Published:Updated:

`My Jio செயலியிலேயே UPI சேவை!’ - ஆயத்தமாகும் ஜியோ? #Jio

Jio
Jio

National payments corporation of India-வின் தரவுப்படி கடந்த டிசம்பர் மாதத்தில் மட்டும் 1.3 பில்லியனுக்கும் அதிகமான பணப்பரிவர்த்தனைகள் இந்தியாவில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கூகுள் பே, ஃபோன் பே போலவே UPI வசதிகளை My Jio செயலியில் ஜியோ நிறுவனம் கொண்டு வரவிருக்கிறது. 36.9 கோடி பயனர்களுடன் தற்போது ஜியோதான் இந்தியாவில் டெலிகாம் நிறுவனங்களுள் முதல் இடத்தில் உள்ளது. ஜியோ சாவன், ஜியோ சினிமாஸ், ஜியோ என்கேஜ் எனப் பல வகைகளிலும் சேவை வழங்கி வந்த ஜியோ தற்போது UPI சேவையையும் வழங்க முன் வந்துள்ளது.

upi
upi
`தனி நிறுவனமாகும் போகோ' - இனி ஷாவ்மி நிறுவனத்திலிருந்து தனித்து இயங்கும்!

அனைத்து ஜியோ பயனர்களுக்கும் இந்தச் சேவை தற்போது கொடுக்கப்படவில்லை. குறிப்பிட்ட பயனர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டு வருகிறது. கூடிய விரைவில் அனைத்து பயனர்களுக்கும் இந்த வசதி விரிவுபடுத்தப்படுமா, இந்த சேவையைப் பயன்படுத்துவதற்கு ஏதேனும் வரையரை உள்ளதா என நிறுவனத் தரப்பிலிருந்து இன்னும் தெரிவிக்கப்படவில்லை.

NPCI UPI
NPCI UPI

மற்ற UPI செயலிகளில் பின்பற்றப்படுகிற நடைமுறைதான் ஜியோவின் சேவையிலும் பின்பற்றப்படுகிறது. பெரிய மாற்றங்கள் எதுவும் இல்லை. ஆனால், UPI-க்கு எனத் தனி செயலியை அறிமுகப்படுத்தாமல் ஏற்கெனவே பயன்பாட்டில் இருக்கும் My Jio செயலியிலேயே இந்தச் சேவையைக் கொண்டு வருவதால் இது அதிக பயனர்கள் பயன்படுத்தும் சேவையாக மாறவும் வாய்ப்புகள் உண்டு. மேலும், இந்தச் செயலியைப் பற்றிய தகவல்கள், ஜியோ நிறுவனம் அறிவிப்பு வெளியிட்ட பின்னரே தெரியவரும்.

National payments corporation of India-வின் தரவுப்படி கடந்த டிசம்பர் மாதத்தில் மட்டும் 1.3 பில்லியனுக்கும் அதிகமான பணப்பரிவர்த்தனைகள் இந்தியாவில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அடுத்த கட்டுரைக்கு