Published:Updated:

`222... 333... 444... 555...!’ - ஜியோவின் புதிய IUC பிளான்கள்! #JioPlans

டெலிகாம் நிறுவனங்களுக்கிடையே பரிமாற்றப்பட்டு வந்த Interconnect usage charge எனப்படும் IUC தொகையை (நிமிடத்துக்கு 6 பைசா) வாடிக்கையாளரிடம் இருந்தே பெறச் சமீபத்தில் முடிவெடுத்திருந்தது ஜியோ நிறுவனம்.

ஜியோவின் புதிய IUC பிளான்கள்!
ஜியோவின் புதிய IUC பிளான்கள்!

டெலிகாம் வட்டத்தில் சமீபத்தில் பெரும் பேசுபொருளாக இருப்பது, இனி வாய்ஸ் அழைப்புகளுக்கென்று கட்டணமே கிடையாது என்று அறிவித்து தற்போது மற்ற நிறுவன அழைப்புகளுக்குக் கட்டணம் வசூலிப்போம் என்று ஜியோ பல்டி அடித்திருப்பதுதான். டெலிகாம் நிறுவனங்களுக்கிடையே பரிமாற்றப்பட்டு வந்த Interconnect usage charge எனப்படும் IUC தொகையை (நிமிடத்திற்கு 6 பைசா) வாடிக்கையாளரிடம் இருந்தே பெறச் சமீபத்தில் முடிவெடுத்திருந்தது அந்த நிறுவனம். இந்த கட்டணத்தைச் செலுத்த ரூபாய் 10, 20, 50, 100 என்ற தொகைகளில் சிறப்பு பேக்குகளையும் அப்போது அறிமுகப்படுத்தியது.

IUC விவகாரம் குறித்து விரிவாகத் தெரிந்துகொள்ள கீழ்க்காணும் கட்டுரையைப் படியுங்கள்.

நிமிடத்துக்கு 6 பைசா.. ஏர்டெல், வோடஃபோன் அழைப்புகளுக்குக் கட்டணம் விதித்த ஜியோ!

இப்போது தனியாக மட்டுமில்லாமல் பொதுவான டேட்டா பேக்குகளுடன் இந்த கட்டணத்தை இணைக்கும் வண்ணம் புதிய பேக்குகளை அறிவித்திருக்கிறது ஜியோ. அவற்றின் விவரங்கள் கீழே...

ஜியோவின் புதிய IUC பிளான்கள்!
ஜியோவின் புதிய IUC பிளான்கள்!

ரூபாய் 222- 28 நாள்கள்- தினமும் 2GB டேட்டா, அன்லிமிடெட் ஜியோ அழைப்புகள், 1000 IUC நிமிடங்கள் (பிற நிறுவன அழைப்புகள்)

ரூபாய் 333- 56 நாள்கள்- தினமும் 2GB டேட்டா, அன்லிமிடெட் ஜியோ அழைப்புகள், 1000 IUC நிமிடங்கள் (பிற நிறுவன அழைப்புகள்)

ரூபாய் 444- 84 நாள்கள்- தினமும் 2GB டேட்டா, அன்லிமிடெட் ஜியோ அழைப்புகள், 1000 IUC நிமிடங்கள் (பிற நிறுவன அழைப்புகள்)

ரூபாய் 555- 84 நாள்கள்- தினமும் 2GB டேட்டா, அன்லிமிடெட் ஜியோ அழைப்புகள், 3000 IUC நிமிடங்கள் (பிற நிறுவன அழைப்புகள்)

இது மற்ற நிறுவனங்களின் திட்டங்களைவிட விலை குறைவுதான் என்றும் இதனால் இது பெரிய சுமையாக இருக்காதென்றும் கூறுகிறது ஜியோ. இதுவரை அழைப்புகளுக்குத் தனியாகக் கட்டணம் செலுத்தாத ஜியோவின் வாடிக்கையாளர்கள் இந்த புதிய மாற்றங்களை எப்படி எடுத்துக்கொள்ளப்போகிறார்கள் என்பது விரைவில் தெரியவரும்.