்டுபிடிப்புகளின் அறிக்கையை கடந்த மார்ச் மாதம் நடக்கவிருந்த Annual Lunar Planetary Science Conference-ல் வெளியிட திட்டமிட்டிருந்தனர். ஆனால், அது கோவிட்-19 பாதிப்பால் ரத்துசெய்யப்பட்டது. இந்த ஒரு வருடத்தை எட்டுவதற்கு முன்னால் இஸ்ரோ, சந்திரயான்-2வில் உள்ள எட்டு பேலோடுகளும் நன்றாக செயல்பட்டு வருவதாக அறிவித்தது. நிலவின் மேற்பரப்பு மற்றும் துருவப் பகுதியில் மேற்கொள்ள வேண்டிய மேப்பிங் திட்டப்படியே நடந்து வருகிறது என இஸ்ரோ கூறியுள்ளது.

சந்திரயான் -2
சந்திரயான் -2

சந்திரயான்-2 அதன் Orbiter High Resolution Camera (OHRC) மூலம் நிலவின் பரப்பை காண்பிக்கும் 22 படங்களை அளித்துள்ளது. அப்படங்கள் 1,056 sq.km பரப்பளவை உட்கொள்ளும். இது நிலவின் பரப்பில் வருங்கால திட்டதிற்கான இடங்களை தேர்வுசெய்ய உதவுகிறது. இஸ்ரோவின் சந்திரயான்-2 அதன் குறிக்கோள்களில் 98% வெற்றிகரமாக முடித்துவிட்டது.

அடுத்த கட்டுரைக்கு