Published:Updated:

நகரமா, கிராமமா... டிஜிட்டல் பரிச்சியம் எங்கு அதிகம்? மத்திய அமைச்சகம் தகவல்!

Students Learning through Computer
Students Learning through Computer

டிஜிட்டல் செயல்பாடுகள் குறித்த விழிப்புணர்வு மக்களிடம் உள்ளதா என்பதை அறியவும் டிஜிட்டல் மாற்றத்தை மக்களுக்குப் புரிய வைக்கவும் என்ன விதமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

வணிகம் முதல் மருத்துவம் வரை டிஜிட்டலுக்கு மாற்றம் அடைந்து கொண்டு இருக்கும் இந்த நேரத்தில் டிஜிட்டல் குறித்த கல்வியறிவு (Digital Literacy) மக்களுக்கு எந்த அளவு உள்ளது என்ற கேள்வியும் எழுகிறது. மத்திய மற்றும் மாநில அரசுகள் பல விதமான திட்டங்களையும், தினசரி அரசு அலுவலகப் பணிகளையும் டிஜிட்டலுக்கு மாற்றியுள்ளன. ஆனால், அதுகுறித்த விழிப்புணர்வு மக்களிடம் உள்ளதா என்பதை அறியவும், டிஜிட்டல் மாற்றத்தை மக்களுக்குப் புரிய வைக்கவும் என்ன விதமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்பது குறித்து, மக்களவையில் அமைச்சர் ராம் மோகன் நாயுடு கின்ஜரப்பா கேள்வியெழுப்பியிருந்தார். அதற்குக் கடந்த புதன் அன்று மின்சாதன மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் பதிலளித்துள்ளது.

டிஜிட்டல் கல்வியறிவு
டிஜிட்டல் கல்வியறிவு
நம் டிஜிட்டல் வாழ்க்கைக்கும் `உயில்' அவசியம்! எழுதுவது எப்படி?

டிஜிட்டல் கல்வியறிவை எதன் அடிப்படையில் மதிப்பிடுகிறார்கள் என்ற தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகத்தின் பதில் பின்வருமாறு,

`டிஜிட்டல் சாதனங்களின் அடிப்படையைத் தெரிந்து வைத்திருத்தல் மற்றும் அதைத் தினசரி வேலைகளில் தேவையை உணர்ந்து பயன்படுத்துதல், இணையப் பயன்பாடு, தினசரி வேலைகளின் டிஜிட்டலின் பயன்பாடு உதவிகரமாக இருக்கிறதா என்பது குறித்த புரிதலைப் பார்ப்போம். அதோடு, டிஜிட்டல் சாதனங்களைத் திறம்படப் பயன்படுத்தத் தெரிந்திருத்தல் மற்றும் பணப் பரிவர்த்தனைகளுக்கு ஆன்லைன் அல்லது டிஜிட்டல் சேவைகளைப் பயன்படுத்துதல் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு ஒரு சாமானியர் டிஜிட்டல் அறிவு பெற்றவரா இல்லையா என்பதை அளவிடுகிறோம்' எனப் பதிலளித்திருக்கிறது.

Students Learning Digitally
Students Learning Digitally
பிட்காய்ன்களைப் பயன்படுத்தலாமா? உச்சநீதிமன்றத் தீர்ப்பு சொல்வது என்ன? #bitcoin

மேலும், `2014-ல் எந்தளவு மக்கள் டிஜிட்டல் செயல்பாடுகள் பற்றிய விழிப்புணர்வைப் பெற்றிருக்கிறார்கள் என்ற நடத்தப்பட்ட சர்வேயில் கிடைத்த தகவல்களையும் அந்த அமைச்சகம் பதிலில் தெரிவித்திருக்கிறது. அந்தப் பதிலின்படி நகர்ப்புறத்தில் 29 சதவிகித வீடுகளில் கணினி வசதி உள்ளது. ஆனால், கிராமப்புறத்தில் 6 சதவிகித வீடுகளில் மட்டுமே கணினி வசதி உள்ளது.

நகரப்புறத்தில் 14 - 29 வயது வரை உள்ளவர்களில் 48.9 சதவிகிதம் பேருக்கு கணினியை இயக்கத் தெரிந்திருக்கிறது. 30 - 45 வயது வரை உள்ளவர்களில் 24.3 சதவிகிதம் பேருக்கும், 46 - 60 வயது உள்ளவர்களில் 14.8 சதவிகிதம் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் 6.8 சதவிகிதம் பேருக்கும்தான் கணினியை இயக்கத் தெரிந்திருக்கிறது.

Digital Literacy
Digital Literacy

இதுவே கிராமப்புறங்களில் இந்த அளவு வெகுவாகக் குறைந்து 14 - 29 வயது வரை உள்ளவர்களில் 18.3 சதவிகிதம் பேருக்குத்தான் கணினியை இயக்கத் தெரிந்திருக்கிறது. 29 வயதுக்கு மேற்பட்டவர்களில் கணினியை இயக்கத் தெரிந்தவர்கள் 5 சதவிகிதத்துக்கும் கீழ் உள்ளனர்' எனப் பதிலளித்திருக்கிறது தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம்.

இந்த சர்வே நடத்திய பிறகு, டிஜிட்டல் குறித்த விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்த 2014 - 2016-ம் ஆண்டுக்குள் 'National Digial Literary Mission' (NDLM) மற்றும் 'Digital Saksharta Abhiyan' (DISHA) என்ற இரண்டு திட்டங்களை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. அதன் பிறகு கிராமப்புறங்களில் அதிக விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என 2017-ம் ஆண்டு `பிரதான் மந்திரி கிராமின் டிஜிட்டல் சாக்ஷார்த்த அபியான்' என்ற திட்டத்தையும் முன்னெடுத்தது மத்திய அரசு. தற்போது டிஜிட்டல் குறித்த விழிப்புணர்வு பெற்ற மக்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த கட்டுரைக்கு